மீட்டிய யாழும்…மீட்டாத வாழ்வும்!- இணுவை சக்திதாசன்
September 3, 2010
மீட்டிய யாழும்… …. மீட்டாத வாழ்வும்!
வாழ்வோடு போராடும்….
சில ஏழ்மையின் பீத்தல்கள் ..
கௌரவ முடி தரித்தாலும்
காட்டிக் கொடுத்து விடும் அம்மணமாயிருக்கும்
அவர்தம் வீட்டு வேலிகள்.
மாற்றி மாற்றி
ஓட்டியும் .. கிளித்தும் …
அரசியல் சாயம் பூசப்பட்ட
சுவர் ஒட்டிகளுடன் – யாழ்
ரோட்டோர மதில்கள்.
முகம் ..
தொலைத்தும்
வாழ்வின் இருப்புக்காய்…
முகவரி தொலையாமல்
ஒற்றைக் காலில் தவமிருக்கும்
பல இலட்சம் பனை மரங்கள்.
பள்ளமும் குழியுமாய்.. ஆங்காங்கே…
|தாரால்| ஒட்டு போடப்பட்டபடி ..
நீட்டி .. நிமிர்ந்து..
என் கிராமத்தை ஊடறுத்தபடி
மல்லாக்காய் படுத்திருக்கும் கே.கே.எஸ் வீதி.
கட்டிய தாலி..
|வெட்டிய| .. வெறுங் கழுத்து!
ஒட்டிய உடல் ஒட்டியபடி…
அவள் கட்டிய சாறி
ஒட்டாத குங்குமப் பொட்டு
பாதியழித்த வியர்வை…
மீதியழிக்க விடாமல் கெஞ்சும் பெண்மை!
விழிகளில் மட்டும் ஏக்கத்தின் தன்மை!
இல்லானையே தேடும் இல்லத்தரசி
இவள் ஒருத்தி மட்டுமல்ல… ஒராயிரம் |த்| திகளின் …
மீட்டாத வாழ்வும் இதற்குள்ளேயே மீட்டாதபடியுறங்குது!
ஆக்கம் . இணுவை சக்திதாசன் டென்மார்க்
டென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
September 3, 2010
டென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி வருடாவருடம் சிறப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே.. அதற்கமைவாக இந்த ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்வாண்டும் பல நாடுகளிலிருந்தும் விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்பதால் பொறிகக்கும் மோதல்கள் இடம் பெறும் என்று அறிய முடிகிறது. கேர்னிங்கை அண்மித்துள்ள போர்டிங் நடிரில் இப்போட்டி நாளை சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.
நடிப்புத்துறையில் பொன்விழாவும் தாய்மடி நூல் வெளியீடும்
September 3, 2010
href=”http://www.alaikal.com/news/wp-content/pon-flash6.jpg”>
டென்மார்க்கின் புகழ்பெற்ற நடிகர் நடிகவினோதன் ரீ.யோகராஜாவின் நடிப்புத்துறையில் பொன்விழாவும் தாய்மடி நர்ல் வெளியீடும் எதிர்வரும் 04.09.2010 சனிக்கிழமையன்று டென்மார்க் றணாஸ் நகரில் உள்ள Nyvangskolen இல் பி.ப.16.00 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சிகள் :
மங்கள விளக்கேற்றல் : திருமதி. சுமித்திரா சுகேந்திரா, திருமதி. பவானி செல்லத்துரை, திருமதி சுமதி திருரவிச்சந்திரன், திருமதி சாந்தி சத்தியதாஸ், திருமதி திருமகள் சுகுமார்.
வரவேற்பு நடனம் : கலைமகள் யோகராஜாவின் மாணவியர்
பொன்விழா நிகழ்வு வாழ்த்துவோர் :
திருவாளர்கள் : கே.எஸ்.துரை, ரீ.தயாநிதி ( சின்னக்குட்டி பாரீஸ் ) இரா. குணபாலன் ( பாரீஸ் ) சுதா ஆசைப்பிள்ளை ( இலண்டன் ) எஸ்.இராஜகோபால், எஸ்.எஸ். குணலிங்கம், கவிஞர். கோணேஸ் ( நோர்வே ) ந. முரளிதாஸ், மா. தேவன், ரா. குணசீலன், இராஜலிங்கம், ஸ்ரீஸ்காந்தராஜா, கரன் நடராஜா, Kurt Helge Zndersen ( Vesten Vinden )
சிற்றுண்டி வழங்கல்
இனிய கீதங்கள் : எஸ்.எஸ். குணலிங்கம், யோ. இளங்கோவன், ச. சத்தியா.
இசை . யோ. வள்ளுவன், தபேலா. கண்ணன்
தாய்மடி கவிதை நூல் வெளியீடு
தலைமை : திரு. க.திருரவிச்சந்திரன்
நூலின் தன்மை : திருமதி. சரஸ்வதி இராஜகோபால்
நூலின் வன்மை : திரு. கரவைதாசன்
உரைகள் : கவிஞர். வேலணையூர் பொன்னண்ணா, கவிஞர். எம்.சி.லோகநாதன், நடராசா சுப்பிரமணியம், இணுவையூர் சக்திதாசன், திருமதி வேதா இலங்காதிலகம், தர்மகுலசிங்கம், குலவீரசிங்கம், அன்பு, ரஞ்சன், திருமதி மரியாம்பிள்ளை.
ஏற்புரை : திரு. த. யோகராஜா
நடனம் : அலெக்ஸ் தவயோகவேணியன்
மாயாஜாலம் : திரு. எஸ்.இராஜகோபால்
நாடகம் : ரிரிஎன் – புகழ் நையாண்டிமேளக் கலைஞர்கள்
நன்றியுரை
தொகுப்பு : கொக்குவில் கோபாலன்
நாளை தாய்மடி நூல் வெளியீடு
September 3, 2010
டென்மார்க் வாழ் கலைஞர், கவிஞர் நடிகவினோதன் ரீ. யோகராஜாவால் எழுதப்பட்ட தாய்மடி என்ற கவிதை நூல் வெளியீட்டுவிழா நாளை சனிக்கிழமை றணாஸ் நகரில் உள்ள றணாஸ் நகரில் உள்ள லேஎயபௌமழடநn இல் பி.ப.16.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 72 பக்கங்கள் கொண்ட இந்தக் கவிதை நூலுக்கு காசி. ஆனந்தன் உட்பட பலர் முகவுரை எழுதியுள்ளனர்.
நூல் வெளியீட்டு விழாவின் தலைமை : திரு. க.திருரவிச்சந்திரன்
அங்கு பேசுவோர் விபரம்
நூலின் தன்மை : திருமதி. சரஸ்வதி இராஜகோபால்
நூலின் வன்மை : திரு. கரவைதாசன்
உரைகள் : கவிஞர். வேலணையூர் பொன்னண்ணா, கவிஞர். எம்.சி.லோகநாதன், நடராசா சுப்பிரமணியம், இணுவையூர் சக்திதாசன், திருமதி வேதா இலங்காதிலகம், தர்மகுலசிங்கம், குலவீரசிங்கம், அன்பு, ரஞ்சன், திருமதி மரியாம்பிள்ளை.
ஏற்புரை : திரு. த. யோகராஜா
கொஞ்சம் தப்பியிருந்தால் விமானத்தை சுட்டிருப்போம் – பிளேயர்.
