பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் சவாலை தொழிலாளர் ஏற்றுள்ளனர் – மேதின செய்தியில் ஜனாதிபதி !
April 30, 2008
பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை முன்னெடுக்கும் சவாலை பொறுமையுடன் தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அவர்கள் வழங்கும் பாரிய உதவியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் பெருமையுடன் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இலங்கை வாழ் தொழிலாளர்களுக்கு எனது வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தைப் பலப்படுத்துவதனூடாக எமது நாட்டின் அபிவிருத்திக்கு எமது தொழிலாளர்களினால் வழங்கப்படும் ஒத்துழைப்பை நான் மிகவும் பாராட்டுவதோடு இது வளமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்பும் மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையையும் அளிக்கின்றது. எமது தொழிலாளர்கள் நாட்டுக்கு பல அடைவுகளை ஈட்டித்தந்துள்ளனர். அந்த கௌரவத்தை தொழிலாளர்களுடன் நான் பகிர்ந்துகொள்ள முடியுமாக இருப்பது எனது அதிஷ்டமாகும். மக்களின் அபிலாஷைகளைச் சிறப்பாகப் புரிந்து கொண்டு சரியான பாதையில் எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள எமது நடவடிக்கைகளினால் அவர்கள் கௌரவப்படுத்தப்படுகின்றனர் என நான் நம்புகிறேன்.
தொழிலாளர்கள்இ இனஇ மதஇ குல மற்றும் அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஐக்கியமாக இருப்பது நாட்டுக்குப் பெரும் சக்தியாகும். நாட்டில் சமாதானம் சீர்குலையும் போது தொழிலாளர்களும் அவர்களது பிள்ளைகளுமே அதிகம் அல்லல்படுகின்றனர். பயங்கரவாதத்தை தோல்வி அடையச் செய்து சமாதானத்தை முன்னெடுக்கும் சவாலை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு அவர்கள் அரசாங்கத்துடன் நடந்து கொள்வது இந்த விடயத்தை புரிந்து வைத்துள்ளமையே காட்டுகிறது. இது நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அவர்கள் வழங்கும் பாரிய உதவியாகும்.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தைக் கொண்டுவருவதற்கான கொள்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. அதனாலேயே நாம் பொதுத்துறை ஊழியர்களைப் பலப்படுத்தும் அதேவேளைஇ தனியார்துறை ஊழியர்களின் உரிமைகளைக் காப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மக்கள் சார்பு அரசாங்கம் என்ற வகையில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதனூடாக உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கான நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தும் அதேவேளைஇ பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் குறைப்பதற்கும் நம் நடவடிக்கை எடுத்தோம். நாம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கும் தொடர்ந்தும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்திஇ நிலையான சமாதானத்தை அடைவதற்கõன சவால்களுக்கு முகங்கொடுப்பதில் தொழில் புரியும் மக்களின் தொடரான ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கின்றேன். அனைவருக்கும் நன்மையளிக்கக்கூடிய புதியதோர் இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதில் நாம் அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
புது வகை போதை வஸ்த்து பாவித்த இளைஞர் ஆறாவது நாளாக கோமாவில் !
April 30, 2008
டென்மார்க் 01.05.08
கடந்த வெள்ளியன்று 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மத்ஆம்பிரமின் என்ற புதுவகையான போதை வஸ்த்தை பாவித்த காரணத்தால் தொடர்ந்து ஆறு தினங்கள் கோமாவில் இருந்து வருகிறார். ஊதின்ச பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் நியூபோ நகரில் நடைபெற்ற சிறிய கொண்டாட்டம் ஒன்றில் வைத்து இந்தப் போதைவஸ்த்தை பாவித்துள்ளார். இவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக உதவி போலீஸ் அதிபர் ஜன் போவுல்சன் தெரிவித்தார். சம்பவதினம் கதிரையில் இருந்த இவர் விநோதமான முறையில் தலையைச் சுழற்றிச் சுழற்றி பார்த்துக் கொண்டார். பார்வை பறிபோயிருந்தவர் போல செயற்பாடு இருந்துள்ளது. சிறிது நேரத்தில் அங்கிருந்து காணாமல் போனார், பின் வீட்டுக்கு வெளியில் மோசமான நிலையில் காணப்பட்டவர் அவசரமாக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார். போதைவஸ்த்தை வழங்கியவர் குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன.
தசாவதாரம் பாடல்கள் வெளிவந்த ஆர்பாட்டத்திற்கு இணையாக அதனுடைய பாடல்களின் சிறப்பு இருக்கிறதா ?
April 30, 2008
தசாவதாரம் பாடல்கள் வெளிவந்த ஆர்பாட்டத்திற்கு இணையாக அதனுடைய பாடல்களின் சிறப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. படத்தின் இசையமைப்பாளர் கிமேஸ் ராஸ்மியா நேரமின்மை காரணமாக படத்திற்கான பின்னணி இசை கொடுக்க வரவில்லை என்று முன்னரே கூறப்பட்டது. இவர் இசைத்தட்டு வெளியீட்டுக்கும் வரவில்லை, ஆனால் விமானத்தை தவறவிட்டார் என்று கமல் பூசி மெழுகி சமரசம் செய்து கொண்டார்.
இந்தியில் பிரபலமாக இருக்கும் இவர் இசையமைத்தால் இந்தி விற்பனை நன்றாக இருக்கும் என்று திட்டமிட்டார்கள். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் இசையை போட்டிருந்தால் தசாவதாரம் புதிய பெறுமதி பெற்றிருக்கும் என்ற முணு முணுப்பு பல மட்டங்களில் நிலவுகிறது. பாடல் கவிதை வரிகளும் போதிய பலத்தை கொடுத்ததாகக் கூற முடியவில்லை.
ஆளவந்தான் போல பெரிய எதிர்பார்ப்பை வளர்த்து விட்டுவிட்டார்கள். இனி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு படத்திற்கு இருக்கிறது. ஆனால் ஒரு தடவை பார்க்க அனைவரும் வருவார்கள், அதன் மூலம் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியும் என்று கருதுகிறார்கள். அதிக விலை கேட்கப்படுவதால் ஐரோப்பிய வெளியீட்டாளர் படத்தை வாங்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார்கள் என்றும் தகவல்கள் கசிகின்றன.
சர்வதேச ரீதியில் இலங்கை ஓரங்கட்டப்படும் ஆபத்து !
April 30, 2008
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தெளிவான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் விடயங்களைக் குழப்பியடித்துக் கொண்டுள்ளதால் சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க இவ்வாறு எச்சரித்திருக்கின்றார்.
இலங்கை அரசு எந்தவிதமான ஜனநாயக விதிமுறைகளையும் மதிப்பதில்லை. அது பயங்கரவாதிகளைப் போன்று செயற்படுகின்றது. ஜனநாயக விதிமுறைகளை அரசு மதிப்பதில்லை என்பதை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது. இதேசமயம் தெளிவான வெளிநாட்டுக் கொள்கையின்றி சர்வதேச உறவு விடயங்களையும் அரசு குழப்பியடித்து வருகின்றது.
இதனால் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு பேரிடர்களைச் சந்திக்கும் அபாயத்துக்குள் ஆபத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது என்கிறார் ரவி கருணாநாயக்க.சேற்றுக் குளிக்குள் வீழ்ந்தவன் அதிலிருந்து மீளும் முயற்சியாக சேற்றை மென்மேலும் காலால் அழுத்திஇ மேலே எழும்பி வர எத்தனிப்பான். ஆனால் சேற்றை மேலும் மேலும் மிதிக்க மிதிக்க அவன் சேற்றுக்குள் புதைந்து போவான். ஆக சேற்றுக்குள் இருந்து மீள அவன் எடுக்கும் முயற்சியே அவனை அதற்குள் மேலும் ஆழமாகப் புதைத்துவிடும்.
அதுபோன்ற நிலையிலேயே இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு உள்ளது போலும்.
தன்னுடைய உள்நாட்டு விவகாரங்களைக் கையாளும் முறைமையினாலும் சர்வதேச உறவுகளைத் தீர்மானிக்கும் போக்கினாலும் சர்வதேச சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும் இக்கட்டு நிலைக்குள் இலங்கை அரசு சிக்கியுள்ளது. இந்த இக்கட்டிலிருந்து மீளும் எண்ணத்துடன் எதிர்பார்ப்புடன் அது மேற்கொள்ளும் சர்வதேச அணுகுமுறைகளும் தந்திரோபாயங்களும் கூட அதனை மேலும் தீவிர சிக்கல்களுக்குள்ளேயே மாட்டி வருகின்றன.
இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் மூன்றாம் மண்டல நாடு. அது வெளிநாட்டு உதவிகளிலேயே அதிகம் தங்கியுள்ளது.ஆனால் இறைமையுள்ள நாட்டுக்குரிய ஜனநாயக மாண்புகளைக் கடைப்பிடிக்கத் தவறிஇ அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரசுக் கட்டமைப்பு அதனால் சர்வதேச சமூகத்தின் பிரதான தரப்புகளினது கடும் கண்டனங்களுக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கின்றது.
இப்படி சர்வதேச சமூகத்தின் கடும் விசனத்துக்குள்ளாகியுள்ள அரசு அந்த அதிருப்தி நிலையையும் அதன் அடிப்படையில் சர்வதேச சமூகத்தின் பிரதான பாத்திரங்கள் எடுக்கும் பதிலடி நடவடிக்கைகளையும் புறந்தள்ளி உதாசீனப்படுத்துவதற்காக சர்வதேச மட்டத்தில் சேராத இடம் சேர்ந்து சிறுமைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை விஜயத்தை நிறைவுசெய்த ஈரான் ஜனாதிபதி இந்தியா பயணம் !
April 30, 2008
தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த ஈரான் ஜனாதிபதி மஹ்மூட் அஹமடி நிஜாட் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இன்று இந்தியாவிற்கு பயணமானார். இந்தியாவில் தங்கியிருக்கின்ற காலத்தில் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இபிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் இந்த விஜயத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திகொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படும்.
ஈரான் ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருந்த இரண்டு நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் அரசியல் முக்கியஸ்தர்கள் மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டவர்த்தக கப்பல் ஒப்பந்தம்இ உமா ஓயா திட்டம் எண்ணெய் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஈரான் இஸ்லாமிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தல் நிதி மற்றும் இலத்திரனியல் மேம்பாடு உள்ளிட்ட எட்டு ஒப்பந்தங்களை முன்னெடுத்து செல்வது அதற்கான நிதியுதவிகளை திரட்டிக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் அண்டிய பகுதிகளின் பாதுகாப்பு பன்மடங்காக பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவர் பயணம் செய்த வீதிகளின் இருமருங்கிலும் ஆயுதம் தரித்த படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு தேட இந்திய மத்தியஸ்தம் அவசியம் – பி.ஜே.பி தலைவர் ராஜ்நாத் தெரிவிப்பு !
April 30, 2008

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காண்பதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என இந்தியாவின் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த வலியுறுத்தலை புதுடில்லியில் விடுத்துள்ளார்.
இந்த முனைப்புக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக்கைதி நளினியை ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி சந்தித்தமையை மையக்கருவாகக் கொள்ள முடியும் என அவர் கேட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக இலங்கை இனப்பிரச்சனை குறித்து இந்தியாவில் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள் நிகழும் சம்பவங்கள் புதிய செய்தி ஒன்றை இந்தியா சொல்ல விரும்புகிறதா? என்ற கேள்வியை பலர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீதி விபத்தில் தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா படுகாயம் !
April 30, 2008
பொலன்னறுவ மாவட்டத்தின் தெஹியத்த கண்டிய அரலகன்வில சந்தகல தென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா படுகாயமடைந்துள்ளார். மேலும் இந்த வகான விபத்தில் களனிய பிரதேச சபையின் தலைவர் சீவலி கௌனிதிலக்க உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தின் காரணமாக அமைச்சர் மேர்வின் சில்வாவின் கைகள் மற்றும் கால்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது நெருங்கிய நண்பரான அமல் என்பர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு மேலதிக சிகிச்சை அளிக்கும் பொருட்டு அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படவுள்ளார்.
இன்று மாலை 4.30 அளவில் அமைச்சர் மேர்வின் சில்வா பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.அதிக வேகமாக சென்றதால் வீதியைவிட்டு விலகி மரமொன்றில் வாகனம் மோதியதாக பொலன்னறுவ சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை ஈரான் உறவு தொடர்பில் அமெரிக்கா கவலை !
April 30, 2008

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுவரும் நெருக்கம் குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ரொம் கஸி ஈரானிய ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் குறித்து நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
மேற்படி தெற்காசிய நாடுகள் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா.பாதுகாப்புச்சபை விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்குமாறும் ஈராக் விவகாரத்தில் தலையிடுவதை தவிர்க்குமாறும் ஈரானிய ஜனாதிபதியிடம் கலந்துரையாடுமென நம்புகின்றோம்.
அத்தோடு ஹமாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியளித்தல் போன்ற உபயோகமற்ற செயல்களை நிறுத்துமாறும் இந்நாடுகள் ஈரானிடம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம். ஈரான் தொடர்பில் அமெரிக்கா கடைப்பிடித்துவரும் கொள்கைகள் மிகவும் தெளிவானதும் வெளிப்படையானதுமாகும்.
நாம் எந்த நாட்டிடமோ வேண்டுகோளையோ உத்தியோகபூர்வ செய்திகளையோ இது தொடர்பில் அனுப்பவில்லை. ஏனெனில் எமது கொள்கைகளை சகல நாடுகளும் நன்கு அறியும். ஈரான் ஜனாதிபதி மஹ்மூட் அஹமடி நிஜாட் தனது தெற்காசிய விஜயத்தின்போது பாகிஸ்தான்இ இலங்கைஇ இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றில் பாகிஸ்தானும் இலங்கையும் அமெரிக்காவிடம் இருந்து அதிகளவான உதவிகளைப் பெற்றுவருவதோடு இந்தியா அமெரிக்காவுடன் அணுசக்தி செயற்றிட்டங்கள் குறித்து ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏமன் இத்தாலிய தூதரகத்தின் முன்னால் குண்டு வெடித்தது !
April 30, 2008
டென்மார்க் 30.04.08
ஏமன் நாட்டின் தலைநகர் ஸனாவில் அமைந்திருக்கும் இத்தாலிய வெளிநாட்டு தூதரகத்தின் முன்னால் இன்று புதன் முற்பகல் குண்டொன்று பாரிய ஓசையுடன் வெடித்தது. இதன் பின்னர் தூதரகத்திற்கு செல்லும் பாதை தடைசெய்யப்பட்டு தேடுதல் நடைபெற்று வருகிறது. சேத விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகள், ஸியா முஸ்லீம் பேராளிகள், அதிருப்தி கொண்ட கிளான் பிரிவினர் ஆகியோர் மீது சந்தேகம் நிலவுகிறது. குண்டு வெடிப்பு பாரதூரமானது என்று சாட்சிகள் தெரிவிப்பதாகவும், இதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
குடியுரிமை பெறும் டேனிஸ் மொழித் தேர்வு இலகுவானது டேனிஸ் மக்கள் கட்சி சீற்றம் !
April 30, 2008
டென்மார்க் 30.04.08
டென்மார்க்கில் உள்ள வெளிநாட்டவர் டேனிஸ் குடியுரிமையைப் பெற வேண்டுமானால் டேனிஸ் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய விசேட தேர்வில் சித்தியடைய வேண்டியது அவசியமாகும். சென்ற ஆண்டு புத்துருவாக்கம் செய்யப்பட்ட இந்தத் தகுதிகாண்; தேர்வானது மிகவும் கடினமானது என்று மொழியியலாளர்கள் தெரிவித்து வந்துள்ளனர். டேனிஸ்காரரே சித்தியடைய கடினமானது என்று வர்ணிக்கப்பட்ட இப்பாPட்சையை மிகவும் இலகுவானது என்று டேனிஸ் மக்கள் கட்சி கடும் அதிருப்தியடைந்துள்ளது. பாPட்சைக்கு தேற்றியவர்களில் சுமார் 97 வீதமானவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளமையால் பாPட்சை இலகுவானது என்று கட்சி கருதுகிறது. இது குறித்து டேனிஸ் மக்கள் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவுத் தவிசாளர் சோன் காருப் இணைவாக்க அமைச்சர் பியற்றா றொன் கொன் பாக்கை சந்தித்துப் பேச இருக்கிறார். அதேவேளை வெளிநாட்டு மக்களிடையே டேனிஸ் மொழியை கற்பதில் ஏற்படும் முன்னேற்றமே இந்தச் சித்தி என்ற கோணத்தில் நோக்குவதற்கும் இடமிருக்கிறது. இருப்பினும் வெளிநாட்டவர் குறித்த நல்ல பக்கத்திலான பார்வையை அரசுக்கு சுட்டிக்காட்ட யாரும் இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.








