நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. திராவிடர் விடுதலை கழக மாநகர தலைவர் நேருதாஸ், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நேருதாஸ், ரஜினி மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தர்பார் படம் திரையிடப்பட்டு இருக்கும் திரையரங்குகளின் முன்பு ஆர்ப்பாட்டம்…

ஶ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் பதவியிலிருந்து சந்திரிக்கா நீக்கம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அரசியல் சபை இம்முடிவை எடுத்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். கட்சியின் கட்சியின் முடிவுகளுக்கு மாற்றமாக நடந்துகொண்டமை தொடர்பில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் குறித்த பதவிக்கு அத்தனகல தொகுதியின் பதில் அமைப்பாளராக லசந்த அலகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்

இந்தியாவில் பல வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்தியதில் பங்காற்றியதாக கூறப்படும் மற்றும் 1993 ராஜஸ்தான் வெடிகுண்டு சம்பவத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் ஜலீஸ் அன்சாரி, இவர் Dr. Bomb என்று பலராலும் அறியப்படுகிறார். அவருக்கு வழங்கப்பட்ட 21 நாள் பரோல் காலம் முடியவுள்ள ஒரு நாள் முன்பு அவர் மும்பை வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்புப்பிரிவு, குற்றப்பிரிவு மற்றும் மும்பை பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ராஜ்தானி எக்ஸிபிரஸில் வெடிகுண்டு வைத்தது தொடர்பான குற்றச்சாட்டில் 1994 ஆம் ஆண்டு சிபிஐ - ஆல் ஜலீஸ் அன்சாரி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் 50 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு சம்பங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. 1993 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ரயில்களில்…

மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்த உறுதி பூணுவோம்

அனைத்து மக்களிடையேயும் புரிதலை ஏற்படுத்தி ஒற்றுமையை நிலைப்படுத்துவதற்காக இன்றைய தைத்திருநாளில் உறுதிகொள்வோமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே நல்ல மனமாற்றம் ஏற்படவேண்டியதன் அவசியத்தையும் தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி சுட்டிக் காட்டியிருக்கின்றார். ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப் பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இணைந்து கொள்கின்றேன். விவசாயத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் இன்றைய நாளில் சூரிய பகவானை நோக்கி பக்தியுடன் வழிபாடாற்றி நன்றி செலுத்தி வாழ்வில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டங்களினால் மக்கள் மத்தியில் உருவாகும் புதிய பிணைப்புக்கள் குடும்ப அலகுகளிலிருந்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விரிவடைந்து செல்கின்றன. இதனூடாக பெற்றோர் பிள்ளைகள், ஆசிரியர்கள் மாணவர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கிடையிலும் ஆட்சியாளர்கள்…

நல்லிணக்கத்துடன் வாழும் வளமான நாட்டை உருவாக்குவோம்

அனைவரும் அமைதியுடனும், அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நல்லிணக்கத்துடனும், சகல வளங்களுடனும் வாழக்கூடிய வளமான இலங்கைத் திருநாட்டைக் கட்டமைக்கும் எமது கனவு நிறைவேற இந்தத் தைமாதம் வழிசமைக்க வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, என் அன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! எம் தாய்நாடாம் இலங்கைத் திருநாடு பல்லின மக்களை கொண்டஒருநாடாகும். இங்குவாழும் ஒவ்வொரு இனத்தவருக்கும் அவர்களுக்கே உரித்தான தனித்துவமும் பெருமையும் மிக்க கலை,கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் பலவுள்ளன. இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் உள்ள தமிழர்களின் முக்கிய பண்பாட்டு விழாவாக தைப் பொங்கல் அமைகிறது. 'தை' என்பது புதியதொரு வளமான ஆரம்பத்தைக் குறித்து நிற்பதாகவே இயற்கையோடு ஒன்றி விவசாயத்தை மையமாகக் கொண்டு வாழ்ந்து வந்த பழந்தமிழர்கள்…

இன்னல்கள் நீங்கி வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும்

புரையாடிபோயுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், சமத்துவமும் மற்றும் நீதி ஆகியவற்றை கண்டடைய மலர்ந்துள்ள தைத் திருநாளில் வழி ஏற்படட்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தை திருநாளை முன்னிட்டு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் அதிக விளைச்சலையும், செழிப்பையும் தந்து தமிழர்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ இறைவனை பிரார்த்திப்பதாகவும் சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் உழவர் திருநாளாம் தை திருநாளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள இன்னல்கள் நீங்கி அவர்களின் வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையோடு தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம்

பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் கொண்டாடி மகிழும் நம்பிக்கை பெருநாளாக வரவேற்போம் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உழவர் திருநாள் என்றும், தமிழர் பெருநாள் என்றும் எமது மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று காலந்தோறும் கொண்டாடி வரும் தைப்பொங்கல் திருநாள் தமிழர் பண்பாட்டு அடையாளங்களை பறைசாற்றும் ஓர் புனித நாளாகும். இயற்கையை வணங்கிய எமது முன்னோர்களின் வரலாற்று பாரம்பரியங்களை ஏற்று எமது மக்கள் சூரியனுக்கு நன்றிசெலுத்தும் ஓர் உன்னத தினம் இது! தை பிறந்தால் வழி பிறக்கும், வழி பிறந்தால் வாழ்வு சிறக்கும்,..இந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்று எமது மக்களின் மனங்கள் தோறும் இன்று வீசத்தொடங்கியிருக்கிறது.. பழையன கழிந்து, புதியன யாவும் புகுந்து தமது வாழ்வு பூத்துக்குலுங்க வேண்டும் என்ற எமது மக்களின் கனவுகள் யாவும் நிறைவேற…

நிர்பயா வழக்கில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி தூக்கு உறுதியானது

நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை பெற்ற 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது. டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி ‘நிர்பயா’, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி நள்ளிரவு, ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அதே மாதம் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், ராம்சிங் என்பவன் திகார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டான். முகேஷ் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 பேருக்கு மரண…

LTTE உள்ளிட்ட 21 அமைப்புகள், 15 நபர்கள் தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியலில்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியல் (EU terrorist list) தொடர்பில் தனது பயங்கரவாத உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை நேற்று (13) புதுப்பித்துள்ளது. அதற்கமைய 15 தனிநபர்கள் மற்றும் 21 அமைப்புகளை தொடர்ந்தும் தனது பயங்கரவாத தடைப் பட்டியலில் உள்ளடக்குவதாக அறிவித்துள்ளது. இவ்வாறு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் நிதி மற்றும் சொத்துக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்படுவதோடு, அவை முடக்கப்படும் என்பது குறிப்பிடத்த்ககது. பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகளுக்கு ஏற்ப அவ்வமைப்பு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் எல்.ரி.ரி.ஈயை தொடர்ந்தும் தடைசெய்யும் பட்டியலில் உள்ளடக்கியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தடைசெய்யப்பட்ட 21 அமைப்புக்களில் ஒன்றாக எல்.ரி.ரி.ஈ அமைப்பு காணப்படுகிறது. 2006ஆம் ஆண்டு இந்த அமைப்பு முதன்…

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் (Serjev Lavrov) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (14) காலை நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 42 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை 6.35 அளவில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். அவர் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலய அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.