வல்வை மகளிர் மகாவித்தியாலயத்திற்கு ஆறு கணினிகள் அன்பளிப்பு : அவுஸ்திரேலியா

வல்வை மகளிர் மகாவித்தியாலயம் இணைய கட்டமைவு கொண்ட நவீன வகுப்பறை ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிந்ததே. புலம் பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் வல்வை மக்களின் ஆதரவுடன் இந்த வகுப்பறையை அமைக்கலாம் என்று சென்ற ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கமைவாக அவுஸ்திரேலியா வல்வை நலன்புரிச் சங்கம் கூடுதல் கவனமெடுத்து தனது உதவிகளை வழங்கியுள்ளது. முதலில் இரண்டு இலட்சம் ரூபா பணமும் இப்போது அவுஸ்திரேலியாவில் வாழும் திரு. ரவீந்திரன் அவர்கள் மகளிருக்கு ஆறு ஆப்பிள் கணினிகளை வழங்கியிருக்கிறார். இதற்கான வைபவம் மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது. திரு. கா. பிறேமதாஸ், ரவிச்சந்திரன் அவுஸ்திரேலியா ஆகியோர் அதிபரிடம் இவைகளை கையளித்தார்கள். அவுஸ்திரேலியா என்.எஸ்.டபிள்யூ பல்கலைக்கழகம் இக்கணினிகளை அன்பளிப்பாக வழங்கியது. திரு. ரவீந்திரன் அங்கு பணியாற்றுவதால் இக்கணினிகளை வல்வை மகளிருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை மிகவும் ஆறுதல்…

ஈழத் தமிழினம் பலம் குன்றிவிடவில்லை என்பதை காட்டும் வல்வை இந்திர விழா..!

வல்வை முத்துமாரியம்மன் இந்திரவிழா வட மகாணத்தில் ஒரு பெயர் பெற்ற விழாவாக தன்னை நிலை நிறுத்திவிட்டது. இதனுடைய வளர்ச்சி கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில் சீரான நகர்வாக இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக இந்திரவிழா என்ற நிகழ்வில் கண்ட அடிப்படைகள் பல அப்படியே உள்ளன உதாரணம் புகைக்குண்டு விடுதலை கூறலாம். மற்றையது வீதிகள் தோறும் வாழைக்குலைகள் கட்டி, போட்டிக்கோ கட்டி அலங்காரம் செய்யும் பண்பும் மாறாமலே இருக்கிறது. இந்த விழா பழமையை போற்றும் பண்பு நிறைந்தாக இருக்கிறது, அதே வேளை புதுமைகளையும் இணைத்து முன்னேறுவதைக் காண முடிகிறது. முன்னர் நெடியாடு இளைஞர்கள் முன்னெடுத்த இந்த நிகழ்வில் மற்றைய இடங்களில் முக்கியமாக நிறைகுடங்கள் வைத்து வரவேற்கும் பாரம்பரியம் இருந்தது. ஆனால் இப்போதோ அன்று நிறைகுடம் வைத்த ஒவ்வொரு ஒழுங்கையும் தனியான நிகழ்வாக அதை ஜோடனை செய்ய ஆரம்பித்துள்ளன, இந்த…