பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேத்தை அங்கீகரிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை
December 2, 2009

எதிர்காலத்தில் அமைய இருக்கும் பாலத்தீன நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை ஏற்கக்கோரி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க இருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்த்தக்கூடிய, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆவணம் ஒன்று தன்னிடம் கிடைத்திருப்பதாக, இஸ்ரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்திருக்கிறது.
மத்தியகிழக்குப் பிரச்சினையின் சமாதான நடவடிக்கைகள் தேங்கிக்கிடப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவிப்பதாக, அந்த ஆவணம் தெரிவிப்பதாகவும், ஹாரெட்ஸ் என்கிற அந்த செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது.
இத்தகைய ஒரு யோசனையானது, பரிசீலனைக்கான ஒரு பரிந்துரை என்கிற அளவில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்கள் மட்டத்தில் விவாதத்திற்காக சுற்றுக்கு விடப்பட்டிருப்பதாக தான் அறியவருவதாக, பிரஸ்ஸல்ஸில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அதேசமயம் இது அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறுவதற்கு இன்னமும் நீண்ட இடைவெளி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.