அலைகள் வாராந்தப் பழமொழிகள் 30.01.2010
January 30, 2010
இந்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு சாதனையாளர் கதையும் இணைக்கப்படுகிறது..
01. எதையும் நெக்கட்டீவாகப் பார்த்தால் வாழ்க்கையில் டென்சன்தான் மிஞ்சும், ஆகவே வாழ்வை ஆக்கபூர்வமாகப் பார்த்து நம்பிக்கையுடன் செயற்படுங்கள்.
02. வீட்டுக்குள் திருடனை வைத்துப் பூட்டிவிட்டு, வெளியே போவது போலத்தான், பயத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை.
03. கவலையோடு இருப்பவனுக்கு கல்லறை வேறு எங்கும் கிடையாது, அவனுடைய கவலை கொண்ட மனமே கல்லறையாகும்.
04. பிரச்சனை ஒரு சுமை அதற்காக கவலைப்படுவது அதைவிடப் பெரிய சுமை.
05. கால்களே இல்லாதவனை தெருவில் காணும்வரை செருப்பில்லையே என்று கவலைப்பட்டுத் திரிந்தேன்.
06. ஸ்ரெஸ்சை தவிர்க்க பிடித்தமான வேலைகளில் ஈடுபட வேண்டும். ஒரே வேலையை தொடர்ந்து செய்யாது மாற்றுவது நல்லது. மாறுவதும் மாற்றுவதும் மனதைச் சீராக்கும்.
07. தலைவரின் ஆணை வரும் என்று காத்திக்கும் தொண்டர்களின் வாழ்வு ஆமை வேகத்தில் நகர்கிறது. தலைவரின் குரலுக்காகக் காத்திருந்து காத்திருந்தே சுயமாக நகர முடியாது போனவர்கள் ஈற்றில் ஒரு நாள் சமுதாய வீதியில் பரிதவிக்க விடப்படுவார்கள்.
08. குதிரையின் லாகனை கையில் வைத்திருக்கும் வரைதான் குதிரையோட்டி குப்புற விழாமல் இருக்க முடியும். அதுபோல கட்டுப்படுத்த முடியாத தொண்டர்கள் அதிகரிக்கும்போது தலைவன் குப்புற விழுகிறான்.
09. ஒரு நாட்டை வெல்பவன் பலசாலி அல்ல, எவன் தனது மனதை அடக்கியாள்கிறானோ அவனே பலசாலி – பைபிள்
10. சின்னத் துன்பத்தை பெரிதாக மதிப்பிடுவதும், பெரிய துன்பத்தை சிறிதாக மதிப்பிடுவதும் மனதின் இழிவான போக்கிற்கு அடையாளமாகும்.
11. சிறந்த மேடைப்பேச்சு, சிறந்த அறிவு, கடின உழைப்பு இவைகளில் எது அரசியலுக்கு முக்கியம் என்றால் இவைகள் எதுமே அல்ல பொறுமைதான் முக்கியம்.
12. வீட்டிலும் வெளியிலும் குழந்தைகள் பெறுகிற எதிர் மறையான அனுபவம் அவர்களுடைய உலகம் பற்றிய பார்வையையே மாற்றிவிடுகிறது. சம்பவம் முக்கியமல்ல அதைக் குழந்தை எப்படிப் பார்க்கிறது என்பதே முக்கியம்.
13. பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் பிள்ளையானது ஒரு குழந்தைத் தொழிலாளி ஆக்கப்படுகிறபோது அது தன்னால் முடிந்த அனைத்து அறுவடைகளையும் தொலைத்து பரிதவித்து நிற்கிறது.
14. நினைவோட்டத்தைக் கட்டுப்படுத்துவது, வார்த்தைகளை அளந்து பேசுவது போன்றவற்றிலேயே உங்கள் பலம் வெளிப்படுகிறது.
15. பதவியில் இருந்து ஓய்வு பெறுவது முடிவல்ல அது இன்னொரு பதவியின் தொடக்கம்.
16. பிரச்சனையே இல்லாமல் வாழவேண்டுமென எவர் நினைக்கிறாரோ அவர் மனப்பக்குவமற்றவர் என்பது பொருளாகும்.
17. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் உண்டு, எதிர்பாராதவைகள் நிகழும், நீங்கள் எதையும் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
18. பிரச்சனைகள் வரும்போது அவை நம்மை அச்சுறுத்துவதற்காக வரவில்லை என்பதை உணர வேண்டும்.
19. எல்லாப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளுடனேயே வருகின்றன. நம்மைத் துன்புறுத்துவதற்காக கடவுள் பிரச்சனைகளைத் தரவில்லை.
20. இன்பத்தை அடைய துன்பப்படுகிறோம், அந்த இன்பத்தை இழக்கும்போது துன்பப்படுகிறோம், அந்த இன்பம் பறி
போய்விடுமோ என்று பயந்து இன்பத்தை வைத்துக் கொண்டே துன்பப்படுகிறோம். ஆகவே மனிதன் வாழ்வில் துன்பப்படும் காலமே அதிகமாகும். – கவலை மனிதனுக்கு கல்லறை.
21. செய்வதற்கு வழி காட்டுவதைவிட எதைச் செய்யக் கூடாது என்றே இறைவன் வழி காட்டுகிறான். நம்மைச் சுற்றி பெருந்தொகையான தீயவர்களை படைத்து வைத்திருப்பது அவர்களைப் போல நாமும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான். காந்தி, மாட்டின் லூதர் கிங் போன்ற பெரியோரை வெகு தூரத்தில்தான் படைத்து வைத்தான்.
22. கறுப்பாக இருப்பதற்காக காகங்கள் என்றும் கவலைப்பட்டது கிடையாது, அதுபோல வெள்ளை நிறமான பறவைகளை அது உயர்வாக மதித்ததும் கிடையாது.
23. கொலைத் தொழிலை வெற்றிகரமாகச் செய்யும் வரைதான் மிருகங்கள் புவியில் வாழும். கொலைத் தொழிலை நிறுத்தும் மிருகம் மற்ற மிருகத்தால் கொல்லப்படும்.
24. இழப்பதற்கு எதுவும் இல்லை என்று எண்ணுவோரே எதையும் தைரியமாக செய்ய முடியும்.
25. ஒவ்வொரு நாளையும் உன் வாழ்வின் கடைசி நாள் என்பதுபோல நினைத்து வாழ்.
இனி வாராந்த பழமொழிகளோடு ஒவ்வொரு சாதனையாளர் கதையும் சுருக்கமாக வெளிவரும்.
போனஸ் வாராந்த சாதனையாளர் 01.

வில்லியம் எட்வேட் போயிங்
விமானத் தயாரிப்பின் முன்னோடியாக விளங்கிய அமெரிக்கரே வில்லியம் எட்வேட் போயிங் ஆகும். இவர் டெற்றோயிட் நகரில் 1881 ம் ஆண்டு பிறந்தார். 1927ம் ஆண்டு போயிங் ஏயார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்காவில் இருந்த அனைத்து நிறுவனங்களையும் ஒன்று சேர்த்து யுனைட்டெட் ஏயார் கிராப்ட் அன்ட் டிரான்ஸ்போட் காப்பரேசனை அமைத்தார்.
எல்லோரையும் ஒன்று சேர்த்ததால் உண்டான குழப்பங்களால் இவருடைய முயற்சி ஏழு வருடங்களில் தவிடு பொடியானது. இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும் யாரையும் கூட்டுச் சேர்க்காமல் புதியரக போயிங் விமானங்களை தயாரித்தார். நல்ல தரமான நீடித்து உழைக்கக் கூடிய விமானங்களே எல்லோரையும் கவரும் என்று கருதி அவற்றை உருவாக்கினார். பெரு வெற்றியும் பெற்றார்.
எல்லோரும் சமம் என்று நினைப்பது தவறானது. ஒவ்வொருவரும் தன்தன் அளவில் திறமை படைத்தவர்களே அவர்களை சமமாகப் பார்க்காமல் துண்டுதல் கொடுப்பதே நமது கடமையாகும். எல்லோரையும் இணைத்து எல்லாக் காரியங்களையும் செய்ய இயலாது என்பதற்கு போயிங் ஓர் உதாரணம்.
அலைகள் நல்ல நூல்களில் இருந்து தொகுக்கும் செய்திகள் 30.01.10
மேலும் வரும்…





Comments
Got something to say?
You must be logged in to post a comment.