பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்?

தபாங் 3’ படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கும் அடுத்த படத்திலும் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சிங் இஸ் பிளிங்’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தி மொழியில் வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது. அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய பிரபுதேவா, இயக்கத்துக்கு ஓய்வு கொடுத்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 10 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது மறுபடியும் இயக்கத்தைக் கையில் எடுத்துள்ள பிரபுதேவா, சல்மான் கான் நடிப்பில் ‘தபாங் 3’ படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் உருவாகிவரும் இந்தப் படத்தில்,…

தர்பார் திரைப்படம் பொங்கல் அன்று வெளியீடு

தர்பார் திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார். ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் 'தர்பார்' படம் உருவாகி வருகிறது. இதன் 3வது கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் படத்தை அடுத்து ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்திலேயே தர்பார் என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துதான் படக்குழு ஷூட்டிங்கை தொடங்கியது. இதனை அடுத்து ஷூட்டிங்கில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்து கொண்டே இருந்தன. இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில்…

நடிகை தமன்னாவின் அழகு ரகசியம்

நடிகை தமன்னா தனது அழகு ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார். நடிகை தமன்னா ஆக்‌ஷன், பெட்ரோமாக்ஸ் என்று 2 தமிழ் படங்களிலும் ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்ற தெலுங்கு படத்திலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது:- “என்னை பாக்கிறவர்கள் அழகு குறையவே இல்லை என்கிறார்கள். அது என் குடும்பத்தில் இருந்து வந்தது. நடிப்பு தொழிலை நேசிப்பதால் வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்ய முடிகிறது. 10 ஆண்டுகளில் எவ்வளவோ முதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். அதனால்தான் நல்ல கதைகளை தேர்வு செய்ய முடிகிறது. கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடம்பை மாற்றிக்கொள்வேன். நடிகையாக ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக கடத்துகிறேன். சினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் போதாது. நடிக்க தெரிந்தால்தான் நிலைக்க முடியும். மற்றவர்களுடன் என்னை ஒப்பிடுவது பிடிக்காது. எனது பாதையில் போகிறேன். வெற்றி, தோல்வி நம் கையில் இல்லை.…

இளையராஜா இசையில் விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம்

இளையராஜா இசையில் விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம் தயாராக உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் வெளியானது. கணியன் பூங்குன்றன் என்ற போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் வந்தார். கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்து இருந்தார். பாக்யராஜ், பிரசன்னா, வினய், வின்சென்ட் அசோகன், ஆண்ட்ரியா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலும் பார்த்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விஷால்-மிஷ்கின் கூட்டணியில் தயாராக உள்ளது என்று ஏற்கனவே தகவல் கசிந்தது. இந்த நிலையில் விஷால் சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் முடிந்து 15-வது ஆண்டு தொடங்கி இருப்பதையொட்டி துப்பறிவாளன்-2 படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் விஷால் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவை…

புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்?

புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இது அஜித்குமாரின் 60-வது படமாக தயாராகிறது. இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். முந்தைய படங்களில் இருந்த இளநரை தலைமுடியையும் கருப்பாக்கி இருக்கிறார். அதிரடி சண்டை கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. படத்தில் கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் இடம் பெறும் என்று போனிகபூர் கூறியுள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. இந்த நிலையில் படத்தில் அஜித்குமார் தோற்றம் என்ற அறிவிப்போடு போலீஸ் அதிகாரி சீருடையில் அவர் பைக்கில் செல்வது போன்ற…

இது ஒரு பொன்மாலைப் பொழுது ராஜசேகர் காலமானார்

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக 81ல் வெளிவந்த 'பாலைவனச் சோலை'யைத் தந்த இயக்குநர் ராஜசேகர் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 59. இயக்குநர் பாரதிராஜாவால் 'நிழல்கள்' திரைப்படத்தின்மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஜசேகர். இப்படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார். கவிஞர் வைரமுதத்துவின் ரசிகர்களால் கொண்டாடப்படும் முதல் தமிழ் திரையிசைப் பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட திரைப்படத்தில் ராஜசேகர் நடித்திருப்பார். இதுவே இவருக்கு ஒரு அடையாளமானது. பின்னர் திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டியவர் இயக்குநர் ராபர்ட்டுடன் இணைந்து 'பாலைவன ரோஜக்கள்' திரைப்படத்தை 1981ல் இயக்கினார். தமிழில் 'சின்னப் பூவே மெல்லப் பேசு' (1987), 'பறவைகள் பலவிதம்' (1988), உள்ளிட்ட சிறந்த வெற்றிப் படங்களை இவர் ராபர்ட்டுடன் இணைந்து இயக்கினார். சினிமாவில் மீண்டும் நடிகராக வலம் வந்த ராஜசேகர் சின்னத்திரை ரசிகர்களின் மனதிலும்…

12 பாடல்களுடன் உருவாகும் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளார். 'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். த்ரிஷாவையும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்தவொரு விவரத்தையுமே படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தப் படத்துக்காக 12 பாடல்களை எழுதவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு…

பாஜகவுக்கு தலைமை நிராகரித்த ரஜினிகாந்த்.

பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுக்கப்பட்ட அழைப்பை ரஜினி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வேகமெடுக்கிறது நடிகர் ரஜினியின் புதுக்கட்சி பணிகள்... தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு மவுனத்தையே பரிசாக தந்தார்.…