Top

லசந்த படுகொலை தொடர்பில் இரண்டு இராணுவ உயரதிகாரிகள் கைது

February 9, 2010

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கடமையில் உள்ள அதிகாரிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக புலனாய்வுத்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தினத்தில் குறித்த இராணுவ அதிகாரிகளின் செல்லிடத் தொலைபேசியின் உள்வரும், வெளிச் செல்லும் அழைப்புக்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சந்தேக நபர்களிடம் விசேட காவல்துறையினர் நீண்ட விசாரகைளை ஆரம்பித்துள்ளனர்

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom