செல்வச் சந்நிதி 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
July 29, 2010
தொண்டைமானாறு செல் வச்சந்நிதி ஆலயத்தின் வரு டாந்தப் பெருந் திருவிழா எதிர் வரும் 10ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமா கவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு பூங்காவனத் திரு விழாவும், 19ஆம் திகதி வியாழக் கிழமை காலை 8 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்குத் தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க் கிழமை முற்பகல் 10 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். திருவிழாக் காலங்களில் தினமும் காலைத் திருவிழா காலை 8 மணிக்கும், இரவுத் திருவிழா மாலை 4 மணிக்கும் நடைபெறும்.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.