மெக்சிக்கோவின் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர் சுட்டுகொலை
July 30, 2010
மெக்சிக்கோவின் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர் தலைவர் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
‘நாகோ’ என்றழைக்கப்படும் இக்னாகியோ மெக்சிக்கோவில் உள்ள செபோபன் நகரில் இராணுவத்தினர் கைது செய்யும் போது தப்பிச் செல்ல முற்படுகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து மெக்சிக்கோவின் இராணுவப் பேச்சாளர் ஜெனரல் எட்கர் ரூயிஸ் வில்லேகஸ் தெரிவிக்கையில், “இவரை கைது செய்யச் சென்ற பொழுது போதைப் பொருள் மீது தீப்பற்றச் செய்துள்ளார் இதனால் இராணுவத்தினர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்’ எனத் தெரிவித்தார்.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.