Top

செவ்வாய் கிரக சந்திரனின் புதிய துல்லியமான புகைப்படங்கள் !

July 31, 2008

mars.jpg 

 ஐரோப்பாவின் “மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ விண்கலமானது செவ்வாய்க்கிரகத்தின் “போபொஸ்’ சந்திரனின் அரிய துல்லியமான புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளது. கடந்த ஜூலை 23 ஆம் திகதி பாறை வடிவான மேற்படி சந்திரனை 93 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து சென்ற மேற்படி விண்கலத்திலிருந்துஇ உயர் தொழில்நுட்ப புகைப்படக்கருவி மூலமாகவே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

உருளைக்கிழங்கு வடிவான “”போபொஸ்” சந்திரனானது 27 கிலோமீற்றர் விட்டமுடையது. இந்நிலையில் “மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ விண்கலமானது மேற்படி சந்திரனின் முன்னொருபோதும் புகைப்படமெடுக்கப்படாத பகுதிகளைப் படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“போபொஸ்’ சந்திரனானது முதன்முதலாக 1877 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான அஸாப் ஹோலால் கண்டு பிடிக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தைச் சுற்றிய இந்த சந்திரனின் சுற்றுவட்டப் பாதையானதுஇ ஒவ்வொரு 100 மில்லியன் வருடங்களுக்கும் 1.8 மீற்றரால் குறுகி வருகிறது.

இதன் பிரகாரம் 50 மில்லியன் வருடங்களில் இந்த சந்திரனானதுஇ செவ்வாய் கிரகத்துடன் மோதும் அல்லது சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்வு கூறப்படுகிறது. நு-அயடை வழ ய கசநைனெ 
 

தமிழக மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிக்க வழிசெய்யும் வரைவு ஒப்பந்தம் இலங்கையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது !

July 31, 2008

tamil-fish.jpg 

தமிழக மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்க இலங்கை அரசால் உரிமங்கள் வழங்கப்படுவதற்கு வழிவகுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது இலங்கை அரசின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி தெரிவித்தார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தெற்காசியக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டில் கலநதுகொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை கொழும்பு செல்ல இருக்கும் நிலையில் மீனவர் பிரச்சினை தொடர்பாக வியாழக்கிழமை புதுடெல்லியில் தமிழக மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறைச் செயலர் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயர் திரிபாதி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

அப்போது தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினை தொடர்பாகவும் அதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் கச்சத்தீவு உடன்படிக்கையை மறுஆய்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் பிரதமரிடம் எம்.கே. நாராயணன் கருத்துக்களைத் தெரிவிப்பார்

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்றாலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் தமிழகத்தின் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை 5 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் மூன்று மீனவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் இருவர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடற்படையும் கடலோரக் காவல் படையும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருப்பதாக தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு !

July 31, 2008

ltte.jpg 
விடுதலைப் புலிகளில் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்த 46 வயதான டேனியேல் எனப்படும் தம்பியண்ணா என்பவரை கைது செய்திருப்பதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியைச் சேர்ந்த இவர் கடற்புலிகளின் தலைவரான சூசை அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்பட்டு வந்ததாகவும் கடற்புலிகளுக்கு தேவையான நீச்சல் உபகரணங்கள் படகுகள் தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் வெடி பொருட்கள் ஆகியவற்றை இலங்கைக்கு கடத்தியதாகவும் தமிழக காவல்துறை கூறியுள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறையில் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்துவந்ததில் அவர் ஒரு முக்கியமான நபர் என்று தமிழக காவல்துறையில் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரியான ஜாஃபர் சேட் தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அவர் தமிழகத்துக்கு வந்ததாகவும் இலங்கைக்கு பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வெளியிட்ட தகவலையடுத்து தொடர்ந்து தம்பியண்ணா கண்காணிப்பட்டு பிறகுதான் கைது செய்யப்பட்டதாகவும் ஜாஃபர் சேட் மேலும் தெரிவித்தார்.

