டென்மார்க் கோசன்சில் வாழ்ந்த தமிழ் இளைஞர் பிரான்சில் நடந்த தாக்குதலில் பலி..!

டென்மார்க் கோசன்ஸ் நகரில் வசித்துவந்தவரும், இலங்கையில் யாழ். உடுவில் பகுதியை சேர்ந்தவருமான றொனால்டன் என்பவர் டென்மார்க்கில் இருந்து பிரான்ஸ் சென்ற வேளை தாக்குதலுக்கு இலக்காகி சுமார் ஒரு வாரம் கோமா நிலையில் இருந்து மரணித்துள்ளார். இவருக்கு வயது 33 இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இவர் பாரீஸ் வில்நெப் சொன் ஜேர்ஜ் பகுதியில் வசித்து வந்த தனது பெரிய தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க குடும்பத்தினருடன் பாரீஸ் சென்றிருந்ததார். அத்தருணமே இனம் தெரியாத நபர் அல்லது நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சம்பவம் இரவு நேரம் நடந்துள்ளது. சுமார் 3.00 மணி என்று செய்தி வெளியாகியுள்ளது. தலையில் தாக்குதலுக்குள்ளான இவர் ஒரு வாரம் கோமாவில் இருந்து சிகிச்சை பயனளிக்காது மரணித்துள்ளார். அதன் பின்னர் உடலம் டென்மார்க் கொண்டு வரப்பட்டுள்ளது. இவரை…

கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா நினைவேந்தலும் கௌரவிப்பும் தாயகத்தில்

டென்மார்க்கில் வாழ்ந்த அமரர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் கௌரவிப்பும் தாயகம் நீராவியடி, யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 20.10.2019 அன்று வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. பொன்மணி அறக்கட்டளை சார்பில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது. டென்மார்க்கில் நடைபெற்ற பொன்னண்ணாவின் முதலாவது கவிதை நூல் வெளியீட்டுக்கு தலைமை தாங்கிய திரு. எஸ்.எஸ் குகநாதன் முதல் அவர் கடைசியாக நடாத்திய சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் 10 வது ஆண்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து பேசிய திரு. சுங்கர நாராயணன் வரை பலர் பங்கேற்க இருக்கின்றனர். இத்தகைய ஒரு சிறந்த முயற்சியை கவிஞர் அமரர் வேலணையூர் பொன்னண்ணா குடும்பத்தினர் முன்னெடுப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். அலைகள் 15.10.2019