வாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 02

குடும்பத்தின் மகிழ்வும் பிள்ளை வளர்ப்பும் பிள்ளை வளர்ப்பு பயிர் வளர்ப்பது போல ஒரு விஞ்ஞான பூர்வமான செயல். அது இன்னொரு குடும்பத்தை பார்த்து காப்பி பண்ணுவதல்ல. ஒரு குடும்பத்தின் வெற்றியும், மகிழ்வும் சரியான பிள்ளை வளர்ப்பில்தான் தங்கியிருக்கிறது. பிள்ளைகள் வளரவளர கூடவே அவர்கள் மீதான எதிர்பார்ப்புக்களும் வளர்ந்து செல்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்களும் சமுதாய அன்பும் அருவமான இரண்டு வேறுவேறான கயிறுகள் போல பின்னிக்கிடக்கின்றன. உதாரணமாக அதிக புள்ளிகளை எடுத்த பிள்ளை, பெற்றோருக்கு உதவும் பிள்ளை என்ற தலைப்புக்களில் பிள்ளைகள் போற்றப்படுவதை நாம் காண்கிறோம். நாமும் அந்ததைகய பிள்ளைகள் மீது ஏன் அன்பு வைக்கிறோம்.. ஏன்.. அதிலொரு பிள்ளை மற்றவருக்கு உதவும் பிள்ளையாக இருக்கிறது. இன்னொரு பிள்ளை படித்து நல்ல பெயர் எடுத்துக் கொடுக்கிறது. இதனால் அவர்கள் மீது மற்றவருக்கு அன்பு வருகிறது. ஆகவேதான் பிள்ளைகள் வளரும் பருவத்தில்…

வாழக் கற்றுக்கொள் சுவீடன் புத்தகம் இன்று புதிய சிந்தனைத் தொடர் ஆரம்பம்

இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் இளம் தம்பதியர் பலருக்கு வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக கொண்டு செல்வதென்பது கடினமாகவே இருக்கிறது. அவசர உலகில் நடக்கும் விரைவு மணங்களும் அதைவிட விரைவான மணமுறிவுகளுக்கும் என்ன காரணம்..? புரிந்துணர்வின்மை குடும்ப வாழ்வை ஆரம்பத்திலேயே குலைத்து, பெரும் உளவியல் சிக்கல்களை உருவாக்கியும் வருகின்றது. இந்த நிலையில் இருந்து விடுபட தமிழில் எத்தனையோ அறிவுரை நூல்கள் இருந்தாலும் அவற்றை மேலை நாட்டு வாழ்வில் பயன்படுத்த முடியவில்லை. காரணம் இங்கு வாழ்க்கைச் சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. நாம் இந்த இறுக்கமான சூழலை தளர்த்தி, வாழ்வை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு நல்ல டேனிஸ் மொழி நூல் எதிர்பாராதவிதமாக இன்று காலை என் கையில் கிடைத்தது. அதன் பெயர் வாழக் கற்றுக்கொள் என்பதாகும். சுவீடன் நாட்டில் ஓர் இளம் தம்பதியர்க்கு ஏற்பட்ட பிரச்சனையை, அவர்கள் சுயமாக போராடி…