September 2, 2010
அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தாக்குதலுக்குள்ளானபோது பிரிட்டனை நோக்கி ஒரு விமானம் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த விமானம் எங்கிருந்து வருகிறது, அதன் நோக்கம் யாது என்பது குறித்து ஒரு தொடர்பும் கிடைக்கவில்லை. பயங்கரவாதிகள் வரும் விமானம் என்று கருதி அதை சுட்டு வீழ்த்த ஆயுத்தமானது பிரிட்டன் விமானப்படை. கடைசி நேரத்தகவல் ரொனி பிளேயருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் உடனடியாக விமானப்படையின் போர்விமானத்தை அருகாக அனுப்பி ஆராய வழி செய்தார். அதன் பின்னரே அது பயணிகள் விமானம் என்று கண்டறியப்பட்டது. இல்லாவிட்டால் பெரும் அனர்த்தம் நடந்திருக்கும் என்று ரொனி பிளேயர் நேற்று முன்தினம் வெளியான தனது வாழ்க்கை வரலாற்று நூலில் தெரிவித்துள்ளார். ஒரு பெரும் விபத்து நடக்காமல் அருகாக சென்றதாக அவர் கூறியுள்ளார். அந்த நிகழ்வு நடக்காமல் தடுத்தமைக்காக கடவுளுக்கு நன்றியும் கூறியுள்ளார். இதுபோல பிரிட்டன் சுரங்க ரயில் நிலையத்தில் பிரேசிலிய அப்பாவி இளைஞன் ஒருவரை பிரிட்டன் போலீசார் பயங்கரவாதி என்று தப்பாகக் கணித்து சுட்டது கவனிக்கத்தக்கது.
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
September 2, 2010
பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.
குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், “இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை’என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.
தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,”என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை’என்றார்.
ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். “உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது’ என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
வாசகரிடையே வரவேற்புப் பெற்றுள்ள அலைகளின் ஆக்கம்
September 1, 2010
அலைகளில் வெளியான 46 வது மீன் கழிச்சல் என்ற ஆக்கம் புலம் பெயர் தமிழரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆக்கத்தை நோர்வேயில் வாழும் இ.மகேசன் எழுதியுள்ளார். தற்போதய நிலையில் என்னவிதமான அரசியல் முடிவெடுப்பது சரியானது என்ற தடுமாற்றம் புலம் பெயர் தமிழர்களிடையே நிலவுகிறது. இந்தக் கேள்விக்கு சரியான பதிலை பக்கச் சார்பற்ற முறையில் இக்கதை தருகிறது. இதனால் தமது அடுத்த கட்ட அசைவுக்கு இதை ஓர் ஆதார எண்ணமாகக் கருதலாம் என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல ஊடகங்கள் இதை மறுபிரசுரம் செய்து வருகின்றன. இதை நீங்களும் கண்டிப்பாக படிப்பது நல்லது. படிக்க விரும்பின் கீழேயுள்ள முகவரியை அழுத்துக..
http://www.alaikal.com/news/?p=45328#more-45328
பாம்பின் காலறிந்து டென்மார்க் வந்த சுவீடன் சோசல் டெமக்கிரட்டி
September 1, 2010
டென்மார்க் 01.09.2010 புதன் மாலை
சுவீடன் நாட்டில் பொதுத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நேரம் துவேஷத்தை தலையில் வைத்து கூத்தாடினாலே வெற்றி பெறலாம் என்ற நிலைக்கு டென்மார்க் போலவே சுவீடன் நாட்டு சோசல் டெமக்கிரட்டியும் வந்து சேர்ந்துள்ளது. இக்கட்சி வெளிநாட்டு பின்னணி கொண்டோரை கேலி செய்து விளம்பரப்படம் வெளியிட்டு வாக்கு சேகரித்து வருகிறது. இந்த விளம்பரம் துவேஷம் மிக்கது என்பதால் டென்மார்க் ஊடகங்கள் அதை தவிர்த்துள்ளன. இதனால் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இப்படியான நச்சுப் பாம்புகளை ஊர விடுவதில் டென்மார்க்கை விஞ்சிய அப்பன் சுவீடனில் வந்துவிட்டானே என்று நேற்று கவலை பிறந்தது. ஆனால் இன்றய செய்திகளின்படி இந்த விடீயோ விளம்பரத்தை தயாரித்த புண்ணிவான்கள் வேறு எங்குமே இல்லை சாட்சாத் டென்மார்க்கிலேயே இருப்பதாகவும், மற்றய நிறுவனங்கள் மறுத்த காரணத்தால் இங்கு வந்து செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாம்பின் கால் பம்பறியும் என்பது போல இப்படியான மலிவு வேலைகளை செய்ய டென்மார்க் போவதே நல்லதென சுவீடிஸ் சோசல் டெமக்கிரட்டி ஊர்ந்து வந்திருப்பது கவனிக்கத்தக்கது. இதே குச்சுப்பிடி ஆட்டத்தை டென்மார்க் சோசல் டெமக்கிரட்டியும் ஆட இடமுண்டு.
