உன்னதத்தின் ஆறுதல்! பாகம் 30. சந்தேகமும் அழிவும். Pas. Francis T. Anthonypillai.
July 30, 2010
உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து, அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். மத்தேயு 14:31.
சந்தேகம் என்பது பயங்கரமான ஒன்றாகும். இன்று பலருடைய வாழ்க்கையின் சந்தோசத்தை அழித்து, பலருடைய வாழ்கையை நாசமாக்கியுள்ளதும் இந்த சந்தேகம் தான். அன்று பேதுருவிற்கு வந்த சந்தேகம் அவனை கடலுக்குள் அமிழ்துபோக வைத்தது. ஆனால் இயேசு கூட இருந்ததினால் அவன் காப்பாற்றப்பட்டான். வசனம் 28-31. பேதுரு அவரை நோக்கி, ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
அதற்கு அவர், வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில், ஆண்டவரே, என்னை இரட்சியும்(காப்பாற்றும்) என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து, அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அதே வேதம் புலம்பல் 3:57ல் சொல்கிறது, நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி, பயப்படாதே என்றீர். எமக்கு ஏற்படும் சந்தேகத்தால் அழிவு, இழப்பு, தோல்வி வரும் போது நாமும் தேவனை நோக்கி கூப்பிடும் போது அவர் எங்களை அணுகி, எல்லாப் பயங்களையும் நீக்கி, எங்களை மீட்டு, ஆறுதலைத்தருவார்.
ஆனால் அன்று ஏவாளுக்கு வந்த சந்தேகம், இன்று முழு மனுக்குலத்தையும் பாவத்திற்குள் மூழ்கவைத்து, முழு மனுக்குலத்தையும் அழிவின் பாதைக்குள் இட்டுச்செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இதை நாம் விளங்கிக்கொள்ள ஆதியாகமம் 2ம், 3ம் அதிகாரத்தை வாசிக்கவும். தேவன் அவர்கட்கு இட்ட கட்டளை, தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்;. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
ஆனால் பிசாசானவன் அந்தக் கனியைக் குறித்து ஏவாளிடத்தில் சொல்லும் போது, அப்பொழுது சர்ப்பம் ஸ்திhPயை நோக்கி, நீங்கள் சாகவே சாவதில்லை, நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. ஆதி. 3:4-5. தேவனுடைய கட்டளை மேல் சந்தேகம் கொண்டு அந்தப்பழத்தை புசித்தார்கள். அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது. ஆனால் தேவ சந்நிதியை விட்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள். வசனம் 8. காரணம் தேவனுடைய மகிமை என்கிறதான அலங்காரம், பாதுகாப்பு அவர்களை விட்டு விலகியதுடன் தாங்கள் நிர்வாணிகள் என்பதை உணர்ந்து ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது தேவனுடைய வார்த்தையின் மேல் சந்தேகம் கொண்டால் நாமும் விலகி ஒட வேண்டியதுதான் (அதாவது தேவபராமரிப்பை இழந்து ஜீவனம் நடத்துதல்).
அன்று எப்படி பிசாசானவன் ஏவாளிடம் தேவனுடைய வார்த்தைமேல் சந்தேகம் கொள்ளும் படி செயற்பட்டானோ அதே போல் இன்றும் செயற்படுகிறான். உதாரணமாக யாத்திராகமம் 20:3ல் என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். இது தேவனின் கட்டளை. ஆனால் அந்த வார்த்தையின் மேல் உலகம் சந்தேகப்படுவதனால் இன்று கோடிக்கணக்கான தேவர்கள் நாளுக்கு நாள் உண்டாக்கப்பட்டு வருகிறதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
அதனால் மனித சமுதாயம் சீரளிக்கப்பட்டு வருவதோடு அல்லாமல், இயற்கையும் சீரளிக்கப்பட்டு முழு உலகமும் அழிவை நோக்கிச் செல்வதை நாம் கண்டுணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. அன்று ஏதேனில் தேவபிரசன்னத்தோடு ஆரம்பமான இன்பமான மனித வாழ்வு, தேவவார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட சந்தேகத்தினால் சபிக்கப்பட்ட பூமியில் வாழ்வு தொடரப்பட்டது. இன்றும் அதே வாழ்வு தொடரப்பட்டு வருவது மிக வேதனைக்குரியது. இதை உணர்ந்த தேவன் பழையஏற்பாட்டுக் காலத்தில் மோசேயைக் கொண்டு அடிமைத்தனத்தில் இருந்த மக்களை மீட்டெடுத்தார். 2010 வருடங்களுக்கு முன்னர் இயேசுக்கிறீஸ்த்துவை அனுப்பி மக்களை மீட்டெடுத்தார்.
