சினிமாவை விட்டு விலகல்! மணிரத்னம் பரபரப்பு பேட்டி!
July 30, 2010
சினிமாவை விட்டு விலகி கொடைக்கானலில் தங்கி கோல்ப் விளையாட விரும்புவதாக டைரக்டர் மணிரத்னம் கூறியுள்ளார். நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களை இயக்கியவர் டைரக்டர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் ராவணன் படம் ரீலிஸ் ஆகியிருக்கிறது. படத்தின் முதல் மூன்று நாட்கள் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் புக் ஆகிவிட்ட நிலையில் நான்காவது நாள் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் மணிரத்னம் அளித்துள்ள பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராவணன் படத்தை ஆரம்பிக்கும் போதே, இதுதான் எனது கடைசி படம் என முடிவு செய்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி, கொடைக்கானலில் செட்டிலாகும் எண்ணம் இருக்கிறது. அங்கே தினமும் கோல்ப் விளையாட ஆசை எனக்கு. இப்போது அடுத்த படம் என்ன என்ன? என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். எனக்கும் இன்னுமொரு படம் மட்டும் பண்ணலாம் என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம். ஆனால் அடுத்த படத்துக்கான ஐடியா எதுவும் என்னிடம் இல்லை. ராவணன் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் அது படத்தைப் பாதிக்காது என்றுதான் நம்புகிறேன், என்று மணிரத்னம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
ஹிட் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் டைரக்டர் மணிரத்னம் சினிமாவை விட்டு விலகக் கூடாது. தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.