ஒருவர் தன்னைத் தானே வேட்பாளர் எனக் கூறி வருகின்றார்

நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா வலியுறுத்தினார். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இலங்கை பொதுஜன பெரமுனையின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருப்பது அவர்களுடைய சரியான முடிவு என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படும் வேட்பாளர் நாட்டின் பாதுகாப்புக்கு முன்னரிமை அளிப்பவராக இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் ஐ.தே.கவின் தலைவர் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், இருந்தபோதும் பொருத்தமற்ற ஒருவர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மனசாட்சி இடமளிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இராஜகிரியவில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பீல்ட் மார்ஷல்…

எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சப்போவதில்லை சஜித்

தாம் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சப்போவதில்லை என்றும் நாட்டு மக்களுக்காகத் தமது தந்தையைப்போல் நடுவீதியில் உயிரைவிடவும் தயார் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று (12) பதுளையில் தெரிவித்தார். எதற்கும் அஞ்சாததால்தான் மக்களின் தோள்மீதேறி கூட்ட மேடைக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் நவம்பர் மாதம் தாம் போக வேண்டிய இடத்திற்குப் போவதாகவும் கூறினார். அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நேற்று பதுளையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார். "நான் எதற்கும் பயந்தவன் அல்லன். என்னுடனும், எமது கூட்டணியுடனும் இணையுங்கள் நாட்டை வெற்றியடையச் செய்யுங்கள் என்றார். மக்கள் எமக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பது சுகபோகம் அனுபவிக்க அல்ல. நாட்டு மக்களை பலப்படுத்துவதற்கேயாகும்" என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்த நேற்றைய…