அலைகள் வாராந்தப் பழமொழிகள் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை

நல்ல நூல்களில் படித்தவற்றின் தேர்வுகள்.. 01. மனதை ஒருமைப்படுத்தி காரியமாற்றுவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். நேர்மைக்கு முதலிடம் கொடுங்கள். மற்றவை எல்லாம் இதற்கு அடுத்தவையே. 02. நாம் தேர்ந்தெடுத்த ஓர் ஆசை மீது மனதை ஒருமைப்படுத்தி குவிக்க வேண்டும். அது நிஜமாக மாறுவதற்கான அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். அதுவரை மனதை அதிலிருந்து அகலவிடக்கூடாது. 03. மனதை குவித்து பணியாற்ற இரண்டு வழிகள் உள்ளன ஒன்று சுய கட்டளை மற்றையது நமது அன்றாட பழக்கவழக்கம். 04. நாம் முதலில் ஒரு பழக்கத்தை சகித்துக் கொள்கிறோம். பிறகு அதன் மீது அனுதாபம் கொள்கிறோம். கடைசியில் அதை கட்டியணைத்துக் கொள்கிறோம். 05. பழக்கம் ஒரு கயிறு போன்றது. தினம் தினம் அதை பின்னுவது நாமே.. ஒரு கட்டத்தில் அதை அறுக்க முடியாமல் அதற்குள் சிறைப்படுவதும் நாமே. 06. பழக்கம் நமது…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 21.04.2018 சனிக்கிழமை

உலகப் புகழ் பெற்ற நூல்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்கள்.. 01. புறச்சூழல்தான் உங்களை உருவாக்குகின்றன. ஆகவே உங்களை நல்ல முறையில் உருவாக்குவதற்குரிய புறச்சூழலை தேர்வு செய்யுங்கள். உங்களை சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் உங்களை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறதா இல்லை உங்கள் உயர்வுக்கு வழி கோலுகிறதா என்று பார்த்து அதில் ஈடுபடுங்கள். 02. நீங்கள் தேர்வு செய்யும் சுற்றுவட்டார மனிதர்கள் உங்கள் கோட்பாடுகள் மீது அனுதாபம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் திட்டமிட்ட குறிக்கோளுடன் தொடர்பு கொண்ட மனிதர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் அவர்களுடன் காலம் கழிப்பதில் பயன் எதுவும் இல்லை. 03. உங்கள் சகாக்களிடம் இருந்து வெளிப்படும் ஆர்வம், தன்னம்பிக்கை போன்ற விடயங்கள் உங்களை வசீகரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்களையே உங்கள் சகாக்களாக தேர்வு செய்வதை ஒரு கொள்கையாக வைத்திருங்கள். 04. நீங்கள் காதால் கேட்கும்…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 31.03.2018 சனிக்கிழமை

இந்த விநாடி நீங்கள் செய்யும் செயலே உங்கள் அடுத்த விநாடி வாழ்வு.. 01. சக்திக்கு இரண்டு முனைகள் இருக்கிறது ஒன்று செக்ஸ்.. இன்னொன்று இறைவன்.. ஒன்று புதிர் மற்றயது புனிதம். எனவேதான் செக்ஸ்சில் இருந்து இறைவனுக்கு செல்வது சுலபம் என்று ஞானிகள் கூறுகிறார்கள். 02. இறைவனை நமக்கு தெரியுமோ தெரியாதோ செக்ஸ்சை நமக்கு நன்றாகத் தெரியும். மனிதனிடமுள்ள மாபெரும் சக்தி எது என்றால் அது செக்ஸ்தான். 03. செக்ஸ் புயலடிக்கும் கடலைப் போன்றது, அதில் மாட்டிக் கொள்வது அபாயமானது. அதிலிருந்து வெளி வருவதும் மிகவும் கடினம். 04. எப்படி மின்சாரத்தால் பல்வேறு கருவிகளை இயக்குகிறோமோ அதுபோல செக்ஸ்சும் ஒரு மின்சாரம்தான். அதை ஒரு விசையாக வைத்து பல்வேறு பணிகளை செய்ய வேண்டும். மின்சாரத்தில் கை வைத்து மரணிக்கக் கூடாதல்லவா..? 05. செக்ஸ்சை காதலாக, அன்பாக, பக்தியாக, லட்சியமாக,…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 18.03.2018 ஞாயிறு

நோயின்றி வாழ, நோயை வெல்ல மறக்கின்ற ஞானத்தை பயிலுங்கள்.. 01. நேயைத் தீர்க்க இரண்டு வழிகள் உள்ளன 01. வைத்தியரிடம் போவது 02. அந்த நோயே நமக்கு இல்லை என்பது போல நடிப்பது. 02. ஒரு நோயால் நாம் பாதிக்கப்படுகின்றபோது அப்படியொரு நோய் நமக்கு இல்லை என்று நடித்தால் அது இல்லாமல் போகும். இதற்கு மறக்கின்ற ஞானம் என்று பெயர். 03. காய்ச்சல் வந்துவிட்டதா அது இல்லவே இல்லை என்று உறுதியாக நம்பினால் அது இல்லாமலே போகும். 04. இதற்கு மன ஒருமை என்று சொல்லுவார்கள், சரியான மன ஒருமை இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. மன ஒருமை என்றால் ஒரு புள்ளியில் மனதை வைப்பது. 05. எலும்புக்காக சண்டை போடும் இரண்டு நாய்களின் முன்னால் போய் ” உஸ் சத்தம் போடாதீர்கள் ” என்றால் அவை நம்மை…