பக்கவிளைவு இல்லாமல் நிறை குறைக்க புதிய மாத்திரை
July 27, 2010
3000 பேரிடையே இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பரிசோதனையின் பின் சந்தைக்கு வருகிறது.. தொப்பை போட்டவர்கள் வாழ்வில் வருகிறது வசந்தம்…
நிறை கூடியவர்கள் தமது நிறையைக் குறைத்துக் கொள்ள பல மாத்திரைகள பாவித்து வருவது வழமை. இதனால் பல பக்க விளைவுகள் ஏற்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதும் உண்டு. பொதுவாக தலைவலி, தலைச்சுற்று போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். தற்போது பக்க விளைவுகளே ஏற்படுத்தாத Lorcaserin என்ற புதிய மாத்திரை சந்தைக்கு வருகிறது. இதனால் தொப்பை போட்ட பலருடைய வாழ்க்கையில் புது வசந்தம் ஏற்பட இருக்கிறது. அமெரிக்காவில் மொத்தம் 3000 பேரிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்யப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
இந்த நிறை குறைப்பு மாத்திரையை தினசரி இரண்டு தடவைகள் பாவிக்க வேண்டும். முதற்கட்டமாக சுமார் ஐந்து வீதமான நிறை குறைப்பிற்கு இது உதவி புரிகிறது. இந்த மாத்திரை நிறைக் குறைப்பிற்கு மிகச் சிறந்த நிவாரணியாக இருப்பதாக மேலதிக வைத்தியர் ஸ்ரவன் சிமித் டென்மார்க் அறிவியல் கழக இணையத்திற்கு தெரிவித்தார்.
நிறைக் குறைப்பிற்கு இந்த மாத்திரையைவிட சிறந்த மாத்திரைகள் தற்போது சந்தையில் இருக்கின்றன. ஆனால் அவைகளுடன் ஒப்பிட்டால் இதனுடைய வீரியம் குறைவுதான், இருப்பினும் பாவிப்பதால் பாதிப்பு வராது என்ற திருப்தி தருகிறது. இந்த மாத்திரையை டேனிஸ் விற்பனைச் சந்தைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.