Top

வளரும் வல்வை சிவகுருவித்தியாசாலையின் இன்றைய தோற்றம்.

July 26, 2010

நாடென்ன செய்தது எனக்கு – என்று
கேள்விகள் கேட்பது எதற்கு
நீ என்ன செய்தாய் அதற்கு – என்று
நினைத்தால் நன்மை உனக்கு.

சுனாமியால் கடும் பாதிப்படைந்து அனைத்து மாணவர்களுடனும் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்ற வல்வை சிவகுரு வித்தியாசாலை மறுபடியும் இருந்த இடத்திலேயே எழுச்சியுடன் நிறுவப்பட்டுள்ளது. பாடசாலையின் இன்றைய தோற்றத்தை பழைய மாணவர்கள் பார்ப்பதற்காக இங்கே தருகிறோம். இங்கிலாந்து வல்வை நலன்புரிச்சங்கம், வல்வை ஒன்றியம் போன்ற தாபனங்கள் பாடசாலையின் மீட்சிக்கு தொடர்ந்து உதவி வருகின்றன. கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக பாடசாலையின் மேலதிக ஆசிரியர்களுக்கான ஊதியம் வல்வை ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. எத்தகைய பாதிப்பு வந்தாலும் நம்மால் மீண்டெழ முடியும் என்ற புது நம்பிக்கையை தருகிறது சிவகுருவித்தியாசாலை. பாடசாலையின் இன்றய எழுச்சிக்கு பாடுபட்ட அனைவருக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள வல்வை ஒன்றியங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

நாடென்ன செய்தது எனக்கு – என்று
கேள்விகள் கேட்பது எதற்கு
நீ என்ன செய்தாய் அதற்கு – என்று
நினைத்தால் நன்மை உனக்கு.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom