தற்கொலைக் தாக்குதல் 8 பேரில் ஒருவர் பெண்.. இன்னொருவர் இங்கிலாந்து

சிறீலங்காவில் தாக்குதலை நடத்திய தற்கொலைக்குண்டுதாரிகள் எட்டுப்பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் பெண் என்பது அதிர்ச்சி..! இன்னொருவர் இங்கிலாந்து அவுஸ்திரேலியா நாடுகளில் படித்தவர்.. அலைகள் 24.04.2019

றொபேட் மூலர் விசாரணைக் கமிஷன் அறிக்கை எழுத்து வடிவத்தில்..

றொபேட் மூலர் விசாரணைக் கமிஷன் அறிக்கை அதிபரை வீழ்த்துமா..? 2016 நவம்பர் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஸ்யாவின் தொடர்பு குறித்த றொபேர்ட் மூலர் விசாரணை கமிஷன் அறிக்கை நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது தெரிந்தது. முதலில் நான்கு பக்க ரெய்லர் விட்ட நீதியமைச்சர் வில்லியம் பார் இப்போது 448 பக்கங்கள் கொண்ட அடுத்த ரெய்லரை வெளியிட்டுள்ளர். இந்த அறிக்கை அமெரிக்க அரசியல் களத்திலும் மக்கள் மன்றத்திலும் ஊடகங்களிலும் இப்போது புயலாக வீச ஆரம்பித்துள்ளது. நீதி அமைச்சுர் வில்லியம் பார் வெளியிட்ட அறிக்கையானது றொபேர்ட் மூலர் விசாரணை கமிஷனின் முழுமையான அறிக்கையல்ல. அதிபரை காப்பாற்ற வசதியான வகையில் சென்சார் செய்யப்பட்ட ஓர் அறிக்கை மட்டுமே. இந்த அறிக்கையில் உள்ள அமெரிக்க அதிபருக்கு வாய்ப்பான பக்கங்கள் எவை ? ஒன்று அமெரிக்க அதிபர், றீஸ்ராட் எனப்படும் விசாரணையை சந்திக்க வேண்டியதில்லை.…

ஈழத் தமிழினம் பலம் குன்றிவிடவில்லை என்பதை காட்டும் வல்வை இந்திர விழா..!

வல்வை முத்துமாரியம்மன் இந்திரவிழா வட மகாணத்தில் ஒரு பெயர் பெற்ற விழாவாக தன்னை நிலை நிறுத்திவிட்டது. இதனுடைய வளர்ச்சி கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில் சீரான நகர்வாக இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக இந்திரவிழா என்ற நிகழ்வில் கண்ட அடிப்படைகள் பல அப்படியே உள்ளன உதாரணம் புகைக்குண்டு விடுதலை கூறலாம். மற்றையது வீதிகள் தோறும் வாழைக்குலைகள் கட்டி, போட்டிக்கோ கட்டி அலங்காரம் செய்யும் பண்பும் மாறாமலே இருக்கிறது. இந்த விழா பழமையை போற்றும் பண்பு நிறைந்தாக இருக்கிறது, அதே வேளை புதுமைகளையும் இணைத்து முன்னேறுவதைக் காண முடிகிறது. முன்னர் நெடியாடு இளைஞர்கள் முன்னெடுத்த இந்த நிகழ்வில் மற்றைய இடங்களில் முக்கியமாக நிறைகுடங்கள் வைத்து வரவேற்கும் பாரம்பரியம் இருந்தது. ஆனால் இப்போதோ அன்று நிறைகுடம் வைத்த ஒவ்வொரு ஒழுங்கையும் தனியான நிகழ்வாக அதை ஜோடனை செய்ய ஆரம்பித்துள்ளன, இந்த…