புலம் பெயர் தமிழரின் வெள்ளிவிழாவும் வெற்றி விழாவும் !

July 31, 2008

25-yers-flash.jpg 

புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர் 01.08.08

 புலம் பெயர் தமிழரின் வெள்ளிவிழாவும் வெற்றி விழாவும் !

 ஈழத் தமிழர்கள் மேலை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. கறுப்பு யூலையின் 25 வது வருடம் பெற்ற முக்கியம் போல, நாம் புலம் பெயர்ந்த 25 வது ஆண்டு நம்மிடையே கூட அதிக முக்கியத்துவம் பெறவில்லை. யூலைக்கலவரம் கொடுமையானது, அத்தகைய தீய செயலை தமிழ் மக்கள் என்றும் மறக்கலாகாது என்பதை நினைவுபடுத்துவது சரியானதே. இருப்பினும் அதுபோலவே சமகாலத்தில் தமிழர் புலம் பெயர்ந்த 25 வது ஆண்டு நினைவுகளை போற்றுவதற்கான முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டிருக்க வேண்டும், ஏனோ அது குறித்த பிரக்ஞை நம்மிடையே உருவாகவில்லை. Read more

மின்னல் தாக்கி 11 பசு மாடுகள் பரிதாப மரணம் !

July 31, 2008

germany-ko.jpg 

டென்மார்க் 31.07.08 வியாழன் மாலை 17.00
 ஜேர்மனியில் தென்புலத்தில் உள்ள பிறிய்போக் நகரத்தில் மின்னல் தாக்கியதால் 11 பசு மாடுகள் பரிதாப மரணமடைந்தன. கடும் மழை, காற்று, இடி முழக்கத்துடன் கூடிய காலநிலை நிலவியதால் இப்பசு மாடுகள் மரத்தினடியில் ஒதுங்கியபோது மின்னல் தாக்கியதில் மரணித்தன. இது போல டென்மார்க்கிலும் மின்னல் தாக்கி 35 வரையான பசுக்கள் சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தது தெரிந்ததே.

குடும்ப இணைவாக்கம் குறித்து பேச ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் டென்மார்க் வருகை !

July 31, 2008

eu-3.jpg 

டென்மார்க் 31.07.08 வியாழன் மாலை 18.45

 வெளிநாட்டில் இருந்து வரும் குடும்ப உறுப்பினரை இணைப்பதில் டென்மார்க் கடைப்பிடிக்கும் கொள்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுடன் இணைந்து வரவில்லை என்ற அதிருப்தி நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தவகையில் டேனிஸ் சட்டதிட்டங்கள் அதிருப்தி தரும் இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டென்மார்க் சட்டங்கள் மூன்றாவது நாட்டை சேர்ந்த ஒருவர் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் போக்குடையதெனவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. இச்சட்டங்கள் தொடர்ந்து இறுகிச் சென்றால் டென்மார்க் மீது வழக்கை போடுவதற்கான எத்தனங்களிலும் ஐரோப்பிய ஒன்றிய நீதியமைச்சர் ஜாக்குவாஸ் பரோற் குதித்துள்ளதாகவும் தெரியவருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் டென்மார்க்கின் வெளிநாட்டு கொள்கைகளில் தேவையற்ற முறையில் தலையிடுவதாக டேனிஸ் இணைவாக்க அமைச்சர் கூறியுள்ளார்.

டேனிஸ் நகரசபை அரசியல்வாதி நீரில் மூழ்கி பரிதாப மரணம் !

July 31, 2008

byrad-medelem.jpg 

டென்மார்க் 31.07.08 வியாழன் மாலை.

