Top

அலைகள் வாரம் ஒரு நாட்டு பழமொழிகள் 21.12.07

January 7, 2008

pala1.jpgடாக்டர் கே.கே.இராமலிங்கத்தின் பொன்மொழிக் களஞ்சியம் என்ற நூலில் இருந்து.
01. ஒருவருடன் நட்புக் கொள்ள முன்னர் நன்றாக யோசி அந்த நட்பை விடுவதாயின் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக யோசி.

02. எத்தனை வயதானவன் ஆனாலும் புதிது புதிதாய் கற்க ஆவல் உள்ளவன் இளைஞனே.

03. மனிதனுடைய மனோநிலைக்கு ஏற்றவாறு சந்தர்ப்பம் அமைந்தால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.

04. மற்றவர் துன்பத்தைக் கண்டு இரக்கப்படுவது மனித குணம், அதை நீக்கப் பாடுபடுவது தெய்வ குணமாகும்.

05. உனக்கு மன அமைதி வேண்டுமானால் மற்றவர்கள் மீது குறை கூறாதே உன்னிடமுள்ள குறைகளை எண்ணிப்பார்.

06. சிரிப்பதற்கும், பேசுவதற்கும் நேரமில்லை என்றால் உங்கள் வாழ்வில் எங்கோ ஓர் இடத்தில் தவறு இருக்கிறது தேடிப்பாருங்கள்.

07. எவ்வளவு கரடு முரடானாலும் சிக்கல் நிறைந்ததானாலும் காரியமில்லை சிறந்ததையே தேர்வு செய்.

08. பிறருடைய குற்றங்களை பேசாதே ! அவை எவ்வளவு கெட்டவையானாலும் சரி அதனால் யாதொரு நன்மையும் விளையப் போவதில்லை.

09. படுக்கையை வாங்கலாம் உறக்கத்தை வாங்க முடியாது, புத்தகத்தை வாங்கலாம் அறிவை வாங்க முடியாது.

10. தன்னை மற தெய்வத்தை நம்பு, எல்லா நன்மையும் நடக்கும்.

11. உங்கள் உள்ளத்தில் இறைவன் வர வேண்டுமானால் உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும்.

12. உள்ளத்தை ஒழுங்குபடுத்த வேண்டுமானால் நாட் குறிப்பு எழுதப்பழக வேண்டும்.

13. ஏசுநாதர், புத்தர், திருநாவுக்கரசர் போன்ற அறத்தின் வீரர்களை தியானம் செய்து கொண்டே நீங்கள் எடுத்த முடிவுகளை சிந்தித்துப் பாருங்கள்.

14. ஒரு குணத்தை அடைய வேண்டுமானால் அது உங்களிடம் இருப்பதாக எண்ணி நடியுங்கள்.

15. நமது மனத்தை ஒரு முகப்படுத்துவதே அறிவு வளர்ச்சிக்கு ஒரே வழிமுறையாகும்.

16.  இனிய செயலே உனது இனிய வாழ்க்கை ! பொறுமையே உனது ஆஸ்த்தி -நேர்மையே உனது வெற்றி ! – கோபம் உனது எதிரி ! – உழைப்பே உனது உயர்வு ! – அமைதியே உனது ஆறுதல் !

17. உங்கள் வாழ்வு மனிதத் தன்மையுடன் இருக்க வேண்டுமானால் சுரண்டலை விடுங்கள்.

18. வாழ்வை சிறப்பாக அமையுங்கள் ஏனென்றால் உங்கள் வாழ்நாளின் அளவு கடவுளின் கைகளிலேயே உண்டு.

19. எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்.

20. உன்னுடைய போராட்டத்தைத் தள்ளிப் போடாதே ! அதை இந்த விநாடியே ஆரம்பித்துவிடு.

21. ஏதாவது ஒன்றை உருவாக்கிக் கொண்டிருப்பவர்களால்தான் மகிழ்வாக இருக்க முடியும்.

22. நீ மற்றவர்களுக்கு உபதேசிப்பதைவிட உன்னுடைய குறையை நீக்குவதற்காக உனக்கே அடிக்கடி உபதேசம் செய்.

23. நமக்கு பாரமாக இருப்பவர்களை மன்னிக்கலாம் ஆனால் நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதைத்தான் மன்னிக்க இயலாது.

24. உலகில் நீ விரும்பிய அத்தனையையும் அடைய உதவும் மூலப் பொருள் நேரம்தான் மறந்துவிடாதே.
25. காலையில் எழுந்திருக்கும்போது பாக்கட்டை தட்டிப் பாருங்கள் நீங்கள் 24 மணி நேரத்திற்கு சொந்தக்காரராக இருப்பீர்கள். அதை வீணாக செலவழித்துவிட்டு கண்ணீர் சிந்த வேண்டாம்.

26. காலத்தை நாசமாக்குவது போல சுலபமான காரியம் எதுவும் இல்லை அதை வீணாக்காமல் பயன்படுத்துவதைப் போல கடினமான காரியம் எதுவும் இல்லை.

27. காலமே உனது உயிர் அதை வீணாக்குவது உன்னையே நீ கொலை செய்வதற்கு ஒப்பானதாகும்.

28. சோம்பல்தான் எல்லாத் தீமைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமாகும்.

29. பறக்கும்போதுதான் மின்மினிப் பூச்சிக்கு பளபளப்பு வருகிறது, அதுபோல சுறுசுறுப்பாக செயற்படுபவனே பிரகாசமாக இருப்பான்.

30. ஒரு வேலையை செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல செய்யும் வேலையை மேலும் சிறப்பாக செய்ய வழியிருந்தும் அதைச் செய்யாமல் இருப்பவனே படு சோம்பேறி.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom