Top

இலங்கை மோதலை கண்டித்து லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !

January 31, 2009

london-31.jpg 

இலங்கையில் தமிழ் மக்கள் மோதலில் பலியாவதை கண்டிக்கும் வகையில் சனிக்கிழமையன்று லண்டனில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் அதில் கலந்துக் கொண்டனர்.

லண்டன் நகரின் முக்கிய வீதிகளில் நடந்த இந்த பேரணியில் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆட்கள் நிறைந்துவிட்டதால், அந்தப் பாதையில் வாகனப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது.

பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடியிருந்தனர்.

கலந்து கொண்டவர்கள் அனைவரும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிகவும் கவலையுடன் காணப்பட்டார்கள்.

இலங்கையில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகின்ற பாதாதைகள், வீதி நாடகங்கள் ஆகியவற்றுடன், இலங்கை நிலைமைகளை இட்டு இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமரன் என்ற இளைஞரின் படங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அதிகமாக தாங்கி நின்றதை காணக்கூடியதாக இருந்தது.

வில்லனாக நடித்தால் தப்பா?

January 31, 2009

sibiraj.jpg
நாணயம் படத்தில் வில்லனாக நடிக்கிறார் சிபிராஜ். இதுகுறித்து அவர் கூறியதாவது:இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் தகவல் கேட்டு ‘ஹீரோவாக நடிக்கும் நீங்கள், வில்லனாக மாறுவது சரியில்லை’ என்று சிலர் கூறினர்.

வில்லன் வேடத்தில்தான் நடிப்பை அதிகமாக வெளிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றேன். இது ஒன்றும் தப்பான விஷயம் இல்லையே. பிரசன்னா ஹீரோ என்றாலும், அவருக்கு இணையாகவே என் வேடம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரசன்னா ‘அஞ்சாதே’ படத்தில் வில்லன் வேடத்தை ஏற்று நடித்திருந்தார். அது அவருக்கு பாராட்டை பெற்று தந்தது. இந்தப் படம் எனக்கு பாராட்டைப் பெற்றுதரும்.  இதையடுத்து நந்தகுமார் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன்.இவ்வாறு சிபி கூறினார்.

முத்துக்குமார் நமது கதாநாயகன் சத்தியராஜ் !

January 31, 2009

satyaraj2.jpg 

 நடிகர் சத்தியராஜ் இங்கிலாந்தில் நடைபெறும் ஊர்வலத்தில் பங்கேற்கும் மக்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது தமிழ் மக்கள் படும் அவலத்தினால் துடிதுடித்து மடிந்த வீரன் முத்துக்குமாருவே இன்று நமது மாவீரனாகிவிட்டார் என்றும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும் பெரும் எழுச்சி அலை மோதுவதாகவும் அவர் தெரிவித்தார். மாவீரன் முத்துக்குமாருவுக்கு மக்கள் பெருந்திரளாக அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரையுலகமே முத்துக்குமாருவுக்காக ஆதரவு செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் !

January 31, 2009

britan2.jpg 

சிங்களப் பேரினவாதத்தின் தமிழினப் படுகொலையை நிறுத்தக் கோரியும் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும்  வன்னி மக்களை காக்குமாறும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை  ஆரம்பித்துள்ளனர்.  ஒரு இலட்சத்திற்கும்  மேற்பட்ட மக்கள் பங்குபற்றியுள்ள இவ் ஊர்வலமானது மில் பாங்க்  இலிருந்து ஆரம்பித்து ரெம்பிள் பிளேஸ்  வரை செல்லவுள்ளது. எனினும் தற்போதும் மக்கள் அலைஅலையாக வந்து ஊர்வலத்தில் சேர்ந்தவண்ணம் உள்ளனர். இவ் ஊர்வலத்தில்  பங்குபற்றிய அனைத்து மக்களும் தம் தமிழ் உணர்வுகளை வெளிப்படுத்தி கோசங்களை முழக்கியவண்ணம் செல்கின்றனர்.   

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுடன் சுவிஸ் தமிழர் பேரவை சந்திப்பு !

January 31, 2009

சுவிஸ் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியப் பிரிவுப் பணிப்பாளரை சந்தித்து வன்னியில் பாரிய மனிதப் அவலத்துக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளர் த.நமசிவாயம், உபதலைவர் சண். தவராஜா ஆகியோர் நேற்று முன்நாள் வியாழக்கிழமை (29.01-2009) ஜெனீவாவில் அமைந்துள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகத்தில் தெற்காசியப் பிரிவுப் பணிப்பாளர் திருமதி மொனிக்கா ஸனறல்லியை சந்தித்து இந்த வேண்டுகோளை முன்வைத்தனர்.

அப்போது தெற்காசிய பிரிவுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாவது:

வன்னியில் பொதுமக்கள் தங்கியிருக்கும் வரை தங்களது மனிதாபிமானப் பணி தொடரும் எனவும்
மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சகல தரப்பினருடனும் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் எவ்வளவு காலம் மக்களுக்குப் பணி செய்ய முடிகிறதோ அவ்வளவு காலம் தாம் பணியாற்றத் தயராக இருப்பதாகவும்

எந்தவொரு குடிமக்களும் தாம் விரும்பும் இடத்தில் வாழும் உரிமையுடையவர்கள். அவர்களை ஓரிடத்தை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கவோ, அவர்களின் வெளியேற்றத்தைத் தடுக்கவோ யாருக்கும் உரிமையில்லை எனவும்

அதேபோன்று, ஒரு தரப்பு செய்யும் தவறை, மற்றைய தரப்பு தாம் தவறிழைப்பதற்கான நியாயப்படுத்தலாகக் கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

வன்னியில் பாரிய மனித அவலத்துக்கு ஆளாகியிருக்கும் மக்களைக் காப்பாற்றுமாறு, சுவிஸ் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் அனைத்துலக தொண்டு நிறுவனங்களையும், அனைத்துலக இராஜதந்திரிகளையும்
 

ஐ.நா.வின் அறிவிப்பினையடுத்து இளையோரின் உண்ணாநிலை போராட்டம் இடைநிறுத்தம் !

January 31, 2009

swis-31.jpg 

சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சுவிஸ் தமிழ் இளையோர் கடந்த புதன்கிழமை (28.01.09) தொடங்கிய உண்ணாநிலை போராட்டம் ஐ.நா. அலுவலகத்தினரின் சாதகமான அறிவிப்பினைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.  உடனடியாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும்

வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் அவர்கள் நேரடியாக உண்ணாநிலை போராட்டம் நடத்தும் தம்மைச் சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து நடத்தப்பட்டது.
 
 ஆயிரத்துக்கும் அதிகமான சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஐ.நா. முன்பு அணிதிரண்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

நேற்று முன்நாள் வியாழக்கிழமை மாலை தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை ஐ.நா. மன்றத்திடம் கையளித்த இளையோர் ஐ.நா. சபை முடிவுக்காக ஆயிரக்கணக்கான மக்களுடன் நேற்று மாலை காத்திருந்தனர்.

இளையோரின் வேண்டுகோளுக்கான சாதகமான பதிலை எதிர்வரும் வியாழக்கிழமை (05.02.09) தாம் அளிப்பதாகவும், அதன் அடிப்படையில் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்துமாறும் மாலை 7:30 நிமிடமளவில் ஐ.நா. அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

மாலை 8:00 மணியளவில் உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்திய இளையோர் வியாழக்கிழமை தமக்குச் சாதகமான பதில் வராத பட்சத்தில் நீராகாரம் இன்றித் தாம் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக கூடி நின்ற மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளும் இளையோருக்கு ஆதரவு அளிக்க ஐ.நா. சபையை நோக்கி அணிதிரண்ட சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் துண்டுப்பிரசுரங்களை சுவிஸ் மக்களுக்கு விநியோகித்தனர்.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்களில் ஜெனீவா ஐ.நா. முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் அதேவேளை, சிறிலங்கா அரசின் தேசிய நாளான பெப்ரவரி 4 இல் ஐ.நா. சபை முன்றலில் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.

இந்த ஒன்றுகூடலில் அனைத்து தமிழ் மக்களையும் இந்நாள் தமிழர்களின் கரிநாள் என்று உலகுக்குப் பறைசாற்ற அணிதிரளுமாறும் சுவிஸ் தமிழ் இளையோர் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன், எதிர்வரும் வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் அதேவேளை, ஐ.நா. சபையினால் சாதகமான பதில் வராத பட்சத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தண்ணீர் அருந்தாது போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக இளையோர் தெரிவித்துள்ளனர்.  முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மூலம் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்ட அனைவரையும்

தமிழர்களை காக்க, புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் ஒபாமாவுக்கான தமிழர்கள் வேண்டுகோள்

January 31, 2009

obama-272.jpg
தமிழினத்தின் ஒரே காவலர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் – புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து – தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என “ஒபாமாவுக்கான தமிழர்கள்” அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குடியேறியிருக்கும் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்ட  “ஒபாமாவுக்கான தமிழர்கள்” என்ற அந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்று வரும் போரை, விடுதலைப் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறிலங்கா சித்தரித்து வருகின்றது. மேற்குலகமும், மேற்குலக ஊடகங்களும் கூட – உண்மையை மறைத்து – கொழும்பு அரசின் போக்கிலேயே பெருமளவில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில், கொழும்பு அரசின் அரச பயங்கரவாதமே, உண்மையில் மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகளை உருவாக்கியிருக்கின்றது.
 
சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் – அதிகாரங்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தினால் பறித்தெடுக்கப்பட்டதுடன், அதனை தமிழர்களுடன் பகிர்வதற்கு அவர்கள் முன்வரவில்லை.

தமது அரசியல் உரிமைகளைப் பெற அமைதியான – சட்டபூர்வமான – வழிகளில் தமிழ் மக்களாலும், அவர்களது தலைவர்களாலும் முப்பது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவையும் சிறிலங்கா அரசு முறியடித்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போர் – பிரித்தானியா சிறிலங்காவை விட்டு சென்ற 1948 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அன்று முதல் -

தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர்.

தமிழருக்கு எதிரான நாடு தழுவிய இன வன்முறைகள் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன.

சிங்கள மொழி அதிகாரபூர்வ மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழ் மக்களின் வேலை வாய்ப்புக்களும், கல்வியும் தடுக்கப்பட்டது.

பௌத்த சமயம் நாட்டின் சமயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், இந்து சமயமும், கிறிஸ்தவ சமயமும் புறக்கணிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளின் பிறப்பிற்கு முன்னரே இவை எல்லாம் நடைபெற்றுள்ளன.

சிறிலங்கா அரசின் இந்த தமிழின ஓடுக்குமுறைகளும், வன்முறைகளுமே விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியிருந்தது. விடுதலைப் புலிகளின் பிறப்பு தவிர்க்க முடியாததாக அமைந்தது.

தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஆயுத வன்முறைகள் முடிவற்றவையாகத் தொடர்கின்றன. தமிழ் மக்களின் மீதான மெதுவான இந்த இனச் சுத்திகரிப்பாக இது நடைபெறுகின்றது. சிறிலங்காவின் அண்மைக்கால இராணுவ வெற்றிகளை நோக்கும் போது – இறுதியாக அரசு விடுதலைப் புலிகளை முறியடித்துவிடுமோ என்று தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர்.

எமது பிரச்சினை இது தான்: விடுதலைப் புலிகள் இயக்கம் தான் – திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வன்முறைகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு. விடுதலைப் புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டால், தாம் முற்றாக அழிவுக்கு உட்படலாம் என தமிழ் மக்கள் இப்போது அஞ்சுகின்றனர்.
பெரும் அழிவிலிருந்து தமிழ் மக்களைக் காக்க வேண்டும் எனில், விடுதலைப் புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
 

மீண்டும் இன்று 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் சிறிலங்காவால் கொலை 129 பேர் படுகாயம் சுதந்திரபுரம் மக்கள் காப்பு வலயம் கொலைக் களமாகியது அவலப்பட்டு மக்கள் சிதறி ஓட்டம் !

January 31, 2009

vanni-29.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதி மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள்  படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 129 பேர் படுகாயமடைந்துள்ளனர் என “புதினம்” செய்தியாளர் சுதந்திரபுரத்தில் இருந்து தகவல் தருகின்றார்.
சுதந்திரபுரம் “மக்கள் பாதுகாப்பு வலய”த்திற்குள் இடம்பெயர்ந்து திரளாகத் தங்கியிருந்த பொதுமக்கள் மீது இன்று சனிக்கிழமை காலை 9:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதே பகுதி மீது, மீண்டும் பிற்பகல் 12:30 நிமிடமளவிலும், மீண்டும் பின்னர் பிற்பகல் 2:00 மணியளவிலும் பொதுமக்களை இலக்க வைத்து சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதில் 12 சிறுவர்கள் உட்பட 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில், அப்பகுதி மக்களின் குடியிருப்புக்கள் பெருமளவு அழிந்துள்ளதுடன் உடமைகள் மற்றும் ஊர்திகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை -
 
உடையயார்கட்டுப் பகுதி நோக்கி இன்று சனிக்கிழமை காலை 5:30 நிமிடத்தில் இருந்து தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதில், இதுவரை 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை -
 
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கியும் இன்று காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதில், இதுவரை 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
கடுமையான பீரங்கித் தாக்குதல் எல்லா இடங்களிலும் தொடர்வதாலும், மக்கள் நாலா பக்கமும் உயிரைப் பாதுகாக்க சிதறி ஓடுவதாலும், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த தமிழர்களின் பெயர் விபரங்களை சேகரிக்க முடியாதிருப்பதாக “புதினம்” செய்தியாளர் சுதந்திரபுரத்தில் இருந்து தெரிவிக்கின்றார்.
 

இளைய தளபதி போலிப் பெயர் தங்கர் ஆவேசம் !

January 31, 2009

 thangar.jpg

 தமிழ் சினிமா நடிகர்கள் வெறும் பெயரில் மட்டுமே புரட்சியை வைத்துள்ளார்கள். புரட்சித் தளபதி, இளைய தளபதி என்று வெறும் பெயர்களை மட்டுமே புரட்சியாக வைத்துள்ளார்கள். நடிப்பதற்கு கோடி கோடியாக பணத்தை வாங்கிக் கொண்டு தமிழையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு ஒரு புரட்சிப் பட்டம் தேவையா என்றும் கேட்டார் தங்கர்பாச்சான்.  ஈழத் தமிழருக்காக எதையுமே செய்யாமல் உண்ணாவிரத மேடையில் இருப்பது வெட்கமாக இல்லையா என்றார். தமிழில் எத்தனையோ தயாரிப்பாளர் உள்ளனர் ஆனால் ஈழப் பிரச்சனையை படமாக்க யாருமே முன்வரவில்லை. தாய்மண் என்ற படத்தை எடுக்க ஆறு ஆண்டுகளாக தயாரிப்பாளரை தேடுகிறேன் இன்றுவரை கிடைக்கவில்லை என்றும் பொரிந்து தள்ளினார். பெரும்பாலான படங்கள் தோல்வியடைய கதையில் ஜீவன் இன்மையே காரணம் என்றார். நடிகர் விஜய்யிடம் நடிக்க கால்ஷீட் கேட்டு ஏமார்ந்த தங்கர் கோபத்தை இறக்கி முடித்துள்ளார். அதேவேளை இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் பேசிய தங்கர் முத்துக்குமாருக்கு வீர வணக்கம் கூறினார்.

பிரபாகரன் உருவம் பொறித்த துணியால் போர்த்து முத்துக்குமார் இறுதி ஊர்வலம் !

January 31, 2009

muthu.jpg 

மானத்தமிழன் முத்துக்குமார் மறத்தமிழன் தம்பி பிரபாவின் உருவத்துடன் பயணம் !
தீப ஒளியுடன் திருமகன் திருவீதி ஊர்வலம் !
இக்குனர் அமீர் ஊர்வல வண்டியில் உணர்ச்சிப்பயணம் !
புதுவை இரத்தினதுரை வீரக்கவிபுனைவு !
முத்துக்குமாரின் மரணம் உலகம் முழுவதும் தீ மூட்டியது !

 முன்னையிட்ட தீ முப்புரத்திலே !
 பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே !
 அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே !
 நீயுமிட்ட தீ மூழ்க மூழ்கவே ! Read more

Next Page »

Bottom