எச்.டபிள்யூ புஸ்சின் பூதவுடலுக்கு எயாபோஸ் – 1 ல் உயர் மரியாதை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சின் தந்தையான முந்திய அமெரிக்க அதிபர் எச்.டபிள்யூ புஸ் கடந்த வெள்ளி ரெக்சாஸ் ஹவுஸ்ரனில் உள்ள அவருடைய வீட்டில் மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 94. இவருடைய இறுதிக்கிரியை நிகழ்விற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பும் பாரியாரும் பங்கேற்க இருக்கிறார்கள். எதிர்வரும் ஐந்தாம் திகதி நாட்டின் கொடிக்கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், அரச கட்டிடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இறந்த முன்னாள் அதிபருக்கு அதி உயர் அரச மரியாதை வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார். முன்னாள் அதிபரின் பூதவுடல் டெக்சாசில் இருந்து வோஷிங்டனுக்கு அமெரிக்க விமானப்படையின் எயார் போஸ் வண் விமானத்தில் மரியாதையுடன் எடுத்து வரப்படும் என்றும் கூறியிருக்கிறார். எயார் போஸ் வண் பொதுவாக பதவியில் இருக்கும் அதிபர் பயணிக்கும் விமானமாகும். ஜேர்ஜ்…

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் ரியூப்தமிழ் புத்தகங்கள்

நேற்று கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய பரிசளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ரியூப் தமிழ் நிறுவனம் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கி, நிகழ்வை உலக மன்றுக்கு இணையவழி வழங்கியது. அத்தோடு இதற்கான சான்றிதழ்களை, உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகத்துடன் இணைத்தும் வழங்கி மாணவர்களுக்கு உற்சாகமூட்டியது. மேலும் வருகை தந்த பெற்றோருக்கு ரியூப் தமிழ் பத்திரிகைகளை இலவசமாக வழங்கும் நிகழ்வும் சிறப்போடு இடம் பெற்றது. போரினால் பாதிக்கப்பட்டு யாருமே கவனிக்காது விடப்பட்டுள்ள தாயகப் பகுதிகள் எவை என்று கேட்டீர்களானால் அதுகுறித்து வழங்க கைநிறைய ஆதாரங்கள் உள்ளன. யாருக்கு எதைச் செய்வது எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது ஒரு பெரிய கேள்விதான். ஆனால் எதைச் செய்ய முயன்றாலும் உள்ளத்தில் ஒரு கேள்வி எழும். நமது தாயகம் இந்த நிலைக்கு போனதற்கு முக்கியமான காரணம் என்ன..? என்ற கேள்விதான்…

ஆர்ஜண்டீனாவில் ஜி 20 நாடுகளின் இரண்டு நாள் மாநாடு ஆரம்பம்

தென்னமெரிக்காவில் உள்ள ஆர்ஜண்டீனா நாட்டில் உலகின் பணக்கார பலமிக்க 20 நாடுகளின் மாநாடு இன்று வெள்ளி ஆரம்பித்தது. சென்ற ஆண்டு ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நடந்தபோது பலத்த ஆர்பாட்டங்கள் தீ வைப்புக்கள் எல்லாம் நடைபெற்ற நினைவுகள் மறக்க முன்னர் ஆர்ஜண்டீனாவில் கூடியுள்ளனர். உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் தலைவர்கள் செயலில் மாற்றம் வேண்டும். உலக மக்களை ஏழ்மைக்குழிக்குள் தள்ளி வைத்திருக்கும் உங்கள் சுயநல பொருளாதார ஒழுங்கு மாறவேண்டுமென்ற போராட்டங்கள் தலைநகர் புவனஸ் அயரஸ்சில் வெடித்துள்ளன. ஆர்ஜண்டீனா நாடு கடந்த பத்தாண்டு காலத்திற்கு முன்னரே பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுவிட்டது. ஆகவே மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். தமது அதிருப்திகளை காட்ட வீதிக்கு வந்துள்ளனர். இவர்களை அடக்க போலீசார் பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் வந்துள்ள தலைவர்களோ மக்களோ ஆர்பாட்டங்களோ நமக்கு பெரிதல்ல என்று கூறாத குறையாக வந்துள்ளனர்.…

ஜெமினி எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகாவின் பின் ரஜினியின் 2.0

சென்ற நூற்றாண்டில் ஜெமினி எஸ்.எஸ். வாசன் நிகழ்த்திய சந்திரலேகா திரைப்படத்தின் சாதனையை முறியடிக்குமா இயக்குநர் ஷங்கரின் எந்திரன் 2.0. திரைப்படம். இன்று வெளியாகும் எந்திரன் 2.0ம் அன்று வெளியான சந்திரலேகாவும் ஓர் ஒப்பீட்டு பார்வை. இந்திய திரைப்பட வரலாற்றில் இன்றுவரை சாதனைத் திரைப்படமாகவும் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகவும் போற்றப்படுவது ஜெமினி எஸ்.எஸ். வாசன் தயாரிப்பிலும் இயக்கத்திலும் வெளி வந்த சந்திரலேகா திரைப்படம்தான். வசூலை அள்ளிக் கொட்டியது. கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக புதிய புதிய பிரிண்ட் போட்டு திரையிட திரையிட, தலை முறை தலை முறையாக திருப்பித் திருப்பி பார்க்கப்பட்டு சரித்திரம் படைத்த திரைப்படம் சந்திரலேகா. எம்.கே.ராதா, ரி.ஆர்.ராஜகுமாரி, ரஞ்சன் நடிப்பில் வெளியானது. 1948 ஏப்ரல் 9ம் திகதி ரிலீசான இந்தத் திரைப்படம் அக்காலத்தே தமிழகத்தில் மட்டும் 40 திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டது. இந்தி, ஜப்பான் உட்பட…

இந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வின் தார்மீக நியாயங்கள் என்ன..?

கார்த்திகை 27 வரும் மாவீரர் நாள் இந்த ஆண்டும் தாயகம் முதல் உலக நாடுகள் எங்கும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்படுகிறது. வழமையாக தமிழீழ தேசியத் தலைவர் வழங்கும் மாவீரர்நாள் உரையை உலக நாடுகளில் ஒளிபரப்பு செய்து அது தொடர்பான அலசல்கள் நடைபெறும் கருப்பொருளான நிகழ்வு இல்லாமல் போய் இத்தோடு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் போரில் வீரமரணம் அடைந்தோரை அஞ்சலிக்கும் நிகழ்வின் வீரியம் குறைந்ததாகக் கூறிவிட முடியவில்லை. எத்தனையோ தடைகள் இருந்தும், அரசின் சட்ட மூலமான தடை அறிவிப்பு இருந்தும் இலங்கையில் மாவீரர் நிகழ்வு உணர்வுடன் நடைபெறுகிறது. அதுபோல புலிகள் தடை செய்யப்பட்டதாக கூறப்படும் நாடுகளில் எல்லாம் வழமை போலவே நடைபெறுகிறது. தமிழர் மத்தியில் இந்த நாளை அதே எழுச்சியுடன் நடத்த வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. காரணம் இந்த நிமிடம் வரை அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை…

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் இன்று

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 64 வது பிறந்த நாள் இன்று உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது. கடந்த இரவு 12.00 மணிக்கு புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் கேக் வெட்டி அவருடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் முகநூல்களில் நிறைந்து கிடக்கின்றன. இன்றைய முகநூல் பதிவுகளில் எங்கு பார்த்தாலும் அவருடைய பிறந்தநாள் பதிவுகளே அதிக இடம் பிடித்துள்ளதை காண முடிகிறது. தாயகம் உட்பட தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் இப்பிறந்த நாளானது உணர்வுடன் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும். பிரபாகரனின் பிறந்த நாளை தொடர்ந்து 27ம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் அதற்கான ஏற்பாடுகளும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபாகரன் அவர்கள் தெற்காசியாவில் போராட்டக்களத்தை சர்வதேச தரத்தில் முன் நகர்த்தியவராக போற்றப்படுகிறார். இவரை உலகத்தின் சிறந்த படைத்தலைவராக…

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் : அத்தியாயம் 10

கடல் அலை தாலாட்டிக் கொண்டிருக்கும் தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் ஆதிகால அழகு செல்வாவின் மனதை காந்தச்சுழிபோல சுழற்றி ஆகர்சிக்கிறது. " ஆகா.. தமிழே அழகே.. ஆனந்தமே.. பொற்குடத்துக் குங்குமப் பொட்டே.. உன்னைக் காண்பதற்காக எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் மரணக்குளத்தில் மூழ்கி மூழ்கி எழலாமே.." என்று அருகில் நின்ற சுரேசிடம் கேட்கிறான். அதை ஆமோதிக்க அங்கு ஒரு நொடி இடைவெளி இருக்கவில்லை. காரணம் சடாரென காட்சியில் ஒரு யூ ரேண்..! கண்களால் குடிக்க முடியாத கடல் வெள்ளம்.. அந்த வெள்ளக்காட்டிலே கோடியாக்கரையின் பேரலைகள் ஓங்கி அடிக்கின்றன. காற்றில்லாத பெரு வெளியில் பாய்மர கப்பலொன்று வெள்ளி அலைகளை அள்ளி வீசியபடி துள்ளி வருகிறது. அதிலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் இறங்குகிறார். அருகில் சில கடலோடிகள். பழுத்த கொக்கின் சிறகுகள் போன்ற நரை.. கையில் தடி.. அவ்வைப் பிராட்டி போல…

இன்று பிளாக் பிறைடே சிந்திக்க வேண்டிய முக்கிய ஏழு விடயங்கள்

இன்று உலகத்தின் மிகப் பெரிய மலிவு விற்பனைத் திருநாள்களில் ஒன்றான பிளாக் பிறைடே தினமாகும். உலகத்தின் பல நாடுகளில் மலிவு விற்பனை களைகட்டும் திருநாள் இதுவென்று போற்றப்படுகிறது. இன்றைய நாளில் சாதாரண கடைகள் தமது வருட விற்பனையின் உச்சத்தை ஒரே நாளில் எட்டித் தொடும் விற்பனை நாளாகும், அதாவது நம்மூரில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் நடக்கும் வர்த்தகம் போல பரபரப்பான நாள். வருடாந்த உற்பத்திப் பொருட்கள் இந்த வருடத்துடன் பழையதாகி அடுத்த வருடம் புதிய பொருட்கள் வருவதற்கான வெற்றிடத்தையும் இந்த நாள் ஏற்படுத்துகிறது. சிறப்பாக அமேசான், அலிபாபா போன்ற பாரிய இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு இன்று வேட்டைத் திருவிழா என்றே கூறலாம். பிளாக் பிறைடே என்பது ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் வரும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று வரும். அடுத்து வரப்போகும் டிசம்பர் மாத நத்தார் காலத்திற்கான பரிசுப்…

வீரத் தமிழர் முன்னணி ஈழத்தில் ஈகையர் குடும்பங்களுக்கு உதவி

இங்கிலாந்தில் இருக்கும் வீரத்தமிழர் முன்னணியினர் தாயக மக்களுக்காக ஆற்றிவரும் பெரும் தொண்டானது கடந்த சில தினங்களாக தமிழ் மக்களின் கவனத்தை வெகுவாகத் தொட்டுள்ளது. இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஈகையர் குடும்பத்தவர் என்ற சிறப்புப் பெயரை வைத்து போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இவர்களுடைய உதவிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுதந்திரத்திற்காக போராடி தமது இன்னுயிரைக் கொடுத்தவர்களுடைய குடும்பங்களுக்கான உதவிகளை வழங்கும் நிகழ்வை கடந்த சில தினங்களின் முன்னதாக மட்டக்களப்பில் வெற்றிகரமாக முன்னெடுத்தவர்கள், இன்று கிளிநொச்சியில் தமது உதவி வழங்கலை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள். இன்று சுமார் ஆயிரம் வரையான பெற்றோரும் பிள்ளைகளும் நிகழ்வில் பங்கேற்றார்கள். வாழ்வாதாரமாக அமைவதற்கான தென்னம்பிள்ளை கன்றுகள், உடைகள், பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள், உணவு வகையறாக்கள் பொதிகளாக வழங்கப்பட்டன. படிக்கும் பிள்ளைகள் வசதியற்றோருக்கு 5.000 முதல் 10.000 ரூபா வரை தேவை அறிந்து வழங்கப்படுகிறது. அறம் செய் அறக்கட்டளை என்ற…

ஆரம்பித்தது ரியூப் தமிழ் புத்தகச் சந்தை பூபாலசிங்கம் அதிபர் தொடங்கி வைத்தார்

ரியூப் தமிழ் இலங்கைப் பணியகம் ஆரம்பித்துள்ள புத்தக வெளியீட்டு சந்தை கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு நாவலர் வீதியில் உள்ள ரியூப் தமிழ் காரியாலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அத்தருணம் முதலாவது பிரதியை யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தக நிலைய அதிபர் பெற்றுக் கொண்டு அறிவுப் பயணத்தை சம்பிரதாயபூர்வமாக தொடங்கி வைத்தார். ரியூப் தமிழ் சார்பில் ஆர்.ஜே.சிவா நூலை வழங்க ரியூப் தமிழ் புத்தக விற்பனை சந்தை தனது காரங்களை விரித்தது. அதைத் தொடர்ந்து கவிஞர் பாரதி மைந்தன் உட்பட பலர் நூலை வாங்கி ஒரு சினிமா படம் போல கிளாப் அடித்து விற்பனையை தொடங்கினர். பல நிறுவனங்கள் இந்த நூலை வாங்கி இலங்கையில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்க ஆரம்பித்துள்ளன. இது தமிழில் ஏற்பட்டுள்ள ஒரு மறுமலர்ச்சி..! அகில…