Top

பிரதமர்-இலங்கை தமிழ் எம்பிக்கள் நாளை சந்திப்பு !

June 9, 2009

samthan4.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பிக்கள் குழு இரா. சம்பந்தன் தலைமையில் நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிறது. தமிழகம் வந்துள்ள இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திர பொன்னம்பலம் ஆகியோர் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை நிலவரம், அரசியல் அதிகாரப் பகிர்வு, தமிழர் மறு வாழ்வு உள்ளிட்டவை குறித்துப் பேசினர்.
இந்நிலையில் நாளை டெல்லி செல்லும் அவர்கள் அங்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது போர் முடிவடைந்துள்ள நிலையில், அங்கு தமிழர்கள் மறுவாழ்வு, அதிகாரப் பகிர்வு, நிரந்தர அமைதி, தமிழ் மக்களுக்கு சம உரிமை உள்ளிட்டவற்றை இலங்கை அரசிடம் வற்புறுத்தி இலங்கையில் நிரந்தர அமைதி திரும்ப இந்தியா உதவ வேண்டும் என தமிழ் எம்.பிக்கள் கோரிக்கை வைக்கவுள்ளனர்.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom