பாகிஸ்தானில் 10 லட்சம் பேர் பாதிப்பு
July 31, 2010
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் வெள்ளத்தால் சுமார் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு நீரால் சூழப்பட்ட பகுதிகளை சென்று அடைவதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த பகுதியில் இருக்கின்ற சுமார் 30 லட்சம் பேர் வசிக்கும் பெஷாவர் பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கைபர் பாஹ்துன்க்வா பிராந்தியத்தின் தகவல் தொடர்பு அமைச்சரான மியான் இஃப்திகார் ஹுசைன் சுமார் 800 பேர் பலியாகியுள்ளதாக கூறியுள்ளார். இன்னும் பல இடங்களை சென்று சேர முடியாமல் இருப்பதாலும், மேலும் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாலும், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
பாகிஸ்தானில் செயல்படும் ஐ.நாவின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவரான மனுவல் பெஸ்லர், தன்னால் பாதிப்புகளை முழுமையாக கூறமுடியாத நிலையில் இருப்பதாகவும், ஏனென்றால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தன்னுடைய அலுவலகங்களையே சென்று சேர முடியாத நிலை இருப்பதாக அவர் கூறுகிறார்.
பாகிஸ்தான் அரசு தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் சுமார் 12 இன்ச் மழை பெய்யும் என பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பாகிஸ்தான் இது வரையில் உத்தியோகப்பூர்வமாக சர்வதேச உதவியை கோரவில்லை, ஆனால் கொடையாளிகள் உதவிசெய்யுமாறு அது கேட்டுள்ளதாக தெரிய வருகிறது.
காமன்வெல்த் ஏற்பாட்டில் ஊழல்?
July 31, 2010
டெல்லியில் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெருமளவு ஊழல்கள் நடந்திருப்பதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விளையாட்டுக் கட்டமைப்புக்களுக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை, நடந்து முடிந்த பணிகள் தரமற்றவையாக உள்ளன போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
போட்டிகள் துவங்குவதற்கு முன்பு பணிகள் நிறைவடையுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஏற்பாடுகளில் ஊழல் நடந்திருப்பதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.
பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழுவினர், நான்கரை லட்சம் பவுண்டுகளை வழங்கியிருப்பதாக ஒரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்துக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படுவதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் வருவாய் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய தூதரகத்துக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாகவும், காமன்வெல்த் ஏற்பாட்டுக் குழுவுக்கும் லண்டனில் உள்ள குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கும் எழுத்துப்பூர்வமான எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் அதிகாரிகள் அளித்த தகவல்களை, மேல் நடவடிக்கைக்காக இந்திய விளையாட்டு அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்திருப்பதாக லண்டனில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்னொரு புறம், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளுக்கான டெண்டர்கள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்துமாறு, மத்திய கண்காணிப்பு ஆணையம் தனது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, ஊழல் புகார்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சுரேஷ் கல்மாதி மறுத்திருக்கிறார்
கடல்நீர் குடிநீராக மாறும் ஆலை சென்னையில்
July 31, 2010
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தினந்தோரும் 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றக் கூடிய சுந்திகரிப்பு ஆலை சனிக்கிழமை முதல் செயல்படவுள்ளது. இந்த ஆலையின் மூலம் ஒரு லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்ற 5 பைசாவுக்கு குறைவாகவே செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயிரம் லிட்டர் குடிநீர் 48 ரூபாய் 66 பைசாவுக்கு வாங்கப்படும் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் தலைவர் சிவதாஸ் மீனா தமிழோசையிடம் தெரிவித்தார். தற்போது நாளோன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் நகரில் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சென்னை நகரில் பல ஆண்டுகளாக குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நீர்த் தேவைகளை சமாளிக்க தெலுங்கு கங்கை திட்டம், வீராணம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டன. ஆயினும் இத்திட்டங்களால் தேவையை முற்றாக ஈடு செய்ய முடியவில்லை. எனவே தொழில்நுட்பத்தின் துணை நாடப்பட்டுள்ளது.
இந்த ஆலை 600 கோடி ரூபாய் செலவில் தனியாரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வேறு சில கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் போல நீரை கொதித்து ஆவியாக்கி சுந்தம் செய்வதில்லை என்றும் அதிக அழுத்ததில் ‘ஜவ்வு’ வழியாக நீரை செலுத்தி சுத்திகரிப்பு செய்வதால் குறைந்த விலையிலேயே நீரைத் தர முடிகிறது என்றும் சென்னை வாட்டர் டிசாலினேஷன் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் என் கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மத்திய அரசின் நிதி மானியத்துடன் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மற்றொரு கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை 2012 ஆம் ஆண்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிக்கான பயணம்
July 31, 2010
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம்.-இங்கிலாந்து
Valvettithurai Welfare Association- uk
நீதிக்கான பயணம் 30.07.2010
அன்பான தமிழ்மக்களே,
எமது மக்களுக்கான நீதி மறுக்கப்பட்ட ஒரு சு10ழலில்,எல்லாவகையானநம்பிக்கைகளும் வற்றிப்போய்விட்ட ஒரு நிகழ்காலப்பொழுதில்,எமது இனத்தைச் சு10ழவும் சோர்வும் ஏக்கமும் நிறைந்த நேரத்தில் ‘சிவந்தன்’ என்ற இளைஞன் லண்டனில் இருந்து ஜெனீவா வரைக்கும் ‘நீதிக்கான நடைப்பயணத்தை’ மேற்கொண்டு இருக்கிறார். பல நூற்றுக்கணக்கான மைல்கள் நீளமான பாதையில்,ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்த வீதிகளில் கடும்வெயில் நாட்களில் அவர் நடப்பது என்பது மிகவும் கடினமும் நோவும் நிறைந்தது.
ஆயினும் தாயகமக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியை உலகத்தின் மனச்சாட்சி யை தொடர்ந்து தட்டுவதன்மூலம் பெற்றுவிடலாம் என்ற அவரின் நம்பிக்கையும் முயற்சியும் தலைவணங்கி ஏற்கத்தக்கது.எமது மக்களை உயிருடன் மண்மூடிப் புதைத்துவிட்டு அதன்மீது ஆட்சிசெய்யும் சிங்களஆட்சியாளர்களினதும் அதன் அடிவருடிகளதும் முகமூடிகளை இந்த நடைப்பயணம் நிச்சயம் கிழித்துஎறியும். சிங்களஆட்சியாளர்களை நீதியின் முன்னால் நிறுத்தும் இந்த நடைப்பயணம் நிச்சயம் வெற்றிபெறும்.
எங்கள் எல்லோரினதும் ஒரே குரலாகவும்,எங்கள் எல்லோரினதும் ஒரே கோரிக்கையாகவும் இந்த இளைஞன் ‘சிவந்தன்’ நடந்து கொண்டிருக்கிறார். வலிகளையும்,துன்பத்தையும் தனது இனத்துக்கான போராட்டத்தில் வலிந்து ஏற்று நடைபோடும் அந்த இளைஞனுக்கு அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும். இப்போதும் ஏதேனும் ஒரு கிராமத்தையோ நகரத்தையோ ஊடறுத்துச் செல்லும் வீதியினூடாக நடந்துகொண்டிருக்கும் அவருக்கு தேவையான ஆன்ம பலத்தை அனைவரும் இணைந்து வழங்கவேண்டும்.
வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கத்தினராகிய நாமும் இந்த நடைப்பயணத்தை இன்னொரு தேசியஎழுச்சிக்கான முதலாவது படியாகவும்,முதலாவது நகர்வாகவும் பார்க்கின்றோம்.அதற்கு ஆதரவுக் குரல் கொடுக்கிறோம்.’சிவந்தனின் நீதிகேட்ட நடைப்பயணத்துக்கு அனைத்து தமிழ்மக்களும் தமது ஆன்மபலத்தை, ஆதரவை,ஒத்துழைப்பை,ஒருமித்த குரலை வழங்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
நிர்வாககுழு
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம்.
