லீனா எஸ்பர்சனின் செல்வாக்கு பெரும் வீழ்ச்சி
July 29, 2010
டென்மார்க் 29.07.2010 வியாழன்
லீனா எஸ்பர்சன் வெளிநாட்டு மந்திரியாக பதவியேற்றபோது ஒரு பெண் வெளிநாட்டு அமைச்சராக வந்துவிட்டார். வென்ஸ்ர அரசின் ஆட்சியால் சர்வதேச அரங்கில் டென்மார்க்கிற்கு ஏற்பட்ட விமர்சனங்களை நீக்க ஒரு தேவதை வந்துவிட்டார் என்று டேனிஸ் ஊடகங்கள் எழுதின. அவருடைய வரவை சுமார் 61 வீதமான மக்கள் வரவேற்று மகிழ்ந்தனர். ஆனால் இப்போது எடுக்கப்பட்ட கணிப்பில் 70 வீதமான வாக்காளர் லீனா எஸ்பர்சனுக்கு எதிராக திரும்பியுள்ளார்கள் என்று கற்றிநெற் ஆய்வு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டை புறக்கணித்து இத்தாலிக்கு குடும்பத்துடன் உல்லாசப் பயணம் சென்றதால் மறுபடியும் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார். இப்போது வெறும் 27 வீதமானவர்களே இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் 1. ஈரான் மீதான தடைகள் 2. காலநிலை பாதிப்பு 3. பாலஸ்தீனத்தின் காஸா விவகாரம் ஆகிய மூன்று விடயங்கள் ஆராயப்பட்டன. லீனா எஸ்பர்சன் சமீபத்தில் மத்திய கிழக்கு சென்று அங்குள்ள நிலவரங்களை கற்க முயற்சித்தவர். இப்போது அந்த விவகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பேசப்படும் போது அதைப் புறந்தள்ளியது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். இதுபோல சோசல் டெமக்கிரட்டி தலைவி கெல தொனிங் சிமித்தும் முகமது கேலிச்சித்திர விவகாரத்தில் விடுமுறையில் நின்று தாமதமாக வந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. மிகச் சிறந்த ஆற்றலாளர் உள்ள டென்மார்க்கில் அரசியல் பிரிவில் இத்தகைய பின்னடைவுகள் காணப்படுவது குறித்து பல கல்வியியலாளர் கவலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.