Top

மதுபானம் அருந்துவதில் டேனிஸ் யுவதிகள் முன்னணியில் புதிய ஆய்வுகள்.

August 25, 2008

visky.jpg 

டென்மார்க் 26.08.08 செவ்வாய் அதிகாலை

 டென்மார்க்கில் உள்ள இளம் பெண்களிடையே மதுபானத்தை அருந்தும் பழக்கம் முன்னெப்போதும் இல்லாதளவிற்கு அதிகரித்து செல்வதாக புதிய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இளம் பெண்கள் 12 – 13 வயதிலேயே மதுபானம் அருந்த ஆரம்பித்துவிடுவதால் பலர் வைத்தியசாலைகளில் வந்து சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பெண்களின் மதுபான வயது 45 ஆக இருந்தது. இப்போது அதிகமான இளம் பெண்கள் குடி போதையில் விழுந்துள்ளதால் இந்த வயதெல்லை 35 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. மதுப்பழக்கத்தில் வீழ்ந்தால் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளே அதன் அடிமைகளாக மாறிவிடுவதாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது. 15 வயதுக்குட்பட்ட பெண்களில் 49 வீதமானவர்கள் மதுபானத்தை பாவிப்பதாகவும், அவர்கள் தினசரி 5 – 7 பியர்கள் வரை குடிப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை 15 வயது ஆண் பிள்ளைகள எடுத்துக் கொண்டால் அவர்களில் 47 வீதமே மதுப்பிரியர்களாக இருக்கிறார்கள்.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom