யுத்த நிறுத்த ஒப்பந்தமே பிரபாகரனைக் கொன்றதுஉரிமை கோரி மார்தட்டுகிறது ஐ.தே.க.
June 30, 2009
புலிகளுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப் பந்தமே புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொலைக்குக் காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் எம்.பி. வஜிர அபய வர்தனவே இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறி யவை வருமாறு புலிகள் கொல்லப்பட்டு நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டது நல்ல விடயம். இதை நாம் அனைவரும் வரவேற்கிறோம்.
ஐக்கிய தேசியக் கட்சி அப்போது வகுத்த வியூகமே பயங்கரவாதம் தோல்வியடையக் காரணம். புலிகளுடன் எமது கட்சி அப்போது செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமே புலிகளின் தலைவரின் கொலைக்குக் காரணமாக அமைந்தது.
இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தி பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட எமது கட்சி முயற்சி எடுத்தது. ஆனால், இந்த அரசுஇனங்களிடையே குரோதத் தன்மையை வளர்த்துவிட்டு அதனூடாகவே பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது.
எமது தந்திரோபாயத்தைப் புலிகள் அப்போது புரிந்து கொண்டனர். ரணில் தந்திரோபாயமாக அரசியல் செய்கின்றார் என்று புலிகள் அப்போது கூறியிருந்தனர்.
எப்படி இருப்பினும், புலிகள் கொல்லப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமை இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லது. ஆனால் இனங்களிடையே காணப்படும் குரோத மனப்பான்மையை இல்லாது செய்து இனங்களை ஐக்கியப்படுத்த வேண்டியது இந்த அரசின் கடமை என்றார்.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.