பிரிகேடியர் பிரியங்கவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பு

ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி 'கழுத்து அறுப்பது போன்ற' சைகை காட்டியமை தொடர்பில் லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த வழக்கில் பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அந்நாட்டின் பொது ஒழுங்குகள் சட்டத்தின் 4 A பிரிவின் கீழ் அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அவருக்கு 2,400 ஸ்ரேலிங் பவுண் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 04 ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டகார்களை நோக்கி 'கழுத்து அறுப்பது போன்ற" சைகை காட்டி அச்சுறுத்தியதாக பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல்…

அரசியல் யாப்பின் மூலம் தீர்வையடைவதே நோக்கம்

சுயமரியாதையுடனும் தன்மானத்துடனும் தமிழர்கள் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்கக் கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வை அரசியல் யாப்பொன்றின் மூலமாக அடைவதே எமது நோக்கமாகும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தினார். இலங்கை, மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டேபில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இச் சந்திப்பில் சம்மந்தன் மேலும் கூறியதாவது, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள்…

பெண் மருத்துவர் கொலை – சந்தேகநபர்கள் சுட்டுக் கொலை

ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 நான்கு சந்தேகநபர்களும் இன்று அதிகாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே குறித்த நான்கு சந்தேகநபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெலுங்கானா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட பாலத்திற்கு அடியில் கொலையை எவ்வாறு செய்ததாக சந்தேகநபர்கள் நடித்து காட்டிய போது தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நான்கு சந்தேகநபர்களும் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா செய்திகள் தெரிவிக்கின்றன.