Top

வாலி என்ற பெயரால் கண்ணதாசனின் பாதிப் பலத்தை பிடுங்கினார்

July 19, 2013

காலத்தால் மறக்கமுடியா கவிஞர் வாலி – சில பகிர்வுகள்

உலகத் திரைப்பட வரலாற்றில் இப்படியொரு கவிஞரை தமிழுலகே கண்டது -
1956 ல் எழுதத் தொடங்கியவர் ஏறத்தாழ 56 வருடங்கள் எழுதி
பெரும் புகழுடன் விண்ணேறியிருக்கின்றார்.

இனிய பாடல்கள் வலம் வந்த காலங்களில் கடும் போட்டிகளுக்கிடையில் சிக்கி சிகரம் தொட்டவர்
வாலி ஐயா , அவரின் பொறிபறக்கும் பாடல்கள் உள்ளங்களை தட்டிக்
கிளப்பியது நம்பிக்கையை விளைத்தது அறிவை சொன்னது எச்சரித்தது.

பின்னாலிருந்து மாபெரும் வலிமைமிகு வரிகளை கடுமையாக சிந்தித்து இயல்
செய்தவருக்கும் அதை இசை செய்தவர்களுக்கும் கிடைக்காத பெருமைகளை
பொய்யாக வாயசைத்து நாடகம் செய்தவர்கள் தட்டி சென்றனர் என்பது காலம்
காட்டி நிற்க்கும் உண்மை.

குரலரசு அமரர் டி எம் எஸ் மறைவை மறக்க முடியாது தவிக்கையில்
மணிவண்ணனும் மடிந்தார் இப்போ இரண்டாம் திரைக்கவியரசு வாலி யாரும்
விண்ணேறி விட்டார் .

2013 ஒப்பற்ற வித்தகர்களை தனுக்குள் இழுத்து
விட்டது, வாலியின் கவி வரிகளும் டி எம் எஸ் குரலின் எழுச்சியும்
இல்லை என்றால் எம் ஜி ஆர் புகழ் இந்தளவுக்கு உய்ர்ந்திருக்குமா என்பது
நியாயமான கேள்வியே?

திருச்சி வானொலி நிலையத்தில் வாலியின் “கற்பனை
என்றாலும் கற்சிலை என்றாலும்” பாடலை பாடிவிட்டு, தம்பி நன்றாக
எழுதுகின்றீர்கள் சென்னை வந்து என்னைப் பாருங்கள் என்று வாலியின்
வாழ்வுக்கு முதலாவது படியை நிமிர்த்தி கட்டியவர் அமரர் டி எம் எஸ்.

பிறகு பலரின் ஆதரவுகள் கைகூட பல படிகள் உயர்ந்து கவியரசருக்கு
இணையாக கோலோச்சியவர் வாலி ஐயா அவரின் எழுத்துக்களில் படிப்பறிவற்ற
பாமரர்களும் அறியும் படியான கருத்துக்கள் மின்னியது

“கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருவது யாரோ” என்று
எழுதிய அந்த வரிகளே என்னை முதல் முதலாக யார் இதை எழுதியவர் என்று
கேள்வி கேட்க்க வைத்தது ,

“வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான்
எங்கள் வீடு” என்ற வரிகளில் அழகும் மீனவர்கள் பெருமையும் துலங்கியது

“ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்” என்ற
வரிகளில் மீனவத்தொழிலின் அபாயம் எத்தகையது என்று உணர்த்தியது.

வாலி எந்த உணர்வுடன் எழுதினாரோ அதை பிசகு படாது உணர்வூட்டி குரலால்
நடித்தே பாடிக்கொடுத்தார் டி எம் எஸ் , கலையில் அவர்கள் ஒன்றிணைவு
ஒற்றுமை கவனம் பக்தி பொறுமை சிரத்தை அளவிட முடியாதது அது ஒரு
பொற்காலம் .

வாலி ஐயா வரிகளால் கோலம் போட்டு கவியரசர் கண்ணதாசனுக்கு
பெரும் போட்டியாளராக விளங்கினார் இது
யார் எழுதிய பாடல் என்று இரசிகர்கள் தடுமாறினார்கள் இசை கூட்டிய
இசையமைப்பாளர்களும் தடுமாறினார்கழென்றால் அவரின் ஆளுமை எத்தகையது
என்று புரிந்து கொள்ளலாம்.

வாலி என்று பெயர் கொண்டதன் காரணமோ என்னவோ
கண்ணதாசனின் பலம் அரைவாசி அவரிடம் சென்றுவிட்டதோ என்று எண்ண
வைக்கின்றது.

“நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் ” என்று அவர் எழுதிய பாடலே இன்றளவும் பேர் எழுச்சி
பாடலாக தமிழர்களின் அரசியல் விழாக்களில் ஒலிக்கிறது.

” மாதவிப் பெண் மயிலாள் ” பாடலில் அவரின் இலக்கியத்தரம் விண்ணை தொடுகின்றது,

“உயர்ந்த மனிதன்” என்ற காலத்தால் மறக்க முடியாத படத்தில் அத்தனை பாடல்களையும்
எழுதி நட்சத்திரமாக மின்னியிருக்கின்றார்.

“அந்தநாள் ஞாபகம் ” பாடலை
கண்ணதாசனே எழுதியிருப்பார் என்று எல்லோரும்நினைப்பார்கள் ஆனால் அந்த
நினைப்பை தவிடு பொடியாக்கி விட்டவர் வாலி ஐயா.

பாட்டை கேட்டுவிட்டு நண்பர்கள் இது கண்ணதாசன் எழுதியது என்றும் இல்லை வாலி என்றும்
தம்முள் சர்ச்சைப்பட்டு பிறகு படமாளிகை சென்று எழுத்தோட்டம் கண்ட
பின்னரே ஓ வாலிதான்எழுதியிருக்கின்றார் என்று வியந்து தோல்வியை
ஒப்புக்கொண்டதுண்டு.

அந்தளவுக்கு புலமை வெளிப்பாடு வாலி ஐயாவிடமும் இருந்தது,
முந்தநாள் குழந்தைகளும் துள்ளி குதிக்க அவர்கள்
இரசனைக்கும் இறங்கி எழுதியவர் வாலி ஐயா அவரின் இழப்பு
தமிழர்களுக்கு பேரிழப்பு – அவர்களின் உண்மை அமைதியடைய ஆண்டவன்
அருள் புரிவாராக .

பகிர்வு
ம.இரமேசு

Comments

Got something to say?

You must be logged in to post a comment.