இறைவன் பெயர் சர்ச்சை மலேசியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்
January 8, 2010
மலேசியாவில் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களும் கடவுளை குறிப்பதற்கு அல்லா என்கிற சொல்லை பயன்படுத்தலாம் என்கிற சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லீம் குழுக்கள் சில மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆர்பாட்டங்கள் நடத்துவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தீப்பந்தங்கள் வீசி தாக்கப்பட்டன. இந்த தேவாலயங்களின் ஒன்றின் அலுவலகம் மோசமாக தீக்கிரையானது. மற்ற கட்டிடங்கள் குறைந்த அளவில் பாதிக்கப்பட்டன.
இந்த சம்பவங்கள் நடந்ததற்குப் பின்னர், கோலாலம்பூரில் கூடிய பல முஸ்லீம் குழுக்களைச் சேர்ந்தவர்கள், மலேசியாவில் இருக்கும் ரோமன் கத்தோலிக்க செய்தித்தாள் கிறிஸ்தவ மத நோக்கில் கடவுளை குறிப்பதற்கு அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் அளித்த சமீபத்திய தீர்ப்புக்கு எதிரான தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களின் ஆர்பாட்டம் அமைதியாக நடந்து முடிந்தன.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.