Top

மகிந்த, கோத்தபாய, ரணில்,மங்கள ஆகியோர் வெளிநாடு சென்றிருந்த வேளையில் பொன்சேகா கைது!

February 9, 2010

இலங்கையின் முக்கிய தலைவர்களான, ஜனாதிபதி மகிந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்த வேளையில் சரத் பொன்சேகாவின் கைது இடம்பெற்றிருக்கிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். அவர் இன்று இரவு நாடு திரும்பவுள்ளார்.

அதேவேளை, எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். அவரும் இன்று இரவு நாடு திரும்பவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் வெளிநாடு சென்றிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் அமைப்பு தலைவர் மங்கள சமரவீரவும் வெளிநாடு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom