Top

ஆப்கான் போர்க்களத்தில் ஒரு டேனிஸ் படைவீரர் மரணம் !

August 25, 2008

afhan.jpg 

டென்மார்க் 26.08.08 செவ்வாய் அதிகாலை

 ஆப்கானில் தென்புலத்தில் கடும் போர் நடைபெறும் கெல்மண்ட் வட்டகையில் வீதிக்கண்ணி வெடியில் சிக்கி ஒரு டேனிஸ் படைவீரர் உயிரிழந்தார். கண்ணி வெடியில் சிக்கியதும் இவர் அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அங்கு இவரது உயிரைக்காப்பாற்ற இயலாமல் போய்விட்டது. ஆப்கான் போர்க்களத்தில் இந்த ஆண்டு மட்டும் ஏழு டேனிஸ் படைவீரர்கள் உயிர் கொடுத்துள்ளார்கள். மரணமடைந்த படைவீரரின் குடும்பத்தினர்க்கு டேனிஸ் பிரதமர் ஆனஸ்போ ராஸ்முசன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், காலஞ்சென்ற படை வீரருக்கு வீர மரியாதைகளையும் தெரிவித்தார். ஆப்கானின் கடுமை நிறைந்த தென் பகுதியில் இருந்து டேனிஸ் படைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக முன் வைக்கப்பட்டு வருகிறது. ஆயினும் அங்கு நடைபெறும் அபிவிருத்தி பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் படையினரை உடனடியாக வேறிடத்திற்கு அப்புறப்படுத்த இயலாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom