Top

சசிகுமார் நடித்துள்ள குட்டிப்புலி

May 3, 2013

சசிகுமார் நடித்துள்ள குட்டிப்புலி படத்தின் வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.சசிகுமார் – லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை முத்தையா எனும் புதியவர் இயக்கியுள்ளார்.

இவர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தை வாகை சூட வா படத்தைத் தயாரித்த முருகானந்தம் தனது வில்லேஜ் தியேட்டர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது.

இந்த நிலையில் குட்டிப் புலியின் தமிழக வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் பெற்றுள்ளது.இந்த மாதம் 17-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

எனவே இப்போதிலிருந்தே தங்களது அதிரடியான விளம்பரங்களை ஆரம்பித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

இதுபோல

திருமணம் எனும் நிக்கா படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஹெப்பா எனும் புதுமுகம் நடிக்கிறார்.ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் திருமணம் எனும் நிக்கா திரைப்படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் பிரம்மாண்டம், லோகநாதனின் ஒளிபதிவு, புதுமுக இயக்குனர் அனீசின் கதை, திரைக்கதை அமைப்பு, கிப்ரானின் மெய் மறக்க வைக்கும் இசை, வனிதா ஸ்ரீனிவாசனின் நேர்த்தியான ஆடை அலங்காரம் என எல்லாமாக சேர்ந்து இந்தப் படத்தை எதிர்ப்பார்ப்புக்குரியதாக மாற்றியுள்ளது.

படத்தின் நாயகன் ஜெய்க்கு இரண்டு அழகான கதாநாயகிகள். ஒருவர் நசிரியா. தனுஷுடன் நய்யாண்டி படத்தில் நடிக்கும் அதே நசிரியாதான்.

இன்னொருவர் ஹெப்பா. இவரும் புதுமுகம்தான்.

அசப்பில் அந்தக் கால அமலாவைப் பார்த்த உணர்வு. இயக்குநர் அனீஸும் அதையே வழிமொழிகிறார்.ஜெய் – ஹெப்பா சம்பத்தப்பட்ட பாடல் காட்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.