நாட்டுக்காக தீர்மானங்களை எடுப்பதில் ஒருபோதும் பின் நிற்கமாட்டேன் – ஜனாதிபதி
June 30, 2009

இராணுவ வீரர்களுடன் இணைந்து மீட்டெடுத்த இந்த நாட்டை மீண்டும் காட்டிக்கொடுப்பதற்கு யாருக்கும் இடமளிக்க மாட்டேன். மஹிந்த சிந்தனை மூலம் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது புதிய தொகுதி அமைப்பாளர்கள் 12 பேருக்கும் மாவட்ட அமைப்பாளர்கள் 11 பேருக்கும் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மேலும் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது:
நாடு மற்றும் மக்களை முன்னோக்கியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எப்போதும் தீர்மானங்களை எடுத்தது. அரசியல் அதிகாரத்தில் நீடிப்பதற்காக ஒரு போதும் சுதந்திரக்கட்சி தீர்மானங்களை எடுத்ததில்லை. நாட்டிற்காக எடுக்க வேண்டிய தீர்மானங்களை உரியகாலத்தில் மேற்கொள்வதற்கு நான் ஒருபோதும் பின் நிற்கமாட்டேன்.
ஒரு அணியாக செயற்பட்டு பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தோம். அந்த சவாலை எம்மால் வெற்றி கொள்ள முடிந்தது. எனவே, எதிர்காலத்தில் அபிவிருத்தி எனும் சவாலை வெற்றிகொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும்.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.