அரவிந்தசாமியின் எம்.ஜி.ஆர். தோற்றம் வெளியானது

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக வந்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார். விஜய் டைரக்டு செய்கிறார். தலைவி படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். திரைக்கதையை விஜயேந்திர பிரசாத் எழுதி உள்ளார். பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்தி பதிப்புக்கு ‘ஜெயா’ என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கனா ரணாவத் பெயரை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் இந்தியிலும் தலைவி பெயரையே வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க அரவிந்தசாமியை தேர்வு செய்தனர். இவர் ரோஜா, பம்பாய்…

“மாஸ்டர் – 2-ம் போஸ்டர் வெளியீடு”

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் வெளியானது. அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை தொடர்ந்து, விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர் ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்ந்த படத்தில் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன்தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியிலும், சென்னை பூந்தமல்லியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியிலும் நடந்தது. கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது சென்னையில் சிறைச்சாலை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். மாஸ்டர் படம் கொரிய படத்தின் கதை என்று தகவல் வெளியானது. இதனை மறுத்த படக்குழுவினர் கொரிய படத்தின் கதையும் மாஸ்டர் கதையும் வெவ்வேறானவை என்றனர். இதையடுத்து,…

எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த சாமி நடிக்கும் ‘தலைவி’ பட டீசர்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். படத்தில் நடிகர் அரவிந்த சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணி நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர் பிறந்த நாளான இன்று தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக…

எஸ்.ஜே.சூர்யா காதலை நிராகரித்த நடிகை

எஸ்.ஜே.சூர்யாவின் காதலை நடிகை பிரியா பவானி சங்கர் நிராகரித்ததாக தகவல் பரவி வருகிறது. தமிழ் பட உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது இயக்கத்தில் வந்த வாலி, குஷி படங்கள் பெரிய வெற்றி பெற்றன. நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து இயக்கினார். தற்போது பொம்மை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர் மேயாத மான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் பொம்மை படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். பொம்மை படத்தை ராதாமோகன் இயக்கி வருகிறார். சமீபத்தில் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை டுவிட்டரில் படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் பிரியா பவானி…

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு?

யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். அப்போது, இலங்கைக்கு வருமாறு, ரஜினிகாந்துக்கு அவர் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் மூலம், இந்த தகவல் உறுதியாகி உள்ளது. அரசியல் நடவடிக்கைக்காகவே அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவதாகவும், அத்தகைய நடவடிக்கைக்கு விசா வழங்கப்படமாட்டாது என, இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தர்பார் 150 கோடி வசூல்.. உண்மையா.. வழமையான செய்தியா..?

150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தர்பார். தர்பார் உலகம் முழுவதும் 7000 திரைகளில் வெளியிடப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்தின் தர்பார் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நல்ல துவக்கத்தை தந்து உள்ளது. உலக் பாக்ஸ் ஆபீசில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இது உண்மையான செய்தியா என்பது கேள்விக்குறி. ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக காட்ட வேண்டுமானால் மற்றய நடிகர்கள் 100…

வெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா?

வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன. தற்போது ‘சூரரை போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 38-வது படம். கதாநாயகியாக அபர்ணா முரளி வருகிறார். இறுதி சுற்று படத்தை எடுத்து பிரபலமான சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சூர்யா நடிப்பு பிரமாதமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். விமான நிறுவனம் தொடங்க ஆசைப்படும் சூர்யாவும் அதற்காக அவர் படும் கஷ்டங்களும் டிரெய்லரில் இடம்பெற்று உள்ளன. படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வந்தது.…

தனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில்

தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார். தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பட்டாஸ்.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். துரை செந்தில்குமார் டைரக்டு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. படம், பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. படத்தை பற்றி தயாரிப்பாளர் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “இந்த படம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த அடி முறை கலையை கருவாக கொண்டது. இது, அந்த காலத்தில் தமிழர்களின் தற்காப்பு கலையாக இருந்தது. இப்போதும் தென் மாவட்டங்களில் பழக்கத்தில் இருக்கிறது. கதைப்படி, ‘பட்டாஸ்’ கதையின் நாயகன் தனுஷ், அடி முறை கலைகளில் தேர்ந்தவராக இருக்கிறார். இதற்காக தனுஷ் 6 மாதங்கள் பயிற்சி…

80-வது பிறந்த நாள்: பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

80-வது பிறந்த நாளை கொண்டாடிய பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் நேற்று 80-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 80-வது பிறந்த நாள் கேரளாவை சேர்ந்த பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், சினிமா பின்னணி பாடகருமான ஜேசுதாஸ் கடந்த 1940-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி பிறந்தார். இவருக்கு நேற்று 80-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவர் கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தனது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். கேரள பாரம்பரிய உடையில் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்ட அவருக்கு, அங்கு குழுமியிருந்த ஏராளமான ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பினராயி விஜயன் வாழ்த்து பாடகர் ஜேசுதாசின் பிறந்த நாளையொட்டி அவருக்கு…