மீண்டும் ‘ரீமேக்’ கதையில் அஜித்குமார்?

அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்துள்ளது. இந்த படம் அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக வந்தது. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குகிறது. இதில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்துக்கு பிடித்தமான கார்பந்தயம் மற்றும் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. புதிய படத்துக்காக நரைமுடிகளை கருப்பாக்கி இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். உடல் எடையையும் குறைத்துள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு அஜித்குமார் நடிக்க உள்ள 61-வது படம் பற்றிய தகவலும் தற்போது கசிந்துள்ளது. இந்தியில் வெளியாகி தேசிய…

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை

சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் வெளிநாட்டினரை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு விளையாட்டு, அரசியல், சினிமா துறைகளில் உலக புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் உள்ளன. மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் தெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. நிஜத்தில் இருப்பதுபோல் இந்த சிலைகளை வடிவமைத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் மெழுகு சிலைகள் அருகில் நின்று படம் எடுத்து மகிழ்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 20 கலைஞர்கள் 5 மாதங்களாக சிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது பணிகள் நிறைவடைந்து ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அங்கு நிறுவி உள்ளனர். அதை பார்த்தவர்கள் அச்சு அசல் ஸ்ரீதேவி போல…

கதை திருட்டு : ‘சாஹோ’ மீது பிரெஞ்சு இயக்குனர் புகார்

சமீப காலமாக சினிமாவில் கதை திருட்டுக்கள் அதிகம் நடப்பதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன. பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சல்லி தனது கதையை திருடி ‘சாஹோ’ படத்தை எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். இந்த படத்தில் பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர், அருண்விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் 4 நாட்களில் ரூ.350 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த படம் திரைக்கு வந்ததும் ஜெரோம் சல்லி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது” என்று பதிவிட்டார். அதன் அர்த்தம் புரியவில்லை என்று ரசிகர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து மீண்டும் டுவிட்டர் பக்கத்தில், “நான் இயக்கிய…

தென்னிந்திய திரைப்படத்தில் அதிக வசூல் செய்த 4-வது படம்

பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படம் வெளியான நான்கே நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பிரபாஸின் சாஹோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் (ரூ.289) மற்றும் கபாலி (ரூ.286) ஆகிய வசூல் சாதனைகளை நான்கு நாட்களில் முறியடித்து உள்ளது. தென்னிந்தியாவின் அதிக வசூல் செய்த நான்காவது படமாக திகழ்கிறது. சாஹோ முதல் நாள் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ .125 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த திரைப்படம் 2019-ம் ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனர் மட்டுமல்ல, வரலாற்று பிளாக்பஸ்டர் பாகுபலி 2-க்கு பிறகு இரண்டாவது பெரிய ஓப்பனராக மாறியது. பாகுபலி முதல் நாளில் உலகளவில் ரூ.214 கோடியை ஈட்டியுள்ளது. சாஹோவின் இந்தி பதிப்பு நான்கு நாட்களில் வட இந்திய பாக்ஸ் ஆபிசில் ரூ.93.28 கோடி வசூலித்துள்ளது. வாய்மொழியாக இந்தப் படம் குறித்து எதிர்மறையான…

தமிழக பா.ஜ.க. தலைவர் ரஜினிகாந்தா? திடீர் பரபரப்பு

தமிழக பா.ஜ.க. தலைவராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது யாருக்கும் தெரியாத புதிராக உள்ளது. அவரது ரசிகர்களும் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், “மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை மனதார வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித் ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜூனன் போன்றவர்கள்” என்று பாராட்டி பேசியிருந்தார். இதனால் பா.ஜ.க. அரசு மீதான ஆதரவு நிலைப்பாட்டில் ரஜினிகாந்த் வெளிப்படையாக இருப்பது தெரிவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே ரஜினிகாந்த் புது கட்சி தொடங்குவாரா?, அல்லது பா.ஜ.க.வில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்…

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டதால், நடிகை சமந்தாவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்து ஐதராபாத்தில் குடியேறிய சமந்தா திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. தமிழில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் படுக்கை அறையில் ஆபாசமாக நடித்து இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். தற்போது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. நாக சைதன்யா மற்றும் மாமனார் நாகார்ஜுனா, மாமியார் நடிகை அமலா ஆகியோருடன் சமந்தா ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு கடற்கரையிலும் நீச்சல் குளத்திலும் அரைகுறை உடையில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நாகார்ஜுனா தனது 60-வது பிறந்தநாளை ஸ்பெயினில் கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியிலும் கவர்ச்சி உடையில் பங்கேற்றார். இந்த படங்களை பார்த்து இணையதளவாசிகள் கொதிப்படைந்து சமந்தாவை கடுமையாக சாடி வருகிறார்கள்.…

இளையராஜாவுடன் மோதல் தீர்ந்ததா? – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விளக்கம்

பாடல்களுக்கு காப்புரிமை விவகாரத்தில், இளையராஜாவுடன் மோதல் தீர்ந்ததா என்பது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா ஆகிய 3 பேரும் ஐதராபாத்தில் நவம்பர் 3-ந்தேதி நடக்கும் இசை நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பாட உள்ளனர். இதையொட்டி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இளையராஜா தனது பாடல்களை பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தாரே? அவருடன் மோதல் தீர்ந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- “இளையராஜாவுக்கும் எனக்கும் இடைவெளி என்பது ஒருபோதும் இல்லை. அவர் எப்போது அழைத்தாலும் போவதற்கு நான் தயாராகவே இருப்பேன். அவர் அழைத்தார். நான் போனேன். முன்பு மாதிரியே சேர்ந்து பணியாற்றினோம். ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் இடையே சிறு மனஸ்தாபங்கள் வரும். பிறகு சரியாகி விடும். மீண்டும் இணைந்து விடுவார்கள். அதுமாதிரிதான்…

‘ராட்சசி’ படத்துக்கு மலேசியக் கல்வி அமைச்சர் புகழாரம்

ஜோதிகா நடித்த 'ராட்சசி' படத்துக்கு மலேசியக் கல்வி அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாகப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஜூலை 5-ம் தேதி இந்தப் படம் வெளியானது. தற்போது இந்தப் படத்தைப் பார்த்த மலேசியா கல்வி அமைச்சர், வெகுவாக பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் பெரிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 2 மாதங்களுக்கு முன்பாக இந்த படம் வெளியானது. நேற்று இரவு இந்த படத்தை அதிகாரிகளோடு பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி விரிவான கட்டுரை எழுதுவேன். கண்டிப்பாக, இது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இதன்…

விருது கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருது

விருது கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருது என தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார். நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகருள் ஒருவர். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தனது நகைச்சுவை மூலமாக திரைப்படங்களில் கூறும் நடிகர் விவேக் சினிமா மட்டுமல்லாது சமூக பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்களை, மற்றும் பல்லாயிரம் பிற மரங்களையும் நட்ட, 108 வயது கொண்ட பத்மஶ்ரீ ஆலமர திம்மக்காவுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நடிகர் விவேக் இவ்விருதினை வழங்கினார். விருதினை வழங்கிய நடிகர் விவேக் நெகிழ்ச்சியான அத்தருணத்தில் திம்மக்காவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இது தொடர்பாக நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,…