வன்னியில் நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்கள் 232 பேருக்கு இடமாற்றம்
July 29, 2010
வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள பாடசாலைகளில் நீண்டகாலம் கடமை யாற்றிய ஆசிரியர்களில் 232 பேர் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப் படும் அதே நேரம் யாழ்.மாவட்டம் உட் பட வெளிமாவட்டங்களில் இருந்து 560 ஆசிரியர்கள் வன்னிக்கு இடமாற்றம் செய் யப்படவிருக்கின்றனர்.
இவர்களின் பெயர்ப்பட்டியல் வடக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலை மூன்றாம் தவணைத் தொடக்க முதல் நாள் இவர்கள் புதிய பாட சாலைகளில் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.
இவ்வாறு வடக்குமாகாண கல்விப்ப ணிப்பாளர் வீ.இராசையா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில்: யாழ்.மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களில் இருந்தும் வவுனியா, மன் னார் மாவட்டங்களில் இருந்தும் 560 ஆசி ரியர்கள் 3 வருடம் கடமைபுரிய வேண் டும் என்ற நிபந்தனை அடிப்படையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் மடு கல்வி வலயம், வவுனியா வடக்கு வலயம் ஆகியவற்றுக்கு இடமாற் றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு வலயத்தின் ஒருபகுதி, மடு கல்வி வலயம் ஆகியவற்றில் இருந்து 232 ஆசிரி யர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விடு விக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பொருத்தமான பாடசாலைகளை வலயக் கல்விப்பணிப்பாளர்கள் வழங்குவார்கள்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தற்பொழுது கடமைபுரியும் மாவட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக சம் பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியாக அறி விக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வன் னிப் பெருநிலப்பரப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மூன்று வருடங்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பாடசாலையில் கடமைபுரிய வேண்டும் என்று காலம் குறிப்பிட்டே இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று வருடங்கள் முடிவடைந்ததும் சம்பந்தப் பட்ட ஆசிரியர்கள் விரும்பிய இடங்க ளுக்கு பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
சகல ஆசிரியர்களும் மேற்படி இட மாற்ற வேலைத்திட்டத்துக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்கவேண்டும் என்றார்.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.