Top

உன்னதத்தின் ஆறுதல் – 17- Pas. Francis T. Anthonypillai.

April 30, 2010

உம்முடைய வசனம் என்கால்களுக்குத் தீபமும் என்பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது. சங்கீதம் 119:105.

கடந்த வாரம் மிக அருமையான ஓர் வேதப்பகுதியை நாம் வாசித்துத் தியானித் திருந்தோம். அந்த வேதப்பகுதியில் 4ம் வசனம் இவ்வாறு கூறுகிறது. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூடஇருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத்தேற்றும். இந்த வேதப்பகுதியை எழுதிய தாவீதின் வாழ்வில் போராட்டங்கள், பயங்கள், மரணஇருளின் அனுபவங்களைத் தினமும் சந்தித்து வந்தார். இத்தனைக்கு மத்தியிலும் தேவனை அறிந்தபடியால் ஏற்பட்ட தேவனுடனான உறவும், தேவபிரசன்னமும் அவரை எந்தப் பொல்லாப்பு வந்தாலும் பயப்படேன் என்கிற நம்பிக்கையை, விசுவாசத்துடன் அறிக்கையிடவைத்தது.
இன்று நாம் பல வழிகளில் பாதைக்கு வெளிச்சமான இந்த வேதத்தை வாசிக்க, கேட்கக்கூடியதாக உள்ள பல சர்ந்தப்பங்களை எம்வாழ்வில் தினமும் சந்திக்கிறோம். அந்த வெளிச்சமாகிய வேதம் எமது வாழ்வில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த நாம் எம்மை விட்டுக்கொடுத்திருக்கிறோமா? அப்படி இல்லையாயின் அந்த வேதம் எமது வாழ்வில் பயனற்றதாகப் போய்விடும். வார்த்தைகளைக் கேட்பது, வாசிப்பது தியானிப்பது முக்கியமல்ல. அவற்றிற்குக் கீழ்படிந்து, அவற்றை நமது வாழ்க்கையாக்கிக் கொள்ளவேண்டும்.

நமது வாழ்க்கையாக்கிக் காட்டவேண்டும். அப்போது இந்த வேதம் அந்தகார இருளில் இருக்கிற எமது(மக்களது) பாதைக்கு வெளிச்சமாக மாறும். அதாவது துன்பத்திலே, துயரத்திலே, போரட்டத்திலே, மரண இருளின் பள்ளத்தாக்கென்கிறதான தனிமையில் இருக்கிற எமக்கு தேவன் என்னுடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை விசுவாசமாக மாறி, புத்துயிர்கொடுத்து பயமற்ற ஓர் புது வாழ்க்கைக்கு எம்மைக் கொண்டு செல்லும். உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். (பிழைத்திருக்கப்பண்ணும்ஃ உயிர்ப்பிக்கப்பண்ணும்).சங்கீதம் 119;:144.
அருமையானவர்களே, தேவன் என்னோடுகூட இருக்கிறார் என்ற நிச்சயம் உங்கள் வாழவில் உண்டா? இல்லையாயின் தேவனோடு நெருங்கிவாழ்ந்து, தேவரீர் என்னுடன் கூடவிருக்கிறீர், நான் ஒன்றுக்கும்பயப்படேன் என்று சொல்லத்தக்கதாக இன்றிலிருந்து வாழ முற்படுவோம்.

அப்படி நாம் முற்படுவோமாயின் கலக்கங்கள், போராட்டங்கள், துன்பங்கள், இருள்கள் எம்மைச் சு10ழ்ந்துகொண்டாலும் தேவபிரசன்னம் கூட இருந்து உங்களைக் காப்பதை இன்றிலிருந்து உணரக்கூடியதாக இருப்பீர்கள். தேவன் என்னுடன் இருக்கிறார் என்று கூறினால் மாத்திரம் போதாது. உண்மையில் தேவன் நம்மோடு, நம் வாழ்வில் இருக்கிறாரா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். கர்த்தர் என் மேய்பர், அதாவது கர்த்தர் என் ஆணடவர் என்ற உறுதி நமக்கு இருந்தால் மாத்திரம், நாம் எந்த சு10ழ்நிலையிலும் அவரின் பிரசன்னத்தை உணர அல்லது அனுபவிக்க முடியும்.

கர்த்தரின் பிரசன்னத்தை நானும் அனுபவிக்கவிரும்புகிறேன் அல்லது தேவனின் மெய்யான விடுதலையை நானும் அடைந்துகொள்ளவிரும்புகிறேன் எனத்தீர்மானம் எடுத்த அத்தனை பேருக்காகவும் உமக்கு நன்றி அப்பா. அவர்கள் எடுத்த தீர்மானத்தில் நிலைத்திருந்து, ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் அன்றாட வாழ்வில் கண்டுகொள்ளவும், கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்காளாக நிலைத்திருந்து வாழவும் உதவி செய்வீராக, ஆமேன்.

Pas. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark

சுறா படம் பார்க்கப்போன விஜய் ரசிகர் தலை நசுங்கி பலி

April 30, 2010

 

நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள சுறா படத்தை பார்க்கப்போன ரசிகர் விபத்தில் தலை நசுங்கி மரணம் அடைந்துள்ளார். கோவை ஆர்.எஸ். புரம் சுக்கரவார் பேட்டை சின்ன எல்லை சந்து பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஈஸ்வரன்(19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தற்போது தான் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார்.
 
ஈஸ்வரன் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இன்று விஜய்யின் சுறா படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு தனது நண்பர்களோடு பூக்கடையில் உள்ள ஒரு தியேட்டரில் கட்அவுட்கள் கட்டியுள்ளார். பின்னர் நள்ளிரவு வீட்டுக்கு சென்றார்.
 
இன்று அதிகாலை 6 மணிக்கு திரையிடப்பட்ட ரசிகர்கள் காட்சிக்காக டிக்கெட் வாங்கியிருந்தார். இதையடுத்து இன்று அதிகாலை படம் பார்க்க அதே பகுதியை சேர்ந்த நண்பர் குணசீலன அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கிளம்பினார்.
 
சுக்ரவார் பேட்டை அருகே வரும் போது கரூரில் இருந்து கவுண்டம்பாளையத்திற்கு மணல் ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த சைக்கிளில் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி பைக் லாரிக்கு அடியில் சிக்கியது. லாரியின் பின் பக்க டயர் ஈஸ்வரன் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
 
பின்னால் இருந்த குண சீலன் கால் துண்டானது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
 
விபத்தில் ஈஸ்வரன் இறந்த செய்தி கேட்டதும் தியேட்டரில் நின்ற நண்பர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரி வந்தனர். அவர்கள் ஈஸ்வரனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பார்வதி அம்மா மருத்துவத்துக்காக இந்தியா வருவதற்கு விசா அனுமதி தருமாறு கேட்டு தமிழக முதல்வருக்கு கடிதம்

April 30, 2010

பார்வதி அம்மா மருத்துவத்துக்காக இந்தியா வருவதற்கு விசா அனுமதி தருமாறு கேட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்

தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும்! மகனுக்கு முரளி அட்வைஸ்!

April 30, 2010

நடிகர் முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகமாகும் படம் பாணா. இப்படத்தின் இசை வெளியீட்டு ‌விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் முரளி பேசுகையில், தனது மகனுக்கு அட்வைஸ் மழை பொழிந்தார். அவர் பேசியதாவது: என் மகன் என் தொழிலுக்கு வந்திருப்பதில் ரொம்ப சந்தோஷம். 30 வருஷமா எத்தனையோ வெற்றியாளர்களை அறிமுகப்படுத்திய சத்யஜோதி பிலிம்ஸ் என் மகனையும் அறிமுகப்படுத்தியதில் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

எனக்கு திரையுலகில் தெய்வம் ராஜா சார்தான். எனக்கு வாழ்க்கை கொடுத்த ராஜா சார், எனக்கு நல்ல பாடல்களை போட்டுக் கொடுத்தார். யுவனிடம் ஒரு வேண்டு‌கோள் வச்சேன். அப்பா மாதிரி என் மகனுக்கு நீங்க நல்ல பாடல்களை கொடுக்கணும்னு சொன்னேன். அவரும் 5 பாடல்களை சிறப்பா தந்திருக்கார். அதர்வா நல்லா டான்ஸ் பண்ணியிருக்கார். எனக்கு சுத்தமா டான்ஸ் ஆடவே வராது. ஆத்தாடி பாவாடை…. பாடலில் ஆரம்பிச்சி, தஞ்சாவூரு மண்ணு எடுத்து… பாடல் வரைக்கும் ஏதோ ஒப்பேற்றி ஆடிட்டேன்.

நான் செய்த ஓராயிரம் தவறுகளை மன்னித்து, பத்திரிகைகள், தொலைக்காட்சி மக்கள் என்னை வளர்த்து விட்டார்கள். அதேபோல என் மகனுக்கும் உறுதுணையா இருக்கணும்னு கேட்டுக்கிறேன். சினிமாவில் மார்க்கெட் இருக்கோ, இல்லையோ… முதலித் தயாரிப்பாளர்கள் நம்ம முதலாளிகள். அவர்களுக்கு மரியாதை கொடுக்கணும். அவர்களை எப்பவும் மதிக்கணும்னு என் மகனிடம் சொல்லியிருக்கேன். எனக்கு வாழ்வு கொடுத்தவங்க நிறைபேர் சினிமாவுல இருக்காங்க. எல்லார்க்கும் செல்லப்பிள்ளையாத்தான் இருந்திருக்கேன், என்று முரளி பேசினார்.

தோல்வி கண்ட ரணிலுக்கு கட்சிக்குள் நெருக்கடி

April 30, 2010

கட்சி நிர்வாகிகளை நியமனத்தின் அடிப்படை யில் தேர்வு செய்வதற்கு பதிலாக, தேர்தல் நடத்தி தேர்வு செய்யும்படி, இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, அவரது கட்சிக்குள்ளேயே நெருக்கடி எழுந் துள்ளது.இலங்கையில் கடந்த மாதம் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது.

இந்த தேர்தலில் ரணில் கட்சிக்கு 60 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 2004ல் நடந்த தேர்தலில் இந்த கட்சி, 82 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.தற்போது ஏற்பட்டுள்ள தோல்வி காரணமாக, ஐக்கிய தேசிய கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனுமான சஜித் பிரேமதாசா கூறியதாவது:

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து, தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதித்தேன். அப்போது, கட்சிக்கு நிர்வாகிகளை தேர்வு செய்யும் நடைமுறை யில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, வற்புறுத்தினேன். தற்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நியமனத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த நடைமுறையை மாற்றி, தேர்தல் நடத்தி அதன் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறினேன். மேலும், தற்போதுள்ள சூழ் நிலைக்கு ஏற்றவாறு, கட்சியின் கொள்கை களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.இவ்வாறு சஜித் கூறினார்.

பலாலி விமான தளம் அமைக்க இலங்கைக்கு இந்தியா உதவி

April 30, 2010

இலங்கையில் பலாலி விமான தளமும், காங்கேசன் துறையில் துறைமுகமும் அமைத்து கொடுக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.இலங்கையில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் பிரதமராக டி.எம்.ஜெயரத்னே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய தூதர் அசோக் காந்தா, பிரதமர் ஜெயரத்னேவை சந்தித்து வாழ்த்துக்களை கூறினார்.

இலங்கைக்கு இந்தியா அத்தியாவசிய உதவிகளை செய்து வருவதற்கு ஜெயரத்னே நன்றி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலியில் விமானதளம், காங்கேசன் துறையில் துறைமுகமும் அமைக்க இந்தியாவின் உதவியை இலங்கை கோரியிருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று பலாலியில் விமான தளமும், காங்கேசன் துறையில் துறைமுகமும் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக, அசோக்காந்தா, ஜெயரத்னேவிடம் தெரிவித்ததாக இலங்கை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் காங்கேசன் துறையில் உள்ள 12 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் இந்தியாவின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிடா வெட்டி ரத்தம் குடித்த பூசாரிகள் : பரவசத்தில் பக்தர்கள்

April 30, 2010

வெள்ளித்திருப்பூர் பூசாரியூர் செம்முனிச்சாமி கோவில் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான, ‘குட்டிக்குடி’ திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில், ஆயிரக்கணக்கான ஆட்டுக் கிடாக்களை, பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்தினர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, பூசாரியூர் செம்முனிச்சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பண்டிகை மற்றும் தேர்த்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இக்கோவிலுக்கு பூசாரியூர், பூனாச்சி, வெள்ளித்திருப்பூர், பட்லூர் உட்பட அருகிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், ஆட்டுக்கிடாக்களை நேர்த்திக் கடனாக செலுத்துவர்.

பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான, ‘குட்டிக்குடிக்கும்’ திருவிழா அன்று, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாக்கள் வெட்டப்படும். நடப்பாண்டு, 15 நாட்களுக்கு முன், பூச்சாட்டுதலுடன் கோவில் திருவிழா துவங்கியது. குட்டிக்குடிக்கும் திருவிழாவான நேற்று, நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆட்டுக் கிடாக்களுடன் காலையிலிருந்தே பக்தர்கள் காத்துக் கிடந்தனர்.

சுவாமிக்கு பூஜை முடிந்து, மதியம் 3 மணிக்கு வனத்தில் கிடாக்களை வெட்ட ஆரம்பித்தனர். பக்தர்கள் கொண்டு வந்த கிடாக்களை, பூசாரிகள் சளைக்காமல் வெட்டி, அருகிலிருந்த தொட்டியில் வீசினர். கிடாக்களின் தலை ஒரு பக்கமும், முண்டம் ஒரு பக்கமும் போடப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஒரே ரத்த வெள்ளமாக காணப்பட்டது.

கிடாக்கள் வெட்ட வெட்ட, கோவில் பூசாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டு ரத்தம் குடித்ததை பார்த்து, பக்தர்கள் பரவசமடைந்தனர். பிறந்து இரண்டு நாட்களேயான குட்டியிலிருந்து, நான்கு வயது வரையுள்ள கிடாக்கள் வெட்டப்பட்டன. தொடர்ந்து, இரண்டு மணி நேரம் நடந்த ‘குட்டிக்குடி’ திருவிழாவை காண, நூற்றுக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். வரும் 15ம் தேதி, மூன்று நாட்கள் நடக்கும் மறு பூஜையன்று, தேர்த்திருவிழா மற்றும் மாட்டுச் சந்தை நடக்கவுள்ளது.

