நான் ஏன் பிறந்தேன்..! இன்றைய சிந்தனை 06.03.2021

நான் ஏன் பிறந்தேன்..! இந்தக் கேள்விக்கு வாழ்க்கை எல்லாம் விடை தேடி களைத்ததாக ஞானிகள் சொல்கிறார்கள். சிலர் இதை விளக்க முற்பட்டனர், அதன் மூலம் அது விளக்க முடியாத தத்துவம் என்பதை விளக்கியும் சென்றனர். இந்த ஒற்றைக் கேள்விக்கு விடை கண்டு பிடிக்கவே நீ இந்தப் பூமியில் பிறந்திருக்கிறாய், அதன் பெயர்தான் " வாழ்க்கைத் தேடல்.." வாழ்க்கை என்பது மைதானம் போன்றது, பயிற்சி எடுக்காத ஒருவன் மைதானத்திற்குள் இறங்க முடியாது. பந்து வருகிறது, தடுக்கிறான் ஆடுகிறான், சில நேரம் வெல்கிறான் பல தடவைகள் தோற்கிறான். ஒரு சாதாரண விளையாட்டிற்கே பயிற்சி எடுக்காமல் மைதானத்தில் இறங்க முடியவில்லை என்றால், இந்த வாழ்க்கை என்ற மைதானத்தில் மட்டும் பயற்சி எடுக்காமல் நீ வந்திருக்கிறாய் என்று எப்படிக் கூற முடியும்..? சரியான பயிற்சி இல்லாமல் இந்த பூமிப்பந்தில் இறங்க உன்னை ஒரு…

அலைகள் வாராந்த பழமொழிகள் 01.01.2021

01. நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எங்கே போக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமான விடயம். 02. அடுத்த பத்தாண்டுகளில் நீங்கள் எங்கே இருக்கப்போகிறீர்கள் ? இப்போது தெரியாவிட்டால் எங்கே போவதென்று தெரியாது பேருந்து நிலையத்தில் நின்றவன் கதைதான். 03. நீங்கள் முதலாவது அடியை வைக்க முன் எங்கே போகிறீர்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். 04. எப்போதுமே ஓர் இலக்கு நிர்ணயிக்கப்படும்வரை எதுவுமே நடைபெறுவதில்லை. 05. உயிர்வாழ காற்று எப்படி முக்கியமோ அதுபோல வெற்றிக்கு இலக்கு முக்கியம். 06. வெற்றி பெற்ற யாருமே இலக்கு குருட்டுத்தனமாக வெற்றி பெற்றதில்லை. 07. நீங்கள் செய்யும் காரியம் உங்களை முழுமையாக ஆட்கொள்ளவில்லை என்றால் நீங்கள் எதையும் சாதிக்கும் இடத்தில் இல்லை என்பதே அர்த்தம். 08. வெற்றிக்கு இதய பூர்வமான முயற்சி தேவை. எந்தவொரு வேலையின் மீது உங்களுக்கு…

அலைகள் வாராந்த பழமொழிகள் 03.12.2020

01. உங்கள் வெற்றியை தடுத்து நிறுத்துவது எது தெரியுமா..? நீங்கள் செய்ய விரும்பும் காரியம் உங்கள் திறனுக்கு அப்பாற்பட்டதென நீங்கள் சிந்திக்கும் போதுதான். 02. நாம் ஒரு காரியத்தை செய்ய முன்னரே அதை அடக்கியாழும் சக்திகள் அதைவிட வேகமாக எம் முன்னால் வந்துவிடுகின்றன. 03. முன்னேற அதிர்ஸ்டம் வேண்டும், பணம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்பதெல்லாம் பொய்யான காரணங்கள். 04. என்றோ ஒரு நாள் வாய்ப்பு வரும் அது என் கதவை தட்டுமென்று காத்துக்கிடக்காதே அப்படி எதுவும் வராது, நீ முயற்சிக்காவிட்டால். 05. நீங்கள் செய்ய விரும்பும் ஒன்றை உங்களால் செய்ய முடியாது என்று கருதுகின்ற மக்கள் வெற்றி பெறாத மக்கள். 06. உங்களால் சாதிக்க முடியாது என்று உங்களை நம்ப வைக்கும் மக்களுக்கு எதிராக எப்போதுமே ஒரு தற்பாதுகாப்பை ஏற்படுத்துங்கள். 07. உங்களால் வெற்றி பெற…

அலைகள் வாராந்த பழமொழிகள் 07.08.2020

இம்முறை வியாபாரத்திற்கு தேவையான ப்ராண்டிங் பற்றிய வர்த்தக தொழில் ஆலோசனைகள் வருகின்றன. 01. வர்த்தகத்தில் வெற்றியடைய வேண்டுமா.. கண்டிப்பாக அதற்கு ஒரு ப்ராண்ட் வேண்டும், அதாவது வியாபார சின்னம். அப்போதுதான் நம்மை மற்றவரில் இருந்து வித்தியாசப்படுத்தலாம். 02. வாடிக்கையாளர் பொருட்களை வாங்குகிறார்கள் ஆனால் ப்ராண்ட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவர் பாவிக்கும் ப்ராண்ட் அவர் பெருமையை பறைசாற்றும். 03. வால்மார்ட் என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு அதன் ப்ராண்ட் காரணமாக உலகம் முழுவதும் பெரும் மதிப்புண்டு. அதன் வருமானத்தை பார்த்தால் உலகத்தின் நாலாவது நாடுபோல இருக்கும். வருடாந்த வருமானத்தை பார்த்தால் 157 நாடுகள் அதன் பின்னால்தான். 04. ஐ.போன் என்ற ப்ராண்ட் 2007 ல் வந்து, 120 வருட பழைய கொக்கோ கோலாவையும், 60 வருடங்கள் பழைய மக் டொனால்சையும் முந்தியது அதன் ப்ராண்டால்தான். 05. அமேசன் என்ற வர்த்தக அடையாளத்தின்…

அலைகள் வாராந்த பழமொழிகள் 09.05.2020

01. உங்கள் சிந்தனைதான் உங்களை உருவாக்குகிறது. நீங்கள் உற்சாகமாக உணர்ந்தால் மட்டுமே உங்களால் உற்சாகமாக இருக்க முடியும். 02. உங்கள் உற்சாகம் மற்றவரையும் தொற்றிக்கொள்ளும்.. அப்போதுதான் அவர்கள் உயர்ந்த தரத்தோடு செயற்படுவார். 03. நாம் நம்முடைய வேலையை குறைவாக மதிப்பிட்டால் நம்மோடு பணியாற்றுவோர் அதைவிட தாழ்வாக மதிப்பிடுவார். 04. உங்கள் வேலை குறித்து எப்போதும் நேர்மறையான கருத்தை வெளியிடுங்கள். நான் தகுதி வாய்ந்த ஆளா..? எனது செயல் என் கீழ் வேலை செய்வோருக்கு மகிழ்ச்சி தருமா என்று உங்களை நீங்களே கேளுங்கள். 05. மற்றவருடன் பேசும் முன் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி எண்ணங்களை மனதில் நிறுத்திய பின் பேசுங்கள். உங்கள் உள்ளம் உங்கள் குரலில் தெரியும். 06. பேசுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாக உங்கள் மனதில் ஓடியது என்ன.. உங்களை நீங்களே கேளுங்கள். அது…