இலங்கை ராணுவ தளமாக கச்சத்தீவு மாறும் அபாயம்: டி.ராஜா
June 9, 2009
இலங்கையின் ராணுவ தளமாக கச்சத்தீவு மாறும் அபாயம் உள்ளதாக மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர்,
வேளாண் துறை தொடர்பான சீர்த்திருத்தங்களை மறு ஆய்வு செய்யவேண்டும். நாட்டில் உள்ள 2 மடங்கு வேளாண் நிலங்களுக்கு உரிய பாசன வசதியை அளித்தால் சர்வதேச அளவில் உணவு உற்பத்தியில் இந்தியா முன்னிலை பெறும்.
தரிசு நிலங்களை ஏழ்மை நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு விநியோகம் செய்து விளைநிலங்களாக மாற்ற நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் தொடர்பான புதிய சட்டவிதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கும் வாய்ப்புள்ளது.
கச்சத்தீவு ஒப்பந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். கச்சத்தீவை ராணுவ தளமாக மாற்ற இலங்கை அரசு முயற்சித்து வருவதாக கூறினார்.




so what…. what can india do… nothing.. srilanka is powerfull than India.. in the entire world one an only powerfull community is singalease.. nobody cant deny that. even UNO accept it,because any where in the world any genoside took place can inqure and send to judgement, but not in srilanka…. you indians in srilanka treated as …. Kalla Thoni.. not you mr.raja….. for them Mr. singh, narayanan,karunanithi,or the great narayanan