 டென்மார்க் கொல்பெக் நகரசபை உறுப்பினரான 59 வயதுடைய இயரிக் ஓகோட் நீரில் மூழ்கி மரணமடைந்தார். ருவநேஸ் கடற் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இவருடைய உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று லம்மபியோன் கடற்பகுதியில் தனது படகில் மீன்பிடிக்கச் சென்ற இவர் கடலில் குதித்து நீந்த முற்பட்டபோது காணாமல் போனார். இவரை உலங்குவானூர்தி சகிதம் தேடும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டும் பயனற்றுப் போயின. இவருடைய குடும்பத்தினரும் இவரைத் தேடும் முயற்சியில் குதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் எவ்வாறு மரணித்தார் என்பது குறித்து அறிவதற்கான பிரேத பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மர்மயோகியில் வில்லனாக நடிக்க சத்யராஜ் போடும் நிபந்தனை !

July 31, 2008

 satyaraj-2.jpg
 
 
 சத்யராஜுக்கும் ரஜினிக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம். அதுதான் உண்ணாவிரதப் பந்தலில் கொஞ்சம் சூடாக எதிரொலித்தது. ‘சிவாஜி’ படத்தில் வில்லனாக நடிக்க முதலில் சத்யராஜைத்தான் அழைத்தார்களாம். ‘சரி ஆனா ஒரு கண்டிஷன். அவரு படத்திலே நான் வில்லனா நடிக்கிறேன். என் அடுத்த படத்திலே அவரு வில்லனா நடிப்பாரா’ என்று சத்யராஜ் கேட்க இடத்தைக் காலி செய்தார்கள் அப்போது.
அதே ரிப்பீட் இப்போதும் நடந்திருக்கிறது. இந்த முறை சிக்கியவர் கமல். இவர் சார்பாக வேறொரு முக்கியஸ்தர் வந்து ‘மர்மயோகியில் வில்லனாக நடிக்கிறீர்களா சம்பளம் ஒரு பொருட்டே அல்ல’ என்றாராம் சத்யராஜிடம்.

அவரிடம் சிவாஜிக்கு சொன்ன அதே பதிலை சத்யராஜ் சொல்ல அவரும் சந்தடியில்லாமல் இடத்தைக் காலி செய்தாராம்.
 

ஒகேனக்கல் நான் தவறு செய்துவிட்டேன்-ரஜினி

July 31, 2008

rajani-kusalan.jpg
ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நாளை ரஜினியின் குசேலன் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால் ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று பேசிய ரஜினி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால்தான் குசேலன் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று கன்னட ரக்ஷ்ன வேதிகே மற்றும் கன்னட சளுவளி வாட்டாள் பக்ஷா ஆகிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந் நிலையில் ஹைதராபாத்தில் இன்று கன்னட தொலைக்காட்சிக்கு கன்னடத்தில் பேட்டியளித்த ரஜினி

ஒகேனக்கல் விவகாரத்துக்காக சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பொது மக்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்களைத் தான் உதைக்க வேண்டும் என்று சொன்னேன். வேறு யாரையும் அப்படிச் சொல்லவில்லை.

குசேலன் படத்தை தயவுசெய்து வெளியிட அனுமதியுங்கள்.

நான் கர்நாடகத்தில் ஒரு கண்டக்டராக இருந்தேன் என்பதை இன்றும் மறக்கவில்லை.

இந்த விவகாரத்தில் நான் பாடம் கற்றுக் கொண்டுவிட்டேன். கன்னட மக்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்துவிட்டனர். இனி அதே தவறை திரும்பச் செய்ய மாட்டேன்.

இனி எதி்ர்காலத்தில் யார் மனதும் புண்படாமல் பேசுவேன் என்றார்.

சிக்கல் தீருமா?:

இருப்பினும் ரஜினியின் மன்னிப்பை ஏற்க கன்னட அமைப்புகள் மறுத்துள்ளன. இதுகுறித்து கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா கூறுகையில் ரஜினிகாந்த் கர்நாடகத்திற்கு வர வேண்டும். 5 கோடி கன்னட மக்களிடமும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவரது படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறியுள்ளார். எனவே திட்டமிட்டபடி குசேலன் நாளை கர்நாடகத்தில் திரைக்கு வருமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

பெங்களூரில் 14 தியேட்டர்களில் குசேலன் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கர்நாடக வர்த்தக சபையின் தலைவர் நடிகை ஜெயமாலாவுக்கும் ரஜினி கடிதம் எழுதினார். அதில் கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் எதையும் கூறவில்லை. குசேலன் படம் ரிலீஸ் தடையால் ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்று ரஜினி கூறியிருந்தார்.

