Top

எய்ட்ஸ் பரிசோதனைக்கு உட்படப்போவதாக தென் ஆப்ரிக்க அதிபர் அறிவிப்பு

December 2, 2009

southaf
தென் ஆப்ரிக்க அதிபர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய சோதனை ஒன்றுக்கு உட்படப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ஸூமாவின் இந்த அறிவிப்பு, எய்ட்ஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வருகிறது.

ஏற்கனவே ஒருமுறை எய்ட்ஸ் நோய்க்காக பரிசோதிக்கப்பட்டிக்கும் அதிபர் ஸுமா, உலக எய்ட்ஸ் தினத்தின்போது ஆற்றிய உரையில், மற்றவர்களும் இதையே செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.

எச்.ஐ.வி. தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட அனைத்து ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் சிகிச்சை வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

தென் ஆப்ரிக்காவில் தான் எய்ட்ஸ் கிருமி தொற்றிய மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருக்கிறார்கள். அங்கு எய்ட்ஸ் தொடர்பான வியாதிகளால் தினமும் ஆயிரம்பேர் இறக்கிறார்கள்.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom