Top

நலமருளும் அன்னை நாகபூஷணி அம்மன் ஆலய பிரதிஷ்டா கும்பாபிஷேகம்

July 29, 2010

டென்மார்க்வாழ் சைவத்தமிழ் மக்களின் நீண்டநாள் ஆவலைப் பூர்த்திசெய்யும் முகமாக, டென்மார்க்கின் தென் மாகாணத்திலுள்ள ஓபன்றோ நகரில் கோவில் கொண்டு நாகபூஷணியாக வீற்றிருந்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்து அருள்பாலிக்க அம்பாள் திருவுளங்கொண்டதன் பயனாக, எதிர்வரும் செப்டெம்பர் மாசத்தில் அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் பிரதிஷ்டா கும்பாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகமும் நடைபெற தெய்வானுகூலம் கைகூடியுள்ளது.

பக்தர்கள் தாங்களாகவே அபிஷேகம் செய்து தங்களது பாவ, தோஷங்களைப் போக்கிக்கொள்ளும் வகையில் நாகதம்பிரான் மூர்த்தமும் மேற்படி ஆலயத்தில் அமையவுள்ளதாகவும், கும்பாபிஷேகக் கிரியாகால விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் ஆலய ஸ்தாபகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு:- 0045 27639966, 0045 21454466.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom