Top

ராம. நாராயணன் எனது நண்பர்தான் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜீ

June 30, 2010

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளார் சங்கத்தினரின் பதவிக் காலம் ஜூலை மாதத்துடன்
முடிவடைவதால், 2010-2012 ஆம் ஆண்டிற்கான தேர்தல் வரும் ஜூலை 11 ந் தேதி நடைபெற இருக்கிறது.

இதில்,தற்போதைய தலைவராக இருக்கும் ராம.நாராயணன் தலைவராகவும், துணைத் தலைவர், கவுரவ தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனத் தற்போது பதவி வகிக்கும் அனைவரும் மீண்டும் அதே பதவிக்களுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ராம.நாரயணனை எதிர்த்து, நான்கு முறை தாயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், பிலிம் சேம்பர் தலைவராகவும் இருந்த தயாரிப்பாளர் கே.ஆர்.ஜீ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இதனால், தலைவர் பதவிக்கு மட்டும் நேரடிப் போட்டி உருவாகி உள்ளது. ராம.நாராயணனை எதிர்த்து போட்டியிடுவது குறித்து கே.ஆர்.ஜீ குறிப்பிடுகையில், “நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. ராம. நாராயணன் எனது நண்பர் தான். பிலிம் சேம்பரிலிருந்து, தாயாரிப்பாளர்கள் சங்கம் எதற்காக? யாருக்காக? எந்தக் நோக்கத்திற்காக பிரிந்து வந்ததோ அந்த நோக்கம் நிறைவேற வில்லையே என்ற ஏக்காம் தான் என்னை போட்டியிட வைத்துள்ளது.

இன்றைக்கு, சிறிய தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு தெருவில் நிற்கும் நிலை உருவகியுள்ளது. சங்கத்தின் நோக்கமே சிறிய தயாரிப்பாளர்களை காப்பாற்றுவது தான். அவர்களால்,இன்று படமே எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. படம் எடுக்கும் சில தாயாரிப்பாளர்களால் தியேட்டரில் வெளியிட முடியாத நிலை, சங்கத்தால் அவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு கரணம் என்ன என்று பார்த்தல், தாயரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருக்கும் பலர்,மற்ற சங்கங்களிலும் பதவி வகித்து வருகிறார்கள். இதனால், சிறிய தயரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்கும் நடிகரின் சம்பள விவகாரம் தொடர்பாகவும், இயக்குனருடன் கருத்து மோதல் ஏற்பட்டு புகார் கொடுக்கும் போதும், இவர்களால் பாரபட்சமின்றி நியாயம் வழங்க முடிவதில்லை. இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் மாற்றி, சின்னத் தயாரிப்பாளர்களை வாழ வைப்பதற்காகவே நான் போட்டியிட முடிவெடுத்துள்ளேன்” என்றார்.

விம்பிள்டன் டென்னிஸ்-ஃபெடரர் தோல்வி

June 30, 2010

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் நடப்பு சாம்பியனான ரோஜர் ஃபெடரர் தோல்வியடைந்துள்ளார்.
கால் இறுதிப் போட்டியில் சற்று முன்னர் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், ஃபெடரரை 6-4,3-6,6-1,6-4 என்கிற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஏழாவது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் டென்னிஸ் பட்டத்தை வெல்லும் ஃபெடரின் கனவு தகர்ந்து போயுள்ளது. 2002 ஆண்டு முதல் இறுதிப் போட்டிக்கு முன்னர் அவர் தோல்வியடைந்தது கிடையாது.

அரையிறுதிப் போட்டியில் பெர்டிச் நோவாக் யாக்கோவிச்சை எதிர்த்து விளையாடுவார்.

விம்பிள்டன் டென்னிஸ் அரங்கில், ரோஜர் ஃபெடரர் போன்ற ஒரு வீரரை வெல்வது மிகவும் எதிர்பாராத ஒன்று

1990 ஆம் ஆண்டு இவான் லெண்டல் விம்பிள்டன் போட்டிகளில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற பிறகு, செக் நாட்டு வீரர் ஒருவர் அரை இறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை.

இந்தத் தோல்வியின் காரணமாக உலக ஆடவர் டென்னிஸ் தரப்பட்டியலில் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மூன்றாம் இடத்துக்கு ரோஜர் ஃபெடரர் தள்ளப்பட்டுள்ளார்.

த தே கூ அரசியல் கட்சியாகிறது

June 30, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு திடீரெனெ எடுக்கப்பட்டது அல்ல என அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக நான்கு கட்சிகள் இணைந்த ஒரு கூட்டமைப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது.அண்மையில் இலங்கையில் முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயரிலேயே போட்டியிட்டது.

கடந்த தேர்தலின் போது தாங்கள் பதிவு செய்யாத காரணத்தினால் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அதன் நாடாளுமன்ற குழுவின் தலைவரான இரா சம்பந்தர் நியமிக்கபப்ட்டுள்ளார்.

கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யபப்ட்டாலும், அதில் அங்கம் வகித்திருந்த கட்சிகளை கலைக்க வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாவும் அவர் மேலும் கூறுகிறார்.

பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார்

June 30, 2010

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முன்னாள் போராளிகள் கூறுகிறார்கள்
கொழும்பு ஆடைத்தொழிற்சாலைகளில் இலங்கை அரசாங்கத்தால் பணிக்கு சேர்த்துவிடப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இது குறித்து தமிழோசையிடம் பேசிய ஸ்ரீதரன் அவர்கள், மறுவாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆடைத்தொழிற்சாலை பணிகளுக்காக அரசாங்கத்தினால் பயிற்சி வழங்கப்பட்டு, கொழும்பில் பணிக்கு சேர்க்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளே தமது பெற்றோரின் ஊடாக இது குறித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் இருப்பதை விட முன்னர் இருந்த மறுவாழ்வு நிலையங்களுக்கோ, சிறைக்கோ திரும்ப தாம் தயாராக இருப்பதாகவும் அந்த போராளிகள் கூறியுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளது போல எந்தச் செய்தியும் தமது பார்வைக்கு வரவில்லை என இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்த்திருத்த்ததுறை அமைச்சர் டியூ குணசேகர தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தான் நாடாளுமன்றத்தில் இருந்த போதிலும், ஸ்ரீதரன் தன்னிடம் இது குறித்து ஏதும் தெரிவிக்காமால், வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது ஒரு இடைச் செய்தியாகவே இதைத் தெரிவித்தார் எனவும் அவர் கூறுகிறார். எனினும் தற்போது இந்த விடயம் தமிழோசை மூலம் தனது பார்வைக்கு வந்துள்ள நிலையில், இது குறித்து தான் விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றபடி பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள், முன்னாள் போராளிகள் ஆகியோரை விடுவிப்பது தொடர்பில், நீதித்துறை, சட்டமா அதிபர், காவல்துறையினர் ஆகியோரே முடிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து தான் ஒரு அறிக்கையை கோரியுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் விவாதிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

சினிமாவுக்கு வரிவிலக்கு தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

June 30, 2010

தமிழில் பெயர் வைக்கும் சினிமாக்களுக்கு வரிவிலக்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில், செய்தி விளம்பரம், எழுதுபொருள் அச்சுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் பரிதி இளம்வழுதி வெளியிட்ட அறிவிப்பில் சினிமா தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றன. அதன் விவரம் வருமாறு:

* எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களின் பயிற்சிக்கென, ரூ.50 லட்சம் செலவில் நவீன கருவிகள் வழங்கப்படும்.

* தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் செய்திப் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளை மேம்படுத்த நவீன, அதிக துல்லியம் வாய்ந்த 3 வீடியோ படப்பிடிப்பு கருவிகள் ரூ.27 லட்சத்தில் வழங்கப்படும்.

* திரைப்பட தொழிலுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வகையில் தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

விஜயகாந்த் வாரிசின் சினிமா ஆசை!

June 30, 2010

நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறாராம். அரசியலுக்கு வருவேன்… அரசியலுக்கு வருவேன் என்று பூச்சாண்டி காட்டால் அதிரடியாக அரசியல் களத்தில் குதித்து முன்னணி கட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு உயர்ந்திருக்கும் விஜயகாந்த், அரசியல், சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். ஒரு காலகட்டத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணமும் விஜயகாந்திற்கு இருக்காம். இதற்கிடையில்தான் அவரது வாரிசு, திரையுலகில் கால்பதிக்க ஆசைப்படுவதாக ‌செய்தி வெளியாகியிருக்கிறது.

விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன். இவருக்குத்தான் சினிமா ஆசை. அந்தரத்தில் பறந்து இடதுகாலை உந்தி பின்பக்கமாக உதைக்கும் விஜயகாந்த் ஸ்டை‌லுடன் சினிமாவில் குதித்து, விஜயகாந்தின் இடத்தை நிரப்புவதுதான் இவரது திட்டமாம். இதற்கு அவரது உடல்பருமன் ஒத்துழைக்காது என்பதால், தற்போது உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் பிரபாகரன். சீக்கிரமே இளைச்சு அப்பாவின் ஆக்ஷன் இடத்திற்கு வருவேன் என்று தன்னை உசுப்பி விட்ட நண்பர்களிடம் மார் தட்டிச் சொல்கிறாராம் சின்ன கேப்டன்.

விஜய்யின் வேலாயுதம் படத்தின் கதை!

June 30, 2010

அடுத்தடுத்து தோல்விப்படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் வேலாயுதம். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தினை டைரக்டர் ஜெயம் ராஜா இயக்குகிறார். நாயகியாக ஜெனிலியா நடிக்க உள்ளார். பிரமாண்ட அளவில் தொடக்க விழாடை நடத்த திட்டமிட்டிருக்கிது வேலாயுதம் டீம். இந்நிலையில் வேலாயு‌தம் படத்தின் கதை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயம் ராஜாவும், விஜய்யும் ரீ-மேக் பிரியர்கள். விஜய்யை பொருத்தவரை அவ்வப்போது காலை வாரிவிட்டாலும் தொடர்ந்து ரீ-மேக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஜெயம் ராஜாவுக்கு ரீ-மேக்தான் ரொம்ப ராசி. இப்போது அவர் வேலாயுதம் படத்திற்காக தேர்ந்‌தெடுத்திருக்கும் கதையும் ரீ-மேக்தான் என்கிறது விவரமறிந்த கோடம்பாக்கம் வட்டாரம்.

மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி சில ஆண்டுகளுக்கு முன் ‌தெலுங்கில் இயக்கிய ‘ஆசாத்’ என்ற படத்தை தழுவித்தான் வேலாயுதத்தை உருவாக்கப் போகிறாராம் ராஜா. இந்தியன், முதல்வன், அந்நியன் என்று ஷங்கரின் கைவண்ண கலவைதான் இந்த ஆசாத் படம் என்று தெலுங்கு பட வட்டாரம் சொல்கிறது

தனுனவின் வங்கி கணக்குகளை அரசுடமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு

June 30, 2010

தனுன திலக்கரட்னவின் 7 வங்கி கணக்குகளை அரசுடமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹைகோப் நிதி மோசடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேக்காவின் மருமகன் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள தனுன திலக்கரட்னவை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னர் உத்தரவிடப்பட்டிருந்தது. இன்றும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணத்தை நீதியமைச்சின் விருப்பத்தின்படி பயன்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனுன திலக்கரட்னவின் வங்கி கணக்கில் ஒரு கோடிய 50 லட்சத்து 74 ஆயிரத்து 910 ரூபாவும் ஆயிரத்து 251 அமெரிக்க டொலர்களும் (ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 194 ரூபா) வைப்பிலிடப்பட்டிருந்தன. தனுன திலக்கரட்ன இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஏற்கவே காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு புகலிடம் வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

June 30, 2010

இலங்கை தமிழ் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில், இலங்கையின் நிலமைகளில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அங்கு இன்னும் உயிரச்சம் நிலவுவதாகவும், படுகொலைகள், சித்திரவதைகள்,காணாமல் போதல்கள் என்பன இப்போது கூட தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருப்பதாலும் இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் மக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கும் முன்னெடுப்புக்கள் சுமார் மூன்று மாத காலமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் இந்த இடைநிறுத்தம் முடிவடைகின்றது. அதற்குப் பின்னரேனும் ஈழ அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்க புதிய பிரதரான நீங்களும், உங்கள் அரசும் நடவடிக்கை எடுங்கள்”. என குறிப்பிடப்பட்டுள்து

நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் ருத்ரகுமாரன்

June 30, 2010

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் ஆதரவாளர் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளில் சாட்சியளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் தொடர்பிலான இறுதி அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், இதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மீளவும் இடம்பெறாமல் தடுப்பதற்கு சரியான முறையில் விசாரணை நடத்தி, அதற்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு விசாரணைகளுக்கு பூரண ஆதரவு அளிக்கப்படும் எனவும், சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு முதல்தர சாட்சியங்களை திரட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவினால் நான்கு மாதங்களுக்கள் விசாரணைகளை நடத்தி முடிக்க முடியுமா என ருத்ரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாரணைக்கான காலப் பகுதியை மேலம் நீட்டிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Page »

Bottom