இவரு பெரிய ஆளா வருவாரு பாருங்க

இவரு பெரிய ஆளா வருவாரு பாருங்க’ என்று இயக்குநர் பாரதிராஜாவிடம் பாக்யராஜ் குறித்து அப்போதே கமல் தெரிவித்தார். இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பாக்யராஜ் பேசியதாவது: '' 16 வயதினிலே படம் பண்ணும் போது எங்க டைரக்டர் சார் (பாரதிராஜா) கதையைக் கொடுத்து படிக்கச் சொன்னார். ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. என்னய்யா, எப்படி இருக்குன்னு கேட்டார். நல்லாருக்கு சார்னு சொன்னேன். அப்புறமா, மெதுவா… ‘சார், சப்பாணின்னு கேரக்டர் வைச்சிருக்கீங்க. அதனால அந்தக் கேரக்டர் பேசுறதுல மாடுலேஷன் மாத்தினா நல்லாருக்கும்’னு சொன்னேன். பேசிக்காட்டுன்னு சொன்னார். ‘ம…யி…லு..’ன்னு கொஞ்சம் ராகம் போட்டு பேசிக் காட்டினேன். டைரக்டர் சாருக்கு பிடிச்சுப் போச்சு. அப்புறம் கமல் சார் நடிக்க வந்தப்போ, இதை அவர்கிட்ட சொன்னப்ப, பேசிக்காட்டுங்கன்னு சொன்னார். பேசினேன். இன்னும் ரெண்டு சீன் பேசுங்கன்னு சொன்னார். ரெண்டு…

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் : அத்தியாயம் 10

கடல் அலை தாலாட்டிக் கொண்டிருக்கும் தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் ஆதிகால அழகு செல்வாவின் மனதை காந்தச்சுழிபோல சுழற்றி ஆகர்சிக்கிறது. " ஆகா.. தமிழே அழகே.. ஆனந்தமே.. பொற்குடத்துக் குங்குமப் பொட்டே.. உன்னைக் காண்பதற்காக எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் மரணக்குளத்தில் மூழ்கி மூழ்கி எழலாமே.." என்று அருகில் நின்ற சுரேசிடம் கேட்கிறான். அதை ஆமோதிக்க அங்கு ஒரு நொடி இடைவெளி இருக்கவில்லை. காரணம் சடாரென காட்சியில் ஒரு யூ ரேண்..! கண்களால் குடிக்க முடியாத கடல் வெள்ளம்.. அந்த வெள்ளக்காட்டிலே கோடியாக்கரையின் பேரலைகள் ஓங்கி அடிக்கின்றன. காற்றில்லாத பெரு வெளியில் பாய்மர கப்பலொன்று வெள்ளி அலைகளை அள்ளி வீசியபடி துள்ளி வருகிறது. அதிலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் இறங்குகிறார். அருகில் சில கடலோடிகள். பழுத்த கொக்கின் சிறகுகள் போன்ற நரை.. கையில் தடி.. அவ்வைப் பிராட்டி போல…

சிந்தனைச் சிகரம் செல்வா பாண்டியர் புதிய தொடர் அத்தியாயம் 09

கதையை தொடங்க முன்னர் ஒரு சிறிய முன்னோட்ட காட்சி.. வெள்ளித்திரையில் " பட்பட் படீ " ரென சில பிரளயகால வெடிகள்.. அவை என்ன இடி முழக்கத்தின் எச்சங்களா..? காலத்தின் கடிகாரம் வெடிபட இடித்து வெகு பின்னோக்கி அறுந்த துண்டுகளாக ஓடுகிறது.. நாள், மணி, நிமிடம், விநாடி எல்லாம் "சரக் சரக் " கென சுழன்று நிற்கின்றன. வேறென்ன பார்க்கத்தானே வேண்டும்... இமைகளை வெட்டத்தான் முடியுமா..? 1989 மாசி 24ம் திகதி அதிகாலை..! ம்... காலம் ஏன் இந்த இடத்தில் நிற்க வேண்டும்..? செல்வாவும், சுரேசும் கூர்ந்து பார்க்கிறார்கள். காலைப்பனி நுளம்பு வலைபோல மூடிக்கிடக்கிறது. ஆட்காட்டி குருவிக்கும் அங்கு ஏதோ வேலை. குணுக்குகளாக பனி தொங்கிய இரண்டு ரோஜாக்களின் இதழ்கள் குருவியின் சத்தத்தில் ஒடிந்து பொல பொலவென கொட்டுண்டு சிலோமேஷனில் வெள்ளிக் காசுகளாக பொழிகின்றன.. சுண்டிய நாணயங்களாக…