28 வயது திருமணச் சட்டம் இணைவாக்க அமைச்சர் எதிர்ப்பு
July 29, 2010
டென்மார்க் 29.07.2010 வியாழன்
டேனிஸ் மக்கள் கட்சி தனது செல்வாக்கை உயர்த்த அறிமுகம் செய்யப்பட்ட 28 வயது திருமணச் சட்டத்தை இணைவாக்க அமைச்சர் றொன் கொன் பாக் எதிர்த்துள்ளார். இந்தச் சட்டம் பின்வரும் கேள்விகளை உருவாக்குகிறது.
01. ஆற்றல் உள்ளவர்கள் டேனிஸ் மக்கள் கட்சியின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு 28 வயதுவரை டென்மார்க்கைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கல்யாணம் முடிக்காமல் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய தலையெழுத்தல்ல. அவர்கள் வேறு நாடுகளுக்கு போய்விடுவார்கள்.
02. ஏற்கெனவே டென்மார்க் வயது கூடியவர்களின் நாடாக இருக்கிறது. திருமண வயதிற்குள் நிற்கும் இளையோர் இல்லையானால் அவர்களால் வரும் பொருளாதார சுழர்ச்சி தடைப்படும்.
ஆக மொத்தத்தில் இந்த சய பெறுமான சுழர்ச்சி பின்புறமாக சுழன்று இறுதியில் டென்மார்க்கிற்கே நஷ்டமாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
டேனிஸ் மக்கள் கட்சி கொண்டுவரும் சட்டத்தை பெரும்பான்மை டேனிஸ் மக்கள் ஆதரிக்கவில்லை என்பது உண்மையாகும். அக்கட்சி ஒரு பெரும்பான்மைப் பலம் கொண்ட கட்சியும் அல்ல. ஆனால் வென்ஸ்ர அரசு ஆட்சியில் இருப்பதற்காகவே இந்தச் சிலுவைகளை வெளிநாட்டவர் பலர் சுமப்பது கவனிக்கத்தக்கது. அறிவும், ஆற்றலும் உள்ளவர்களை டேனிஸ் மக்கள் கட்சியின் சட்டங்கள் பாதிக்காது என்பதும் கவனிக்கத்தக்கது. அதேவேளை என்றைக்காவது மற்றவரை துன்பப்படுத்தாத ஆரோக்கியமான பிரேரணையை டேனிஸ் மக்கள் கட்சி கொண்டுவந்ததா என்று கேட்பதற்குரிய அரசியல் ஞானம் மற்றய கட்சிகளுக்கு இல்லாமல் இருக்கிறதா என்பதும் முக்கிய கேள்வியாக உள்ளது.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.