இங்கிலாந்து
தொடர்புகட்கு:
சங்க தலைவர்:சிகாமணி:07946265289
பொருளாளர்: சிறீ :07872146288
செயலாளர்: முத்து :07863585476
முள்வேலிக்கு உள்ளே-வெளியே…! ச.ச.முத்து
July 31, 2010
‘Childhood is measured out by sounds and smells and sights, Before the dark hour of reason Grows’ -John Betjeman. Read more
கரபந்தாட்டத்தின் காவிய வீரன் சிவநாதன்
July 31, 2010
புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர் 31.07.2010
ஈழத்தின் ஓவர்கேம் ஆட்டம் மறுக்கவோ மறக்கவோ முடியாத ஒரு சாதனை வீரன் சிவநாதன் Read more
சியத தாக்குதல்-அமெரிக்கா கண்டனம்
July 31, 2010
இலங்கையின் தலைநகர் கொழும்பில் சியத ஊடக நிறுவனத்தின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை அமெரிக்கா கண்டித்துள்ளது.
சியத ஊடக நிறுவனம் தாக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன சம்பவம் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக புரியப்படுகின்ற அனைத்து வன்முறைகளும் இலங்கையில் ஊடகவியலாளர்களை ஒடுக்கி ஊடக சுதந்திரத்தை மேலும் நசுக்கும் நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பகமான விசாரணையின் மூலமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் என சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, பொலிசாரி்ன் விசாரணை குறித்த அறிவிப்பை வரவேற்பதாக மேலும் தெரிவித்துள்ளது
8வது நாளில் சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம் கவனயீர்ப்பு நிகழ்வு பிற்போடப்படலாம்
July 31, 2010
தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 8வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.எனினும் எதிர்வரும் 6ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு பிற்போடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று 12 மணித்தியாலங்கள் நடந்து 41 கிலோமீற்றர் தூரத்தை சிவந்தன் கடந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி லண்டனில் இருந்து மனிதநேயப் பயணத்தை ஆரம்பித்த இவர், நூற்றுக்கும் மேற்பட்ட கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்திருந்தார்.
கடந்த திங்கட்கிழமை இரவு பிரான்சின் கடற்கரையான கலையை சென்றடைந்த பின்னர் இன்று காலை 11:00 மணிவரை கலைப் பிரதேசத்தில் இருந்து 52 மணித்தியாலங்களில் சுமார் 170 கிலோமீற்றர்கள் அவர் நடந்து கடந்துள்ளார்.
பரிஸ் நகரை அடைவதற்கு இன்னும் 126 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியிருப்பதுடன், அங்கிருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள் மலைப்பாங்கான பிரதேசங்கள் ஊடாக நடந்து செல்ல வேண்டியுள்ளது.
சிவந்தன் ஒரு நாளைக்கு அண்ணளவாக 50 கிலோமீற்றர்கள் கடந்து செல்வதால், எதிர்வரும் 6ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வை பிற்போடுவது பற்றி ஐரோப்பிய அமைப்புக்கள் அனைத்தும் ஆலோசித்து வருகின்றன.
ஜெனீவா காவல்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னர் இறுதிநாள் கவனயீர்ப்பு பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் எனவும், அனைத்து தமிழ் அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.
கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாக இன்று அவரது பயணம் நடைபெறுவதால், மிகவும் களைத்த நிலையிலேயே சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார்.
சிவந்தனுக்கு துணையாக லண்டனில் இருந்து அவருடன் சென்றிருந்த இலக்கியனும் அவ்வப்பொழுது இணைந்து நடந்து செல்வதுடன், பிரான்சின் கடற்கரையான கலைசில் இருந்து பொஸ்கோ என்ற இளைஞன் தொடர்ச்சியாக சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்லுகின்றார்.
பிரான்ஸ் தமிழ் உறவுகள் அடிக்கடி சிவந்தனுடன் இணைந்து நடந்து தமது ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சில படையதிகாரிகளை கோத்தபாய அணியினர் கொன்றுவிட்டனர்
July 31, 2010
போர்குற்றத்தில் ஈடுபட்ட சில படையதிகாரிகளை கோத்தபாய அணியினர் கொன்றுவிட்டனர்: தப்பி வந்த சிங்கள ஊடகவியலாளர் தகவல்
கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய படைப்பிரிவு சுட்டுக் கொலைசெய்து விட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். லங்கா ஈ. நியூஸ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர் இலங்கை படைப்புலனாய்வாளர்களினால் தேடப்பட்ட நிலையில் வெளி நாடு ஒன்றிற்கு தப்பி வந்துள்ளார்.
