றணாஸ் நகர் அருகாமையில் பெண்மணி படுகொலை
July 29, 2010
டென்மார்க் 29.07.2010 வியாழன்
நேற்றிரவு றணாஸ் நகருக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் 46 வயதுடைய பெண்மணி ஒருவரின் சடலம் கழுத்தறுத்து கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். காலஞ்சென்ற பெண்மணி தன்னைவிட நான்கு வயது இளமையான சந்தேக நபரின் மாஜி காதலி என்றும், இவர்கள் இருவரும் போதைவஸ்த்து அடிமைகள் என்றும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பெண்மணியின் படுகொலைக்குக் காரணமென்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. டென்மார்க்கில் இதுபோன்ற கழுத்தறுப்புக்கள் வாராவாரம் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.