பிரியமானவர்களே, நமது மானிடவாழ்விலும் சந்தேகங்கள் அருமையான, இனிமையான வாழ்வை சீரளித்துவிடும் என்பதை ஒரு நாளும் மறவாதே. விசேடமாக பிசாசானவன் தேவவார்த்தையின் மேல் கொண்டுவரும் சந்தேகம் தேவனை விட்டு விலகுவதற்கு மட்டுமல்ல, முழுக்குடும்பத்தையும் சாபமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் என்பதை ஒருநாளும் மறவாதே. ஆகவே தேவனுடைய வார்த்தையை அறிய உங்களுக்குக் கிடைக்கும் சர்ந்தப்பத்தை உதாசீனம் பண்ணாதே, மாறாக அதை அறிய முற்படு. அதனால் வரும் ஆசீர்வாதமான வாழ்க்கையை அடைந்து கொள்ள மறவாதே.
இதை நீங்கள் அறிந்து கொள்ள இந்த வேதப்பகுதியைப் படியுங்கள. லூக்கா 16:19-31 .ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்@ அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான், அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான், நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவது}தரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான், ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, து}ரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன், தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும், இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம், மகனே, நீ ப10மியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள், இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி, அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன், அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன், அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.
இது இயேசு கூறிய கதை. ஏன் இந்த ஐசுவரிவான் நரகத்திற்குச் சென்றான்? இதுதான் இந்தக் கதையின் சாரம்சம். இந்த உலகத்தில் பணக்காரணாக வாழ்ந்தாலும் பரலோகம் போக முடியாது. அதே நேரம் ஏழையாக வாழ்ந்தாலும் பரலோகம் போகமுடியாது. இதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஒருநாள் இருவரும் மரித்தார்கள். ஏழை ஆபிரகாம் மடியில் தேவதூதர்களால் கொண்டு போய்விடப்பட்டான். பணக்காரன் அடக்கம் செய்யப்பட்டான். அக்கினிக்கடல் என்று சொல்லப்படும் நரகத்தில் இருந்து ஆபிரகாம் மடியில் இருக்கும் அந்த ஏழை மனிதனைக் கண்டான். தனது தாகத்தைத் தீர்ப்பதற்கு ஒரு சில துளி தண்ணீர் கேட்டான். உதவி பெற முடியாத நிலை. அது மட்டுமல்ல நரகத்திற்கும் பரலோகத்திற்கும் மிகப் பெரிய இடைவெளி. அதை விட அவனின் வேதனை தனது ஐந்து சகோதரர்கள் பற்றியது. அவர்களும் இந்த இடத்திற்கு வந்து வேதனைப் படப்போகிறார்களே என்று. காரணம் அவன் சம்பூரணமாக வாழ்ந்த போது தேவ வார்த்தைக்கும், தேவ ஊழியக்காரருக்கும் செவி கொடாமல் சந்தேகத்துடன் வாழந்ததுதான். வசனம் 29-31. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
ஆபிரகாம் அவனை நோக்கி, அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன், அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன் அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார். மோசேய் என்றால் தேவனுடைய வார்த்தை. தீர்க்கதரிசிகள் என்றால் தேவனுடைய ஊழியக்காரர்கள். இயேசுக்கிறீஸ்த்துவை சொந்த இரட்சகராக, பாவங்கள் சாபங்களில் இருந்து விடுதலை கொடுத்து பரலோக வாழ்வுக்கான வழியைக் காட்டும் தெய்வம் என்று ஏற்றுக்கொள்ள சந்தேகப்படும், மறுக்கும் மக்களின் முடிவைப்பற்றியதுதான் இதன் விளக்கம்.
வேதம் சொல்கிறது, 1 சாமுவேல்15:22இல் கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். தேவனுக்குப்பிரியமான பிள்ளைகளே, எங்களின் வாழ்வின் ஓட்டத்தின் முடிவு எங்கே முடியும் என்று சிந்திப்போம். ….இந்த எமது முடிவு பரலேகத்தை (நித்திய ஜீவனை, பாதுகாப்பான இடம்) நோக்கியதா? அல்லது நரகத்தை (அக்கினிக்கடலை) நோக்கியதா?
இன்று முதல் இயேசுக்கிறீஸ்த்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தேவனுக்கும், தேவனுடைய சத்தத்திற்கும் கீழ்ப்படிந்து நடக்க ஒப்புக்கொடுக்க விரும்பும் மக்கள் என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை அறிக்கை பண்ணுங்கள். அன்பின் இயேசு சுவாமி, இன்று உம்முடைய சத்தியம் எனது இருதயத்தின் கண்களை பிரகாசிக்கப் பண்ணியதற்காக உமக்கு கோடி நன்றிகள் அப்பா. சத்துருவானவன் கொண்டுவரும் சகல சந்தேகங்களுக்குள் நான் அகப்பட்டு விழுந்து, நீர் தந்த இனிய வாழ்வை கெடுத்துப்; போகாத படி உமது கிருபையால் என்னைத் தாங்கி வழி நடத்தும். எது அவசியம் என்று தெரியாமல் இது வரை வாழ்ந்துவிட்டேன். இன்று முதல் உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ்வதே உத்தமம் என்று எண்ணி வாழ என்னை ஒப்புக்கொடுக்கிறேன் பிதாவே ஆமேன். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Pas. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.