இவரது தகவலின் படி கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரில் சில இராணுவ அதிகாரிகள் களத்தில் செயற்பட்டனர். இவர்களுள் இரசாயன குண்டு தாக்குதலிற்கு பொறுப்பாய் இருந்தவர்களும் உள்ளடங்குவர்.
பெண் மற்றும் ஆண் புலிப் போராளிகளை சித்திரவதை செய்து வன்னியிலேயே கொன்று தீயிட்டு கொழுத்தியவர்கள். காயப்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், பெண்களை சித்திரவதை செய்து கொன்றவர்கள் ஆகியோரும் இந்தப் போர்க்குற்றம் செய்த படையினரில் அடங்குவர்.
யுத்தம் முடிந்த பின்னர் இவர்களில் சிலர் சரத் பொன்சேகாவுடன் தொடர்பை பேணியும் வந்துள்ளனராம். இதனால் சந்தேகமுற்ற கோத்தபாய ராஜபக்ச தனது இரகசிய படைகள் மூலம் இவர்களை கொலை செய்ததாக இந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
குறிப்பாக இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கு பொறுப்பாக நியமிகப்பட்ட அதிகாரி இந்த ஊடகவியலாளருடன் தொடர்பினை கொண்டிருந்தார் என்பதும் பின்னர் அவர் வெடிவிபத்தில் மரணமானதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இரசாயன குண்டுகளை பாவித்தமை குறித்த சில அதிகாரிகளுக்கே தெரியும் எனவும் இந்த குண்டுகள் ஏனைய குண்டுகளுடன் களமுனைக்கு அனுப்பபட்டதாகவும் ஏற்கனவே தகவல் வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதை விட நூற்றிற்கு மேற்பட்ட அதிகாரிகள் இன்னமும் விசாரணையென அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களாம்.இவர்கள் போர்க்குற்றத்திற்கு முக்கிய சாட்சிகளாக உள்ளனர்.
இவர்கள் மீது பொன்சேகாவின் வழக்கு தொடர்பாகவோ அல்லது விடுதலைப்புலிகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்றோ குற்றம் சுமத்தி தண்டனை வழங்கப்படலாம் என்றும் அந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
சில அதிகாரிகளுக்கு வடக்கு கிழக்கில் பெருமளவான காணிகளையும் வசதிகளையும் கொடுத்து அங்கேயே குடியமர்த்தும் திட்டத்தினையும் அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ளது.
எது எப்படி இருப்பினும் என்றோ ஒரு நாள் இவர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவருவார்கள் என்றும் அந்த ஊடகவியலாளர் கூறினார்.
இந்த ஊடகவியளார் தம்மிடம் கிடைத்த போர்குற்ற மீறல்கள் தொடர்பிலான தகவல்களை குறித்த அமைப்புக்களுக்கும் முக்கிய நாடு ஒன்றிற்கும் வழங்கியுள்ளார்.
இந்த ஊடகவியலாளருக்கு இன்னமும் அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதனால் பெயரை குறிப்பிடவில்லை.
நன்றி: ஈழநாதம்
அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு: பொன்சேகா
July 31, 2010
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்கு விசாரணை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் முன் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டார். வன்முறைக்கு பொது மக்களைத் தூண்டியதாக பொன்சேகா மீது தொடரப்பட்ட வழக்கில் அப்போது விசாரணை நடைபெற்றது என்று வழக்கறிஞர் லாதுவஹெத்தி கூறினார்.
இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும். அப்போது 20 சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள். இதில் வழக்கில் பொன்சேகா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
பொன்சேகா மீது ஏற்கெனவே ராணுவ நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ராணுவப் பணியிலிருந்து இருந்து கொண்டு அரசுக்கு எதிரான சதியில் ஈடுபட்டார் என்று ஒரு வழக்கும், தனது மருமகனின் நிறுவனத்துக்கு ராணுவ ஒப்பந்தத்தை வழங்கினார் என்று மற்றொரு வழக்கும் உள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், பொன்சேகா கைது செய்யப்பட்டார். இப்போது ராணுவ சிறையில் வைக்கப்பட்டுள்ள பொன்சேகா, இந்த வழக்குகள் எல்லாம் அரசியல் நோக்கத்தோடு தொடுக்கப்பட்டவை என்று கூறியுள்ளார்.











