களவாணி வெற்றி எதிர்பார்த்ததுதான்! டைரக்டர் சற்குணம் பெருமிதம்!
July 30, 2010
களவாணி படத்தின் வெற்றி நான் ஏற்கனவே எதிர்பார்ததுதான் என்று புதுமுக டைரக்டர் சற்குணம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், களவாணி எனது முதல் படம். எல்லோருக்குமே முதல் படம் என்றால் கொஞ்சம் பயம் இருக்கும். அதிலும் முதல் ஷாட் வைக்கும் நேரம் வரை ரொம்பவே டென்ஷனாக இருந்தது. இந்த படத்தில் என்னோடு ஒர்க் பண்ணுன எல்லோருமே என்னுடைய நண்பர்கள்தான். அதனால் டென்ஷன் இல்லாமல் படத்தை எடுக்க முடிஞ்சிது. இந்த கதை பண்ணி 8 வருஷம் ஆச்சி. இந்த 8 வருஷம்ங்கிறது நல்லதாகத்தான் தெரியுது. ஒருவேளை நான் முன்னாடியே இந்த படத்தை இயக்கியிருந்தா… இந்த அளவுக்கு பண்ணிருக்க முடியுமான்னு தெரியல. லேட் ஆக லேட் ஆக ஸ்கிரிப்ட் மெருகு கூடிட்டே இருந்துச்சி. படத்தை பார்த்தவங்க எல்லாருமே பாராட்டுறாங்க. இரண்டரை மணி நேர படமே இல்ல…. ஒன்றரை மணி நேரம்தான் இருக்கும்னு சொல்ற அளவுக்கு விறுவிறுப்பா படத்தை எடுத்திருக்கேன். மக்கள் விசிலடிச்சி கொண்டாடி பார்க்குற படமா களவாணி வந்திருக்குங்கிறது பெருமையா இருக்கு. தஞ்சாவூரே ஒரு அழகு. அந்த அழகை கொஞ்சமும் குறையாமல் திரையில் காட்டியிருக்கிறோம். தஞ்சாவூரோட கலாச்சாரம், பண்பாடை இலக்கியத்தில் நிறைய பதிவு பண்ணிருக்காங்க. சினிமாவில் அது பதிவு செய்யப்படவில்லைன்னு ஒரு குறை இருந்திச்சி. அந்த குறையை இந்த படம் போக்கிடுச்சின்னு நிறைய பேர் சொல்றாங்க.
படத்தோட நாயகன் கேரக்டரும் என்னோட தம்பி கேரக்டரும் ஒண்ணா இருக்கும். அவனோட கேரக்டரை வெச்சித்தான் படம் பண்ணிருக்கேன். அவன் வீட்டில் மிரட்டி பணம் வாங்குவான். நிறைய களவாணித்தனம் பண்ணுவான். அதைத்தான் எடுத்திருக்கேன். படம் எடுக்கும்போதே வெற்றி பெறும்னு நினைச்சேன். அதுமாதிரியே களவாணி மாபெரும் வெற்றி பெற்றிருக்கு. ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றியை தெரிவிச்சுக்கிறேன், என்று கூறியுள்ளார்.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.