படப்பிடிப்பில் பாரதிராஜா அடிப்பார் என்று பயந்தேன் -அஞ்சலி

April 30, 2010

“அங்காடி தெரு” படத்துக்கு பின் பிசியான நடிகையாகியுள்ளார் அஞ்சலி. தொடர்ந்து “இரட்டைச்சுழி” படமும் ரிலீசாகியுள்ளது. இதில் இயக்குனர்கள் பாலச்சந்தர், பாரதிராஜாவுடன் நடித்துள்ளார்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம், மகிழ்ச்சி, தூங்காநகரம் படங்களும் கைவசம் உள்ளன. “இரட்டைச்சுழி” படத்தில் நடித்த அனுபவம் பற்றி அஞ்சலி சொல்கிறார்.

ரெட்டைச்சுழியில் பாரதிராஜா பேத்தியாக நடித்தேன். நன்றாக நடிக்காதவர்களை அவர் கடுமையாக திட்டுவார், அடிப்பார் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். எனவே அவருடன் நடிக்க முதலில் பயமாக இருந்தது.
இதுபற்றி அவரிடமே கேட்டேன். பதிலுக்கு பாரதிராஜா சிரித்தார். ரொம்ப காலத்துக்கு முன்புதான் நான் அப்படி இருந்தேன். சரியாக நடிக்காதவர்களை கண்டிப்பதெல்லாம் முன்பு நடந்தவை என்றார். அவர் வெளிப்படையாக பேசக்கூடியவர் சிறப்பாக நடித்தால் மனம் திறந்து பாராட்டுவார்.

அங்காடி தெரு படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். என் நடிப்பை பார்த்து ஏராளமான பாராட்டுகள் வருகிறது. படப்பிடிப்பு குழுவினரின் கூட்டு முயற்சியால்தான் அந்த படம் சிறப்பாக வந்தது.

டைரக்டர் வசந்தபாலன் இயக்கும் இன்னொரு படத்திலும் இதே படத்தில் உள்ள எல்லோரும் மீண்டும் பணியாற்ற உள்ளோம் என்றார்.

என் பிறந்தநாளில் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்

April 30, 2010

நடிகர் அஜீத்துக்கு மே 1-ந்தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாள் விழாவை தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சிலர் ஆடம்பரமாக நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தனது பிறந்தநாள் விழாவை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், அன்றைய தினம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்குமாறும், ரசிகர்களுக்கு அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

என்றும் என்னுடைய சாதனையிலும், சோதனையிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் ரசிகர்களுக்கு வணக்கம் கலந்த நன்றி! நான் தற்போது “பார்முலா” ரேசில் கலந்து கொள்ள ஸ்பெயின் நாட்டிற்கு வந்துள்ளேன். இத்தருணத்தில் மே 1-ந்தேதி என் பிறந்தநாள் அன்று நான் சென்னையில் இருக்க வாய்ப்பு இல்லை.

எனவே என் மேல் உள்ள அபிமானத்தின் காரணமாக ரசிகர்கள் நேரில் வருவதையோ, ஆடம்பரமாகவும், விமரிசையாகவும் பிறந்தநாள் விழா கொண்டாடுவதையோ தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்களுக்கு இடைஞ்சலின்றி விளம்பரம் இல்லாமல் செய்யப்படும் நலத்திட்டங்களில் ஈடுபட்டு கண்ணியத்தை காத்து கட்டுப்பாடு மீறாமல் கொண்டாடப்பட்டால் அதுவே எனக்கு பிறந்தநாள் வாழ்த்தாகும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் இளைஞன்

April 30, 2010

முதல்- அமைச்சர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி உருவாகும் படம் இளைஞன். இதில் கவிஞர் பா. விஜய் நாயகனாவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடிக்கின்றனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்

இதன் படப்பிடிப்பு துவக்க விழா இன்று காலை புளியந்தோப்பில் உள்ள பின்னி மில் வளாகத்தில் நடந்தது. பா.விஜய் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களை ஒன்று திரட்டி முதலாளிக்கு எதிரான போராட்டத்துக்கு தயார் ஆவது போன்று முதல் காட்சி எடுக்கப்பட்டது. இதில் முதல்- அமைச்சர் கருணாநிதி பங்கேற்று “ஆக்ஷன்” என்று சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன், மணிவண்ணன், அமிர்தம், தியாகு, முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம், தயாரிப்பாளர் எஸ்.மார்ட்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Page »

Bottom