Top

பிரான்ஸ் போருக்கு ஆதரவு பாராளுமன்றம் கூடியது

September 4, 2013

oland

சிரியாவுக்கு எதிராக தம்மால் முன்னெடுக்கப்படும் போர் நடவடிக்கைக்கு பிரான்ஸ் ஆதரவளிக்கிறது என்று நேற்று செனட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் யோன் கார்ரி தெரிவித்திருந்தார்.

அதை மெய்ப்பிப்பது போல இன்று அமெரிக்கப் பாணியில் பிரான்சிய பாராளுமன்றத்தின் இரு சபைகளையும் அவசரமாகக் கூடும்படி அதிபர் ஒலந் பணித்துள்ளார்.

இதற்கமைய இன்று மாலை நாலு மணிக்கு பிரான்சிய பாராளுமன்றின் இரு சபைகளும் கூடியுள்ளன.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆதரவளிக்க முன்வந்துள்ளது, இது தொடர்பாக சென் பீற்றஸ்பேர்க்கில் பிரான்சிய அதிபர் தனது கருத்துக்களை வெளியிட பாராளுமன்றின் கருத்து உதவும்.

ஆனால் இன்று இதற்கான வாக்கெடுப்பு நடைபெறாது.

ஆனால் பாராளுமன்றை கேட்காமலே முடிவெடுக்க பிரான்சிய அதிபருக்கு அதிகாரம் உண்டு, இருப்பினும் அவரும் அமெரிக்கப் பாணியை பின்பற்றியுள்ளார்.

இதற்கு காரணங்கள் பல இருக்கலாம் ஒன்று, சிரியாவிடம் எஸ் – 300 ஏவுகணைகள் இருந்தால் மேலை நாடுகளின் தரப்பில் பலத்த சேதம் ஏற்படும், அத்தருணம் பழி முழுவதையும் அதிபரே ஏற்க நேரிடும்.

எனவேதான் பாதுகாப்பிற்காக இப்படியொரு ஏற்பாட்டை செய்கிறார்கள் என்று உய்த்துணர முடிகிறது.

அதேவேளை ரஸ்ய ஏவுகணைக் கப்பல்களும் மத்தியதரைக்கடல் விரைந்துள்ளதால் நிலமை மேலும் வெப்பமடைந்துள்ளது.

அலைகள் 04.09.2013 புதன் மாலை

Comments

Got something to say?

You must be logged in to post a comment.