மாரடைப்பு குறைந்த நாடு டென்மார்க்
September 1, 2010
டென்மார்க் 01.09.2010 புதன் மாலை
மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதயத்தை நல்ல முறையில் பாதுகாத்து, மாரடைப்பில் இருந்து தப்பிக் கொள்வதில் டென்மார்க் பிரஜைகள் முன்னேற்றகரமாக இருக்கிறார்கள் என்று இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு குறித்து கருத்துரைத்த டேனிஸ் இதய பாதுகாப்பு சங்கம் மகிழ்வு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இளம் வயதினரிடையே மாரடைப்பு ஏற்படும் விகிதம் குறைவடைந்துள்ளது. சமீபகாலமாக டென்மார்க்கில் ஆரோக்கிய உணவு தேகப்பயிற்சி போன்றவற்றை கடைப்பிடிக்க தூண்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான பெறுபேறுகளும் இந்த முடிவில் கணிசமாக செல்வாக்கு செலுத்துவதாக ஆரோக்கிய உணவுப்பகுதி தொடர்பாளர் மார்பில் குத்தி மகிழ்வு தெரிவித்தார்.
20 செ.மீ. கத்தியுடன் யொப் சென்டருக்குள் நுழைந்தார் வேலை இழந்தவர்.
September 1, 2010
டென்மார்க் 01.09.2010 புதன் மாலை
டென்மார்க்கில் உள்ள யொப்சென்டர்களில் பணியாற்றும் ஊழியர்களில் பத்துக்கு நால்வர் என்ற அடிப்படையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக அவிஸ்டிகோ பத்திரிகையின் ஆய்வு தெரிவிக்கிறது. யொப்சென்டர்கள், வர்த்தக தொழிற்சங்க ஊழியர்களென மொத்தம் 200 பேரிடம் நடாத்திய தகவல் சேகரிப்பின் பின்னர் இந்தச் செய்தியை வெளியீடு செய்துள்ளது. அரசின் மீதம் பிடிக்கும் கொள்கை பலரை வேலை இல்லாத நிலைக்கு தள்ளுகிறது. உதவி கேட்டு யொப் சென்டர்களுக்கு ஓடும் ஆதரவற்ற இவர்கள் வலியைப் புரியாது வேலைக்கு போ என்று யொப் சென்டர்கள் அவஸ்த்தைப் படுத்துகின்றன. நொந்து போனவர்கள் போக வழியற்ற நிலையில் மிரட்டலை யொப் சென்டர்களை நோக்கி நகர்த்தவும் வாய்ப்பிருக்கிறது. இப்படி சுழல் சக்கரமாக மாறிய நோய் தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறிப்போட்டது போன்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதேவேளை இன்று ஓகூஸ் நகரத்தில் உள்ள யொப் சென்டருக்குள் ஒரு வேலை இழந்தவர் 20 செ.மீ.நீளமான கத்தியுடன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஏற்கெனவே கொல்ஸ்ரபோவில் ஒருவர் கொல்லப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது.














