எந்திரன் பாடல்கள் : நாளை முதல் கடைகளில்!
July 30, 2010
எந்திரன் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ‘புதிய மனிதா’, ‘காதல் அணுக்கள்’, ‘அரிமா அரிமா’ ஆகிய பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். ‘கிளிமஞ்சாரோ’ என்ற பாடலை பா.விஜய்யும் ‘இரும்பிலே ஒரு இருதயம்’, ‘பூம்பூம் ரோபாடா’ ஆகிய பாடலை கார்க்கியும் எழுதியுள்ளனர். இதுதவிர, ‘சிட்டி டான்ஸ் ஷோகேஸ்’ என்ற பாடலை ராப் பாடகர் யோகி. பி, பிரவிண் மணி, பிரதீப் விஜய் இணைந்து பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இதில் ரகுமானின் மகள் கதிஜா, முதன் முறையாக ‘புதிய மனிதா’ என்ற பாடலை ரகுமான், எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வெளியீடு நடக்கும் நாளை காலை முதல் உலகம் முழுவதும் பாடல் சிடி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.