காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு: 450 ராணுவ வீரர்கள் கதி என்ன?
February 8, 2010
ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கிலன்மார்க் பகுதியில் இன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு செயல்பட்டு வந்த உயர்மட்ட போர்ப் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 450க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“கிலன்மார்க் மலைப்பகுதியில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த உயர்மட்ட போர் பயிற்சி பள்ளி இருந்த இடத்தை பனிச்சரிவு முற்றிலுமாக மூடி விட்டதாக” ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பனிச்சரிவில் சிக்கிப் புதையுண்ட 450க்கும் அதிகமான ராணுவ வீரர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 12 ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஜம்மு காவல்துறையினர் கூறியுள்ளனர்.
முன்னதாக வெளியான செய்தியில், கில்ன்மார்க்கில் இருந்து இன்று காலை குல்மார்க் பகுதிக்கு சென்ற உயர்மட்ட போர்ப்பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.