அந்தக் கடிதத்தை ஜெயமாலா இன்று வெளியிட்டார். ரஜின புண்படுத்தும் நோக்கத்தில் எதுவும் பேசவில்லை. அவருக்கு கர்நாடகாவும் தமிழகமும் ஒன்றுதான் என்று ஜெயமாலா கன்னட அமைப்புகளிடம் சமரசம் பேசினார்.

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் !

July 31, 2008

banana1.jpg
வாழைப்பழம் உண்மையில் மிகச் சிறந்த தாவர இனத்தைச் சேர்ந்ததாகும். சரிநுட்பமான முழு நிறைவான உணவுமாகும் இது. புரதத்துடன் மாவுச்சத்து வைட்டமின்கள் தாது உப்புக்கள் முதலியன போதுமான அளவு இப்பழத்தில் உள்ளன.

ஸ்டெபி கிராப்பைத் தொடர்ந்து அவரது காதலரான ஆண்ட்ரே அகாஸியும் டென்னிஸ் மேட்ச் நடைபெறும்போது வாழைப்பழத்தைதான் இடைவேளையில் சாப்பிடுகிறார். காரணம் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அடுத்த 15 நிமிடங்களுக்குள் ஜிவ்வென்று (35) அதிகரிப்பதால் உடலும் மனமும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. மற்ற உணவு என்றால் இன்னும் அதிக நேரம் ஆகும். இந்தச் சக்தி அடுத்த 40 நிமிடங்கள் வரை உடலில் இருக்கும் என்கிறார் ஜேன் கிரிஃபின். இவர் பிரிட்டிஷ் ஒலிம்பிக் அசோஷியேஷனில் விளையாட்டு வீரர்களுக்கு சத்துணவுத் திட்டம் அளிக்கும் நிபுணர். டென்னிஸ் வீரர்களைத் தொடர்ந்து அனைத்து விளையாட்டுத் துறை வீரர்களும் இனி வாழைப்பழத்தைதான் நன்கு சாப்பிட வேண்டும் என்கிறார். காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

இன்ற விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம்தான் என்கிறார்கள். புரதம் நரம்புகள் தளராமல் இளமை நீடிக்க கால்சியம் இரத்த சோகையைத் தடுக்கும் இரும்புச்சத்து இதயம் சீராய்ச் சுருங்கி விரிவடைய மக்னீஷியம் பாக்டீரியாக்களை அழிக்கும் ஹைடிரோ அமிலம் சோடியம் உப்ப இரத்தத்தைத் திரவ நிலையில் இருக்க உதவும் பொட்டாசியம்இ மூளை வளர்ச்சிக்கும்இ பார்வைத் திறனுக்கும் பாஸ்பரஸ் யு டீ ஊ என மூன்று வைட்டமின்களும் வாழைப்பழத்தில் உள்ளன.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.

மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும் முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால்இ பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.

விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா தோல்வியா என் நிர்ணயிப்பது அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான். பொட்டாசியம் அறவு குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில் முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்று விடுவாராம். விளையாட்டு வீரர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம் வாழைப்பழம்தான் என்கிறார் பிரிட்டிஷ் சத்துணவு நிபுணர் ஜேன்கிரிஃப்பின்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும் நீரிழிவு நோய் உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் தவிர்த்து விட வேண்டும்.

சோம்பேறிகளுக்கு சுறுசுறுப்பைத் தரும் வாழைப்பழத்தை எல்லா வயசுக்காரர்களும் விரும்பிச் சாப்பிடலாம். இதய நோய் காய்ச்சல் மூட்டுவலி மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும் அரிய பழம்  அரிய மருந்து இது.

Next Page »

Bottom